Published:Updated:

அஸ்கா சர்க்கரை, செயற்கை வண்ணங்கள் கலப்பு; 50,640 கிலோ வெல்லம் பறிமுதல்! - அதிரடிகாட்டிய அதிகாரிகள்

ஆய்வுசெய்யும் அதிகாரிகள்

நாமக்கல் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அருண் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பிலிக்கல்பாளையத்திலுள்ள விவசாயிகள் வெல்லம், சர்க்கரை விற்பனை ஏல சந்தையில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அஸ்கா சர்க்கரை, செயற்கை வண்ணங்கள் கலப்பு; 50,640 கிலோ வெல்லம் பறிமுதல்! - அதிரடிகாட்டிய அதிகாரிகள்

நாமக்கல் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அருண் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பிலிக்கல்பாளையத்திலுள்ள விவசாயிகள் வெல்லம், சர்க்கரை விற்பனை ஏல சந்தையில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

Published:Updated:
ஆய்வுசெய்யும் அதிகாரிகள்

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகாவில் உள்ள பிலிக்கல்பாளையம், ஜேடர்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை, பரமத்திவேலூர், பாண்டமங்கலம், செங்கப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் கரும்பு பயிர் செய்யப்படுகிறது. இந்தப் பகுதிகளில் விளையும் கரும்பை வெல்ல ஆலை உரிமையாளர்கள் வாங்கி வந்து உருண்டை வெல்லம், அச்சு வெல்லம், நாட்டு சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர்.

ஆய்வுசெய்யும் அதிகாரிகள்
ஆய்வுசெய்யும் அதிகாரிகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்படித் தயார் செய்யப்படும் வெல்லத்தை 30 கிலோகொண்ட சிப்பங்களாக (மூட்டைகளாக) கட்டி பிலிக்கல்பாளையத்திலுள்ள விவசாயிகள் வெல்லம், சர்க்கரை விற்பனை ஏல சந்தைக்கு புதன் மற்றும் சனிக்கிழமைகளில் கொண்டுவருகின்றனர். அந்தச் சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரும் வியாபாரிகள் வெல்லத்தை ஏலம் எடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பிவைக்கின்றனர். இந்த நிலையில், இந்தச் சந்தையில் விற்கப்படும் வெல்லங்களில் கலப்படம் செய்யப்படுவதாகத் தொடர் புகார் வந்திருக்கிறது.

ஆய்வுசெய்யும் அதிகாரிகள்
ஆய்வுசெய்யும் அதிகாரிகள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதனால், நாமக்கல் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அருண் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் முருகன், கிருஷ்ணமூர்த்தி, செல்வகுமார் உள்ளிட்டோர் பிலிக்கல்பாளையத்திலுள்ள விவசாயிகள் வெல்லம், சர்க்கரை விற்பனை ஏல சந்தையில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, வெல்ல ஏல சந்தைக்கு விற்பனைக்காக கொண்டுவரப்பட்டு இருப்பு வைக்கப்பட்டிருந்த 1,42,740 கிலோ உருண்டை, அச்சு வெல்லங்களை சோதனை செய்தனர். சோதனையில் நிறம், அஸ்கா சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்பட்ட உருண்டை, அச்சு வெல்லங்களை சந்தேகத்தின் அடிப்படையில் சுமார் 50, 640 கிலோவைப் பறிமுதல் செய்துள்ளனர். அதில் கலப்படம் இருப்பதால், அந்த வெல்லத்தை சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

ஆய்வுசெய்யும் அதிகாரிகள்
ஆய்வுசெய்யும் அதிகாரிகள்

இது குறித்து, மாவட்ட உணவு பாதுகாப்பு பிரிவு நியமன அலுவலர் டாக்டர் அருண் கூறுகையில், ``வெல்லம், சர்க்கரை விற்பனையாளர் சந்தையிலுள்ள 10 வெல்லமண்டி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட வெல்லங்களில் கலப்படம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டால், உணவு பாதுகாப்பு மற்றும் தரம் சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் தொடர்ந்து கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்படும். உருண்டை வெல்லம், அச்சு வெல்லங்களில் அஸ்கா சர்க்கரை மற்றும் செயற்கை வண்ணங்கள் கலந்தால், உணவு மாதிரி எடுக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கை விடுத்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism