Published:Updated:

ஃபுட் புரோ 2022: உணவுத்தொழிலில் ஜெயிக்க... இந்தக் கண்காட்சியை தவற விடாதீங்க!

''ஃபுட் புரோ -2022' என்பது, உணவு பதப்படுத்துதல், பேக்கேஜிங், குளிர் சேமிப்பு, கிடங்கு, உணவு, விவசாயம் மற்றும் தளவாடங்கள் தொடர்புடைய தயாரிப்புகளில் ஈடுபட்டிருக்கும் அனைத்து நிறுவனங்களுக்குமான நவீன தொழில்நுட்பத்தை காட்சிப்படுத்தும் ஒரு முக்கியமான தளமாகும்.''

ஃபுட் புரோ 2022: உணவுத்தொழிலில் ஜெயிக்க... இந்தக் கண்காட்சியை தவற விடாதீங்க!

''ஃபுட் புரோ -2022' என்பது, உணவு பதப்படுத்துதல், பேக்கேஜிங், குளிர் சேமிப்பு, கிடங்கு, உணவு, விவசாயம் மற்றும் தளவாடங்கள் தொடர்புடைய தயாரிப்புகளில் ஈடுபட்டிருக்கும் அனைத்து நிறுவனங்களுக்குமான நவீன தொழில்நுட்பத்தை காட்சிப்படுத்தும் ஒரு முக்கியமான தளமாகும்.''

Published:Updated:

உணவுப் பொருள்களைப் பதப்படுத்துதல், பேக்கிங் செய்தல் மற்றும் உணவு தொழில்நுட்பம் தொடர்பாக இந்திய தொழில் கூட்டமைப்பு (ICC) இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஃபுட் புரோ என்ற கண்காட்சியை நடத்தி வருகிறது. இதை, உணவு பதப்படுத்துதல் பற்றிய ஒரு விரிவான கண்காட்சி மற்றும் மாநாடு என்று சொல்லலாம். இதன் 14-வது கண்காட்சி நாளை முதல் 7-ம் தேதி வரை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு பசுமை விகடன் ஊடக ஆதரவு வழங்கியுள்ளது.

இந்த மாநாட்டில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பதோடு, தங்கள் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தவும் உள்ளனர். தவிர, துறைசார் மாநாடுகள், வர்த்தக நிறுவனங்களின் கருத்தரங்குகள், அவற்றின் தயாரிப்பு வெளியீடுகள், அதன் விளக்கக்காட்சிகளும் இடம் பெற உள்ளன. 30-க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் உணவுப் பொருள்களை எப்படிப் பதப்படுத்துவது, எப்படி குளிர் சேமிப்பு செய்வது மற்றும் பாரம்பரிய உணவுகள் குறித்துப் பேசவிருக்கிறார்கள். துவக்க விழா அன்று 'உணவுப் பதப்படுத்தும் துறையில் மதிப்பைத் திறத்தல்’ குறித்த வெள்ளை அறிக்கையை சிஐஐ வெளியிட உள்ளது.

Foodpro
Foodpro

உணவுப் பொருள்களைப் பதப்படுத்துகிற தொழில்களுக்கான வாய்ப்புகள், உணவுப்பொருள்களைப் பதப்படுத்தும் தொழில்நுட்பத்தின் நவீன கண்டுபிடிப்புகள், அதற்குத் தேவையான தொழில்நுட்பங்கள் போன்றவை தொடர்பான விளக்கங்களும், இவை தொடர்பாக எழுகின்ற பிரச்னைகளுக்கான தீர்வுகளும் இந்தக் காண்காட்சியில் உங்களுக்குக் கிடைத்து விடும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

'ஃபுட் புரோ 2022' தலைவரும், புளூ ஸ்டார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான பி. தியாகராஜன் பேசுகையில், "சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதத்தைப் பொறுத்தவரை உணவு பதப்படுத்தும் தொழில் சுமார் 11.18% வளர்ச்சியடைந்துள்ளது. உணவுப் பொருள்களில் உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தில் ரூ.10,900 கோடி செலவினத் திட்டம் வரும் ஆண்டுகளில் இந்தத் தொழிலின் வளர்ச்சியை அதிகரிக்கும். நடக்கவிருக்கிற இந்தக் கண்காட்சியில் புதிதாக ஃபுட் எக்ஸ்போ மற்றும் ஃபுட் பேக்கேஜிங் எக்ஸ்போ ஆகிய 2 பிரிவுகள் அறிமுகம் செய்யப்படவிருக்கிறது.

