அதிகரித்து வரும் உடல் பருமனைக் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுப் பண்டங்களில் அனை சாப்பிடுவதால் கிடைக்கும் சத்துகள் குறித்த விவரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அதை கவரின் முன்பக்கத்திலேயே குறிப்பிடப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு. இந்த நடவடிக்கை உணவு தரக் கட்டுப்பாட்டு வாரியமான FSSAI, உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சகம் ஆகியவற்றால் நெறிமுறைப்படுத்தப்படும் எனத் தெரிகிறது.

இந்த புதிய உத்தரவின்படி, வழக்கமாக கவரின் பின்புறம் குறிப்பிடப்படும் உணவில் சேர்க்கப்பட்டுள்ள உப்பு, சர்க்கரை, கொழுப்பின் அளவு ஆகியவை இனி பாக்கெட்டின் முன்புறமே இடம் பெற்றுவிடும். இதுதவிர IIM அஹமதாபாத்தில் நடத்தப்படும் ஆய்வின்படி ஒவ்வொரு உணவுப் பொருளிலும் அதிலுள்ள உடல் நலத்திற்கு நன்மை விளைவிக்கும் பொருட்களின் அளவு சார்ந்து Health star ரேட்டிங் வழங்கும் திட்டம் ஒன்றையும் வைத்துள்ளது FSSAI.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சமீபத்திய ஆய்வுகளின்படி இந்தியாவில் 135 மில்லியன் மக்கள் உடல் பருமனோடு இருக்கிறார்கள். இதன் பரவல் அளவு 40%. மேலும் 2030-ம் ஆண்டின் படி உலக அளவில் உடல் பருமனால் பாதிக்கப்படும் எண்ணிக்கையில் 27.8% பேர் இந்தியாவில் மட்டும் இருப்பார்கள் என இன்னொரு ஆய்வு கூறுகிறது.

இந்த அறிவிப்புடன் வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் காடுகள் குறித்தான விழிப்புணர்வை அதிகப்படுத்த உணவு பாக்கெட்டுகளில் ‘eco-mark’ சின்னம் அச்சிடப்பட்ட இருக்கிறது. இவை தவிர மற்றுமொரு முக்கிய நடவடிக்கையும் மத்திய அரசால் மேற்கொள்ளப்படவிருக்கிறது. அதாவது சுகாதாரத்துறை அமைச்சகத்தின் மேற்பார்வையின் கீழ், நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ‘telemedicine’-க்கான வசதிகள் ஏற்படுத்தப்பட இருக்கின்றன. இதன் மூலம் நோயாளிகள் மருத்துவர்களை இணையத்தின் மூலமாக தொடர்புகொண்டு சிகிச்சை பெறலாம்.