Published:Updated:

`காலாவதி சாக்லேட்டுகள், பேக்கரி பொருள்கள்!' - அதிர்ச்சியில் உறைந்த ஊட்டி உணவுத்துறை அதிகாரிகள்

உணவு தரக்கட்டுப்பாடு அதிகாரிகள்
உணவு தரக்கட்டுப்பாடு அதிகாரிகள்

ஊரடங்கு மெல்ல தளர்த்தப்பட்டுவரும் நிலையில், கடைகள் திறக்கப்பட்டுவருகிறது. காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனையைக் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளது.

சுற்றுலா நகரமான நீலகிரிக்கு, ஆண்டுக்கு சுமார் 40 லட்சம் பயணிகள் வந்துசெல்கின்றனர். குறிப்பாக, கோடைகாலமான ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை பல மடங்கு உயரும்.

சாக்லேட்ஸ்
சாக்லேட்ஸ்

இயற்கை அழகைக் கண்டு ரசித்தவிட்டு திரும்பும் மக்கள், நீலகிரி தைலம், ஊட்டி வர்க்கி, ஹோம் மேட் சாக்லேட் உள்ளிட்டவற்றை அதிக அளவில் வாங்கிச்செல்வது வழக்கம். இந்த ஆண்டும் சுற்றுலாப் பயணிகளின் வரவை எதிர்பார்த்து பெருமளவு முதலீடு செய்து மேற்குறிப்பிட்டவற்றை அதிக அளவு உற்பத்திசெய்து காத்திருந்தனர், வணிகர்கள்.

இந்த நிலையில், கொரோனா ஸைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டு, கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.

உணவு தரக் கட்டுப்பாடு சோதனை
உணவு தரக் கட்டுப்பாடு சோதனை

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, தற்போது மெல்ல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு கடைகள் திறக்கப்படுகின்றன.

இதை சாதகமாக்கிக்கொண்ட‌ சிலர், காலாவதியான தின்பண்டங்களைக் கடைகளில் விற்பனை செய்வது மற்றும் வேறு பாக்கெட்டுகளில் மாற்றி அடைத்து வாகனங்கள் மூலம் மலை கிராமங்களுக்குக் கொண்டுசென்று விற்பனை செய்வதாகப் புகார்கள் எழுந்தன.

உணவு தரக் கட்டுப்பாடு சோதனை
உணவு தரக் கட்டுப்பாடு சோதனை

இதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின் பேரில், உணவு தரக் கட்டுப்பாடு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர். இதில், காலாவதியான தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டு பொருள்களைப் பறிமுதல் செய்து அழித்துவருகின்றனர். மேலும் அபராதங்களையும் விதித்துவருகின்றனர்.

`4 ரகங்கள்; 5,000 மலர்த் தொட்டிகள்!’ - ஊட்டி பூங்காவில் மலர்களால் வடிவமைக்கப்பட்ட கொரோனா வைரஸ்

இதுகுறித்து உணவு தரக் கட்டுப்பாடு அதிகாரிகள் கூறுகையில், "ஊட்டி நகரில் உள்ள 15 பேக்கரிகளில் ஆய்வு மேற்கொண்டு, காலாவதியான 80 கிலோ மதிப்புள்ள‌ திண்பண்டங்களைப் பறிமுதல் செய்தோம். தற்போது, காலாவதியாகி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 45 கிலோ சாக்லேட்டுகளைப் பறிமுதல் செய்தோம். காலாவதியான பொருள் விற்பனையைத் தடுக்க கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

உணவு தரக்கட்டுப்பாடு
உணவு தரக்கட்டுப்பாடு

அனைத்துப் பொருள்களிலும் தயாரிப்பு தேதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரொட்டி, கேக் போன்ற பொருள்களில்கூட தேதி குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி விற்பனை செய்வோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு