Published:Updated:

ஹோட்டலில் சாப்பிடுபவர்கள் ரசீதை கவனிக்காமல் இருக்காதீர்கள்: சேவை வரி வசூலிக்க ஹோட்டலுக்கு தடை!

ஹோட்டல்

முன்பெல்லாம் மக்களே விருப்பப்பட்டு டிப்ஸ் கொடுக்கும் வழக்கம் உண்டு. இந்த டிப்ஸ் கொடுக்கும் தொகை கணிசமாக உயர்ந்து கொண்டே வந்தது. விருப்பப்பட்டு கொடுக்கும் தொகையை கட்டாயமாக்கிய போது தான் எதிர்ப்புகள் கிளம்பியது. இந்த பணம் யாருக்கு செல்கிறது என்பதும் நுகர்வோருக்கு தெரியாது.

ஹோட்டலில் சாப்பிடுபவர்கள் ரசீதை கவனிக்காமல் இருக்காதீர்கள்: சேவை வரி வசூலிக்க ஹோட்டலுக்கு தடை!

முன்பெல்லாம் மக்களே விருப்பப்பட்டு டிப்ஸ் கொடுக்கும் வழக்கம் உண்டு. இந்த டிப்ஸ் கொடுக்கும் தொகை கணிசமாக உயர்ந்து கொண்டே வந்தது. விருப்பப்பட்டு கொடுக்கும் தொகையை கட்டாயமாக்கிய போது தான் எதிர்ப்புகள் கிளம்பியது. இந்த பணம் யாருக்கு செல்கிறது என்பதும் நுகர்வோருக்கு தெரியாது.

Published:Updated:
ஹோட்டல்

வீடுகளில் பெரும்பாலும் சாப்பிட்டாலும், வாரத்தின் இறுதியிலோ அல்லது ட்ரீட் வைக்கவோ சிலர் ஹோட்டலுக்கு செல்வதுண்டு. இதுவே வெளி ஊர்களில் தங்கி வேலை செய்பவர்களுக்கு தினமும் ஹோட்டலில் தான் சாப்பாடு. அவ்வாறு ஹோட்டலில் சாப்பிட்டு வீட்டுக்கு வந்து கட்டண ரசீதை பார்த்தால், சாப்பிட்ட சாப்பாட்டுக்கான கட்டணத்தோடு, ஜி.எஸ். டி, சேவை கட்டணமும் இணைக்கப்பட்டு இருக்கும். இது தெரியாமல் பலர் பணத்தை கட்டி விட்டு வருவார்கள். ஒரு சிலர் நான் ஏன் இவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என சண்டையிடுவதும் உண்டு.

ஹோட்டல்
ஹோட்டல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்நிலையில் இனிமேல் ஹோட்டல்களில் சேவை கட்டணம் வசூலிக்க கூடாது என தடை விதித்துள்ளது, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம். இது தொடர்பாக வெளியிடப்பட்ட வழிகாட்டுதலில், ஹோட்டல் மற்றும் உணவகங்களில் சாப்பிடும் மக்களிடம் உணவுக்கான கட்டணத்தோடு சேர்த்தோ அல்லது வேறு பெயர்களிலோ சேவை கட்டணத்தை இணைத்து வசூலிக்கக்கூடாது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதுமட்டுமில்லாமல், விருப்பத்தின் பேரில் வழங்கப்படும் சேவை வரியை கண்டிப்பாக செலுத்தியே ஆக வேண்டும் என கட்டாயப்படுத்தவும் கூடாது.

இந்த தடையை மீறி நுகர்வோரிடம் சேவை கட்டணம் வசூலிக்கப்படும் பட்சத்தில், கட்டண ரசீதில் இருந்து அந்த தொகையை நீக்கும் படி சொல்ல நுகர்வோருக்கு உரிமை உண்டு.

Tax (Representational Image)
Tax (Representational Image)

இது குறித்து சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்‌ஷன் குரூப் அமைப்பின் நுகர்வோர் பாதுகாப்பு பிரிவு இயக்குநர் எஸ்.சரோஜாவிடம் பேசினோம். அவர் பேசுகையில், “சேவை கட்டணம் என்பது தொடர்ந்து சில வருடங்களாக பல இடங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முன்பெல்லாம் மக்களே விருப்பப்பட்டு டிப்ஸ் கொடுக்கும் வழக்கம் உண்டு. இந்த டிப்ஸ் கொடுக்கும் தொகை கணிசமாக உயர்ந்து கொண்டே வந்தது.

அதன் பிறகு நிறைய உணவகங்களில் இந்த கட்டணம் கட்டாயமாக்கப் பட்டது. நுகர்வோரிடம் கேட்காமலே கட்டணத்தில் 5 சதவிகிதம் 10 சதவிகிதம் என ஹோட்டல் நிர்வாகமே தொகையை இணைக்க ஆரம்பித்தது. விருப்பப்பட்டு கொடுக்கும் தொகையை கட்டாயமாக்கிய போது தான் எதிர்ப்புகள் கிளம்பியது. இந்த பணம் யாருக்கு செல்கிறது என்பதும் நுகர்வோருக்கு தெரியாது.

எஸ்.சரோஜா
எஸ்.சரோஜா

இது குறித்து முன்பே புகார்கள் தெரிவிக்கப்பட்ட பொழுது, 2016- 17 காலகட்டத்திலேயே மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சகம் சேவை வரி குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அதில், கட்டாயப்படுத்தி நுகர்வோரிடம் சேவை வரி வாங்கக் கூடாது. மக்கள் விருப்பப்பட்டால் கொடுக்கலாம். மக்களுக்கு விருப்பமில்லை எனில் கொடுக்காமலும் இருக்கலாம் என அறிவித்தது.

மக்களில் பெரும்பாலானோர் கட்டண ரசீதை கவனிப்பதில்லை. இந்நிலையில் தொடர்ந்து ஹோட்டல்கள் சேவை வரியை வசூலிப்பதால், தற்போது இது குறித்து மக்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

consumer court
consumer court

ஒரு வேளை ஹோட்டல்களில் சேவை வரி விதிக்கப்பட்டால், மக்கள் அதை நீக்கச் சொல்லி சொல்லலாம். நீக்க மறுக்கும் பட்சத்தில் தேசிய நுகர்வோர் உதவி எண் 1915 - ஐ அழைத்து புகார் தெரிவிக்கலாம்.

முறையற்ற வணிக முறையை செய்வதாக, உரிய கட்டண ரசீதை கொடுத்து நுகர்வோர் நீதிமன்றத்தில், இது குறித்து வழக்கும் பதிவு செய்யலாம்.

ஆன்லினிலும் புகார் தெரிவிக்கும் வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது, இது தான் தற்போது வெளியிடப் பட்ட மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.