Published:Updated:

ஆவின் டிலைட்: 3 மாதங்கள் வரை கெடாத பால்; எப்படி தெரியுமா?! #AavinMilk

``ஆவின் டிலைட் பாலை பொறுத்தவரை, இது `அல்ட்ரா ஹை ட்ரீட்மென்ட்' முறையில் சுத்திகரிக்கப்படும் பால். இந்த முறையில் பாலை 120 டிகிரி டெம்ப்ரேச்சரில், 20 விநாடிகள் காய்ச்சுகிறோம். இதை ஆற வைத்து நான்கு லேயர் கொண்ட பாக்கெட்டில் பேக்கிங் செய்கிறோம்.’’

ஆவின் டிலைட்: 3 மாதங்கள் வரை கெடாத பால்; எப்படி தெரியுமா?! #AavinMilk

``ஆவின் டிலைட் பாலை பொறுத்தவரை, இது `அல்ட்ரா ஹை ட்ரீட்மென்ட்' முறையில் சுத்திகரிக்கப்படும் பால். இந்த முறையில் பாலை 120 டிகிரி டெம்ப்ரேச்சரில், 20 விநாடிகள் காய்ச்சுகிறோம். இதை ஆற வைத்து நான்கு லேயர் கொண்ட பாக்கெட்டில் பேக்கிங் செய்கிறோம்.’’

Published:Updated:

வின் நிறுவனம், 90 நாள்கள்வரை கெடாத `ஆவின் டிலைட்’ பாலை அறிமுகப்படுத்தியிருக்கிறது. `பசும்பாலான இது கெடாமல் இருப்பதற்காக, எந்தவித ரசாயனமும் சேர்க்கவில்லை;  இதை ஃபிரிட்ஜில் வைக்க தேவையில்லை; நவீன தொழில்நுட்ப முறையில் இந்த பாலை பேக்கிங் செய்திருக்கிறோம்' என ஆவின் அறிவித்துள்ளது. பாலின் இயல்பே சீக்கிரம் கெட்டுப்போவதுதான். 90 நாள்கள் வரை எப்படிக் கெடாமல் இருக்கும் என்று ஆவின் பொது மேலாளர் (காரைக்குடி) சாம்பமூர்த்தியிடம் கேட்டோம். 

ஆவின்
ஆவின்

``கறந்த பாலை அப்படியே வைத்தால் கெட்டுத்தான் போகும். அதுதான் பாலின் தன்மை. ஆனால், பாலை பதப்படுத்தும் முறையைப் பொறுத்து அதன் ஆயுள், அதாவது அதன் கெட்டுப்போகும் தன்மை தள்ளிப்போடப்படும். மாட்டின் மடியிலிருந்து கறக்கப்படும்போது பால் கிட்டத்தட்ட 30 டிகிரி டெம்ப்ரேச்சரில் இருக்கும். அதை 73 டிகிரியில் காய்ச்சி 5 டிகிரி வரைக்கும் குளிர வைத்தால், அந்தப் பால் 3 நாள்கள் வரை கெடாது. அதுவும் ஃபிரிட்ஜில் வைத்தால் மட்டுமே.

இதுவே ஆவின் டிலைட் பாலை பொறுத்தவரை, இது `அல்ட்ரா  ஹை ட்ரீட்மென்ட்' முறையில் சுத்திகரிக்கப்படும் பால். இந்த முறையில் பாலை 120 டிகிரி டெம்ப்ரேச்சரில், 20 விநாடிகள் காய்ச்சுகிறோம். இதை ஆற வைத்து நான்கு லேயர்  கொண்ட பாக்கெட்டில் பேக்கிங் செய்கிறோம். வெளியிலியிருந்து எந்தக் கிருமியும் இந்த பாக்கெட்டுக்குள் நுழைய முடியாது. இந்தப் பாலை ஃபிரிட்ஜில் வைக்க வேண்டுமென்கிற அவசியமும் இல்லை. பாக்கெட்டை ஓப்பன் செய்த பிறகு, முழுமையாகப்  பயன்படுத்தி விட வேண்டும். பாதியைப் பயன்படுத்தி மீதியை வைத்தால் கெட்டுவிடும். மற்றபடி, இதில் எந்த பிரிசர்வேட்டிவ்வும் பயன்படுத்தவில்லை. உலகம் முழுக்கவே இந்த ஆர்கானிக்  முறையில்தான் பாலை பதப்படுத்துகிறார்கள்'' என்று விளக்கம் அளித்தார் சாம்பமூர்த்தி.