Published:Updated:

`இனி ஹோட்டல்கள், சர்வீஸ் சார்ஜுக்கு கஸ்டமரை கட்டாயப்படுத்தக் கூடாது’ - மத்திய அமைச்சகம் அறிவிப்பு

ஹோட்டல்

``ஹோட்டல் அல்லது ரெஸ்டாரன்ட் ஆகியவற்றில் எந்தவொரு பெயரிலும் சேவைக் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது. நுகர்வோரையும் சேவைக் கட்டணத்தைச் செலுத்துமாறு கட்டாயப்படுத்தக் கூடாது." - மத்திய அமைச்சகம்.

உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம், நுகர்வோர் உரிமை மீறல்களைத் தடுக்கும்விதமாக, ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரன்ட்டுகளில் சேவைக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக, புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

மத்திய அமைச்சகத்தின், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சி.சி.பி.ஏ) வெளியிட்டிருக்கும் இந்த அறிக்கையில், ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரன்ட்டுகள் பின்பற்றவேண்டிய வழிகாட்டுதல்கள் என்னென்ன என்று கூறப்பட்டிருக்கிறது. அதன்படி, `ஹோட்டல் அல்லது ரெஸ்டாரன்ட்டுகள் எந்தவொரு பெயரிலும் சேவைக் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது.

ஹோட்டல்
ஹோட்டல்

நுகர்வோரையும் சேவைக் கட்டணத்தைச் செலுத்துமாறு கட்டாயப்படுத்தக் கூடாது. சேவைக் கட்டணம் செலுத்துவதென்பது, நுகர்வோரின் விருப்பம் என்பதை அவர்களுக்குத் தெளிவாகக் கூற வேண்டும். மேலும் உணவுக் கட்டணத்துடன், ஜி.எஸ்.டி வரியும் விதிப்பதன் மூலம், சேவைக் கட்டணம் வசூலிக்கப்படக் கூடாது" என வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டிருக்கிறது.

இருப்பினும் எங்கேனும் சேவைக் கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால், தேசிய நுகர்வோர் ஹெல்ப்லைன் எண்ணான 1915 என்ற எண்ணைத் தொடர்புகொண்டும், மின்னஞ்சல் மூலமும் புகாரளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!