Published:Updated:

ரேஷன் கடைகளில் கூகுள் பே, பேடிஎம் வசதி; சமையல் காஸ் விநியோகிக்கவும் ஏற்பாடு!

அமைச்சர் ஐ.பெரியசாமி

தேர்ந்தெடுக்கப்பட்ட சில நியாயவிலைக் கடைகளில் IOC-ன் 5 கிலோ, 3 கிலோ சமையல் காஸ் சிலிண்டர்கள் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படவுள்ளன. கூகுள் பே, பேடிஎம் போன்ற UPI வசதி மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படும். பிறகு, படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படும்.

ரேஷன் கடைகளில் கூகுள் பே, பேடிஎம் வசதி; சமையல் காஸ் விநியோகிக்கவும் ஏற்பாடு!

தேர்ந்தெடுக்கப்பட்ட சில நியாயவிலைக் கடைகளில் IOC-ன் 5 கிலோ, 3 கிலோ சமையல் காஸ் சிலிண்டர்கள் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படவுள்ளன. கூகுள் பே, பேடிஎம் போன்ற UPI வசதி மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படும். பிறகு, படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படும்.

Published:Updated:
அமைச்சர் ஐ.பெரியசாமி

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட காலத்திலும் கூட ரேஷன் கடைகள் மூலம் தான் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், பெரும்பாலான ரேஷன் கடைகள் வாடகைக் கட்டடங்களிலும், கழிப்பறை உள்ளிட்ட வசதியின்றியும், உணவுப் பொருள்களை பாதுகாக்க முடியாத நிலையிலும் பெரும் நெருக்கடியில் இயங்கி வருவதாக கூட்டுறவு ஊழியர்கள் வலியுறுத்தி வந்தனர்.

ரேஷன் கடை
ரேஷன் கடை

இந்நிலையில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ரேஷன் கடைகளை மேம்படுத்துவதற்கான பல்வேறு ஏற்பாடுகளை செய்யவுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் கூட்டுறவுத்துறை மூலம் 33,377 ரேஷன் கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்மூலம் 2,24,05,357 குடும்ப அட்டைகளுக்கு பொருள்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. வாடகைக் கட்டடங்களில் இயங்கும் 6,907 கடைகளுக்கு புதிய சொந்தக் கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதன்படி ஆண்டுக்கு 300 கட்டடங்கள் வீதம் கட்ட திட்டமிட்டு 862 கடைகளுக்கு நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 243 கடைகள் கட்டடப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 500-க்கு குறைவான குடும்ப அட்டைகள் உள்ள கடைகளுக்கு 440 சதுர அடிப் பரப்பிலும், 500-க்கும் அதிகமான அட்டைகள் கொண்ட கடைகளுக்கு 550 சதுர அடிப் பரப்பிலும் கட்டடங்கள் கட்டப்படவுள்ளன. ரேஸன் கடைகளில் பெரும்பாலானோர் பெண்களாக இருப்பதால் புதிதகாக கட்டப்படும் கடைகள் கழிப்பறை வசதியுடன் கட்டப்படும். கடைகளுக்கு அருகே காலியிடங்கள் இருந்தால் உணவுப் பொருள்கள் வைக்கும் கிடங்குகள் கட்ட ஏற்பாடு செய்யப்படும்.

இலவச ரேஷன்
இலவச ரேஷன்

அனைத்து ரேஷன் கடைகளுக்கு தரக்கட்டுப்பாடு தொடர்பான ISO 9000 தரச்சான்றிதழ், செக்யூரிட்டி இன் சப்ளை செயின் மேனேஜ்மென்ட் அண்ட் ஸ்டோரேஜ் ISO 28000 தரச்சான்றிதழ், உணவுப் பொருள்கள் இருப்பு வைப்பதற்குத் தேவையான FFSAI சான்றிதழும் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 கடைகளை மாதிரி ரேஷன் கடைகளாக மாற்றப்படவுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட சில நியாயவிலைக் கடைகளில் IOC-ன் 5 கிலோ, 3 கிலோ சமையல் காஸ் சிலிண்டர்கள் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படவுள்ளன.

UPI
UPI

இதேபோல கூகுள் பே, பேடிஎம் போன்ற UPI வசதி மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படும். பிறகு படிப்படியாக அனைத்துக் கடைகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருள்கள் எவர்சில்வர் கொள்கலன்களில் வைத்து விநியோகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.