Published:Updated:

`இட்லி இப்படித்தான் இருக்கும்.. இஷ்டம்னா சாப்பிடு..!’ -ஊட்டியைப் பதறவைக்கும் `அம்மா உணவகம்’

அம்மா உணவக இட்லி
அம்மா உணவக இட்லி

`ஊட்டி பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்மா உணவகத்தில் மக்கள் வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றே வேக வைக்காத இட்லியை வழங்குகின்றனர்' எனக் கொதிக்கின்றனர் பொதுமக்கள்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் 2015-ம் ஆண்டு மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் ஏழை எளிய மக்களின் பசியாற்றுவதற்கு `அம்மா உணவகம்' என்ற பெயரில் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட்டன.

அம்மா உணவகம்
அம்மா உணவகம்

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் மற்றும் நெல்லியாளம் ஆகிய 4 நகராட்சிகளிலும் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டன.

ஊட்டி நகரில் அரசு தலைமை மருத்துவமனை, மத்திய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இரண்டு மற்ற நகராட்சிகளில் தலா ஒன்று என மொத்தம் 5 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

அம்மா உணவக இட்லி
அம்மா உணவக இட்லி

காலையில் இட்லி சாம்பார், மதியம் தயிர் சாப்பாடு, எலுமிச்சை சாப்பாடு, கலவை சோறு ஆகியவை வழங்கப்படுகின்றன. ரூ.1 முதல் 5 ரூபாய் வரை‌யில் உணவுகள் கிடைப்பதால் ஏழை உழைப்பாளர்கள் மற்றும் நகரங்களில் வறிய நிலையில் உள்ள மக்கள் உணவருந்திச் செல்கின்றனர்.

கண்டுகொள்ளப்படாத அம்மா உணவகங்கள்... அ.தி.மு.க அரசுக்கு அக்கறையில்லையா?

இந்தநிலையில், அம்மா உணவகங்களில் சமீபகாலமாக உணவு முறையாகவும் தரமாகவும் வழங்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

அம்மா உணவகத்தில் வழங்கப்பட்ட உணவு
அம்மா உணவகத்தில் வழங்கப்பட்ட உணவு

`ஊட்டி பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்மா உணவகத்தில் சரியாக வேகவைக்காமலும் சுகாதாரமற்ற முறையிலும் உணவு வழங்குகின்றனர். கேள்விகேட்டால் தரக்குறைவாகத் திட்டுகின்றனர்’ என்கிறார் கூடலூர் நுகர்வோர் விழிப்புணர்வு செயற்பாட்டாளர் சிவ சுப்ரமணியம்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர், ``அம்மா உணவகங்களின் தரம் நாளுக்குநாள் குறைந்து கொண்டே போகிறது. நீலகிரியில் இன்னும் மோசமான நிலையில் உள்ளன. ஊட்டி பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்மா உணவகத்தில் மக்கள் வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றே இட்லியை வேக வைக்காமல் வழங்குகின்றனர். இதனால் வேகாத இட்லியை உண்ண முடியாமல் குப்பைத் தொட்டியில் கொட்டிவிட்டுச் செல்கின்றனர். மேலும், உணவருந்த வருபவர்களை இங்கிருப்பவர்கள் தரக்குறைவாகப் பேசுகின்றனர். இட்லியின் தரம் குறித்துப் புகார் எழுப்பினால், இப்படித்தான் இருக்கும்.. இஷ்டம்னா சாப்பிடு இல்லன்னா போ.. என தரக்குறைவாக திட்டுகின்றனர்‌" என்றார் கொதிப்புடன்.

குப்பைத் தொட்டியில் இட்லி
குப்பைத் தொட்டியில் இட்லி

இதுதொடர்பாக ஊட்டி நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது ``ஆய்வு மேற்கொண்டு குறைபாடுகளைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" என்கின்றனர்.

பின் செல்ல