Published:Updated:

`பரோட்டாவுக்கு 18%, ரொட்டி 5%..!’ - கொரோனா காலத்திலும் ட்ரெண்ட் அடித்த ஜிஎஸ்டி விவகாரம்

பரோட்டா
பரோட்டா

பதப்படுத்தாத உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது. ஆனால், பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு அதன் தன்மைக்கேற்ப 5%, 12% அல்லது 18% பெறப்படுகிறது.

அரசாங்கம், ஜிஎஸ்டி சட்டத்தின்கீழ் ரொட்டியைவிட பரோட்டாவிற்கு அதிக வரி சுமத்தியிருப்பது சமூக வலைதளங்களில் மக்களை கோபத்திற்கு உள்ளாக்கியது. பெங்களூரைச் சார்ந்த ஐ.டி ஃபிரஷ் ஃபூட்ஸ் என்னும் நிறுவன உணவு தயாரிப்புகளான இட்லி, பரோட்டா, ரொட்டி, போன்றவற்றை உடனே சாப்பிடுவதற்கேற்ற முறையில் தயாரித்து வழங்கிவருகிறது. இவற்றில், பரோட்டாவிற்கு 18% ஜிஎஸ்டி-யும், அதே வகை உணவான ரொட்டிக்கு 5% ஜிஎஸ்டி-யும் சுமத்தப்படுகிறது.

இதை எதிர்த்து, இந்நிறுவனம் ஜிஎஸ்டி தொடர்பான வழக்குகளை தீர்க்கும் சிறப்பு நீதிமன்றத்தின் கர்நாடகா அமர்வில் வழக்கு தொடர்ந்தது. பரோட்டாவும் 5% வரி பெறும் உணவுகள் கொண்ட அத்தியாயம் 1905 ஐ சேர்ந்ததுதான் என அந்நிறுவனம் வாதித்தது.

நீதிமன்றமோ, பரோட்டா அத்தியாயம் 1905-ன் கீழ் வாராதென்றும், அதேபோன்ற உணவுகளான ரொட்டி, காக்ரா, சப்பாத்தி போன்ற உணவுகள் அப்படியே சாப்பிடுவதற்கேற்றது. ஆனால், பரோட்டா ஒருமுறை சுடவைத்து சாப்பிடப்படுவதால், அது அத்தியாயம் 2106-ன் கீழ் 18% வரி சுமத்தப்பட வேண்டுமென்றும் கூறியது.

GST
GST

பதப்படுத்தாத உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது. ஆனால், பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு அதன் தன்மைக்கேற்ப 5%, 12% அல்லது 18% பெறப்படுகிறது.

இந்தத் தீர்ப்பு வெளிவந்ததிலிருந்து 18% ஜிஎஸ்டி, HandsOfPorotta போன்ற ஹாஷ்டாக்குகள், ட்விட்டரில் டிரெண்ட் ஆகிவருகிறது. இதைப் பற்றி ட்விட்டரில் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா, " நம் நாடு பல இன்னல்களைச் சந்திக்கும் இவ்வேளையில், பரோட்டாவைப் பற்றிய நமது கவலை என்னை பிரமிக்க வைக்கிறது. இதன் விளைவாக, கூடியசீக்கிரம் எந்த வகைப்படுத்தலுக்குள்ளும் அடங்காத 'பரோட்டிஸ்' எனும் புதிய உணவு வகையொன்று வரலாம்", என்றார்.

பொருளாதார வல்லுநர் ரத்தின் ராய்,"இது, பொதுவான ஒன்றே. நான் 1990-ல் யு.கே-வில் இருந்தபோதும், 2000 -ல் நியூயார்க்கில் இருந்தபோதும் சுடவைத்த சான்விட்சிற்கு மதிப்பு கூட்டு வரி போடப்பட்டது. ஆனால், அது ஆறிப்போன சான்விட்சிற்கு இல்லை. அங்கே தற்போதைய நிலைபற்றி தெரியவில்லை" என்று ட்வீட் செய்திருந்தார்.

பரோட்டா
பரோட்டா

செயல்திட்ட அதிகாரியான சதானந்த் கூறுகையில்," உலகத்தின் பார்வையின் ஜிஎஸ்டி-யை வரையறுக்கும் அம்சமே அதன் எளிமைதான். ஆனால், இந்தியர்களின் உணவு தயாரிப்புகளால் அது பெரும் சிக்கலாகிவிட்டது" என்றார்.

சிலரின் பார்வையில் இது காலாசார பாகுபாடாகவும் தெரிகிறது. ரொட்டி வட இந்திய உணவுவென்றும், பரோட்டா தென் இந்திய உணவென்பதால் அதிக வரி வசூலிக்கப்படுவதாகவும் கூறுகின்றனர். கேரளம் போன்ற சில மாநிலங்களில், பரோட்டா மக்களால் மிகவும் விரும்பப்படும் உணவு. இது, வெறும் உணவென்பதைத் தாண்டி அவர்களது உணர்வாகவும் மாறிவிட்டது. அதனால்தான் கொரோனாவுக்கு மத்தியிலும் ட்ரெண்ட் அடிக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு