Published:Updated:

பள்ளி கேன்டீன்களில் நொறுக்குத் தீனிகளுக்கு வருகிறது தடை!

அதிக கொழுப்பு, காரம், இனிப்பு, உப்பு உள்ள துரித உணவுகளை பள்ளி கேன்டீன்களில் தடை செய்ய வேண்டும்.

துரித உணவு
துரித உணவு

ள்ளிக்கூடங்களில் உள்ள கேன்டீன்கள் மற்றும் பள்ளியைச் சுற்றி 50 மீட்டர் தொலைவில் உள்ள கடைகளில் விற்கப்படும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நொறுக்குத் தீனிகளைத் தடை செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

துரித உணவு
துரித உணவு

இது குறித்து இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுத்துறை (FSSAI) வரைவறிக்கை ஒன்றை தயார் செய்துள்ளது. இதில் பல விதிமுறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

உடல் பருமன், சர்க்கரை நோய், இதய நோய்கள்... நொறுக்குத்தீனி பிரியர்களுக்கு ஓர் அலெர்ட்!

இந்த வரைவறிக்கையில், ``பள்ளிகளில் உள்ள உணவகங்களில் மாணவர்களின் நலன் கருதி ஆரோக்கியமான உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்பட வேண்டும். ஆனால், இன்று பெரும்பாலும் உடல் நலனுக்குக் கேடு விளைவிக்கும் துரித உணவுகள்தான் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. எனவே அதிக கொழுப்பு, காரம், இனிப்பு, உப்பு உள்ள துரித உணவுகளை பள்ளி கேன்டீன்களில் தடை செய்ய வேண்டும்.

துரித உணவு
துரித உணவு

மேலும், பள்ளியைச் சுற்றி 50 மீட்டர் தொலைவில் உள்ள கடைகளிலும் இந்த உணவுகள் தடை செய்யப்பட வேண்டும். இந்த உணவுகள் குறித்த விளம்பரங்களும், பதாகைகளும் பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படக் கூடாது. பள்ளி உணவகங்களில் உணவு தயாரிப்பவர்களும் சில விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கேன்டீன்களைக் கண்காணிக்க வேண்டும்.

மாணவர்களுக்கு கதை புத்தகம் வாங்க ஆண்டுக்கு 40,000 ரூபாய்  செலவிடும் அரசுப் பள்ளி ஆசிரியை! 

மேலும், பள்ளி நிர்வாகம் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுத்துறையால் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுவினருடன் இணைந்து கேன்டீனில் என்ன உணவுகள் தயாரிக்கப்படுகின்றன என்பது குறித்து அந்தந்த மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுத் துறைக்கு விவரங்களை அனுப்ப வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

துரித உணவு
துரித உணவு

இந்த வரைவு அறிக்கை குறித்த பொதுமக்களின் கருத்துகளை உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு வாரியம் கோரியுள்ளது. இது குறித்த ஆலோசனைகளை டிசம்பர் மாதத்துக்குள் FSSAI-ன் இணையதளத்தில் சென்று தெரிவிக்கலாம். அதன்பின்பு இறுதி செய்யப்படும் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.