தவிர, உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு வகையான பேக்கிங், பேக்கிங் தொடர்பான பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கப்பட உள்ளன. இவை தவிர, இந்தக் கண்காட்சியில் முதல் முறையாக வாழை மற்றும் சிறுதானியங்களுக்கென்று இரு சிறப்புப் பிரிவுகளும் இடம் பெற உள்ளன" என்று தெரிவித்தவர், ''உணவுப்பொருள்கள் வீணாவதுதான் பூமிக்கு ஆபத்தான விஷயம். தென்னிந்தியாவில் இளம் தலைமுறையினர் பலரும் விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அப்பா விவசாயியாக இருந்தால், அடுத்த தலைமுறை உணவு பதப்படுத்தும் தொழிலிலும் ஈடுபட ஆரம்பிக்கிறார்கள். இது மிக மிக ஆரோக்கியமான ஒன்று. காய்கறிகளும் பழங்களும் அறுவடை காலத்தில் விலைக்குறைவாக இருக்கும். அவை கெட்டுப் போகாமல், அவற்றுக்கேற்ற சீதோஷ்ண நிலையில் பாதுகாப்பதற்கு பதப்படுத்துதல் மற்றும் குளிர் சேமிப்பு அத்தியாவசியம். தவிர, அந்தந்த மாநிலங்களுக்கென்று சில உணவுப்பொருள்கள் இருக்கின்றன. உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமென்றால், தமிழகத்தின் பிரண்டை ஊறுகாய். இந்த ஊறுகாயைத் தயாரிப்பவர்கள், கண்காட்சிக்கு வரும் ஊறுகாய் நிறுவனங்களுடன் கைகோர்க்கலாம்'' என்று அழைப்புவிடுத்தார்.

பி. தியாகராஜன்
பி. தியாகராஜன்

சிஐஐ தென் மண்டல தலைவரும், பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் இணை நிறுவனர் மற்றும் இணை நிர்வாக இயக்குனருமான சுசித்ரா கே. எல்லா பேசுகையில், "ஃபுட் புரோ 2022 என்பது, உணவு பதப்படுத்துதல், பேக்கேஜிங், குளிர் சேமிப்பு, கிடங்கு, உணவு, விவசாயம் மற்றும் தளவாடங்கள் தொடர்புடைய தயாரிப்புகளில் ஈடுபட்டிருக்கும் அனைத்து நிறுவனங்களுக்குமான நவீன தொழில்நுட்பத்தை காட்சிப்படுத்தும் ஒரு முக்கியமான தளமாகும். தமிழ்நாடு வேளாண்மைத் துறையின் சிறப்பு அரங்கு மூலம் வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் துறைகளில் தமிழகத்தின் தலைமைத்துவம் பற்றியும் இந்த கண்காட்சியில் தெரிந்துகொள்ள முடியும்'' என்கிறார்.

இந்த கண்காட்சியை வேளாண் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்து உரையாற்ற, அவரைத் தொடர்ந்து உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி மற்றும் ஊரக தொழில்துறை அமைச்சர் டி.எம். அன்பரசன் ஆகியோர் சிறப்புரையாற்றவுள்ளனர். தவிர, தமிழக வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் செயலர் சி. சமயமூர்த்தி, சிஐஐ தமிழ்நாடு மாநில தலைவர் ம.சத்யகம் ஆர்யா ஆகியோர் துவக்க உரையாற்றவுள்ளனர்.

சுசித்ரா எல்லா
சுசித்ரா எல்லா

பதப்படுத்தப்பட்ட மற்றும் பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளின் முன்னணி உற்பத்தியாளர்கள், தொழில்நுட்ப தீர்வு வழங்குநர்கள், அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்ப வல்லுநர்கள், செயலாக்க உபகரண உற்பத்தியாளர்கள், தயாரிப்பாளர்கள், உணவுப் பாதுகாப்புத் தீர்வுகள் வழங்குபவர்கள், ஏற்றுமதியாளர்கள், சில்லறை வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி, தொழில்துறை தலைவர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள், பார்வையாளர்கள் என சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த 3 நாள் கண்காட்சியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.