Published:Updated:

திருப்பத்தூர் பிரியாணி விழா விவகாரம் - ஆட்சியரிடம் விளக்கம் கேட்டு எஸ்.சி., எஸ்.டி கமிஷன் நோட்டீஸ்

மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா

மாட்டிறைச்சி பிரியாணி புறக்கணிப்பு தீண்டாமைச் செயலாகத் தெரிவதாக, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்டு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

திருப்பத்தூர் பிரியாணி விழா விவகாரம் - ஆட்சியரிடம் விளக்கம் கேட்டு எஸ்.சி., எஸ்.டி கமிஷன் நோட்டீஸ்

மாட்டிறைச்சி பிரியாணி புறக்கணிப்பு தீண்டாமைச் செயலாகத் தெரிவதாக, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்டு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

Published:Updated:
மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வர்த்தக மையத்தில் நேற்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாள்கள் பிரியாணி திருவிழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துவந்த நிலையில், விழாவில் மாட்டிறைச்சி பிரியாணி இடம் பெறாது என்ற தகவல் வெளியானது. இதற்கு, வி.சி.க மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ``திருவிழா நடத்தப்படும் வளாகம் முன்பு இலவசமாக மாட்டிறைச்சி பிரியாணியை வழங்குவோம்’’ என்று அறிவித்தது.

பிரியாணி திருவிழா அறிவிப்பு
பிரியாணி திருவிழா அறிவிப்பு

‘‘மாட்டிறைச்சி பிரியாணி வழங்கக் கூடாது. அதுமட்டுமின்றி, பிரியாணி திருவிழாவையே நடத்தக் கூடாது’’ என்று மற்றொரு பக்கம் இந்து அமைப்புகளும் போராட்டத்தைக் கையிலெடுத்தன. இதையடுத்து, மழையைக் காரணம் காட்டி, பிரியாணி திருவிழாவைத் தற்காலிகமாக ஒத்திவைத்தார் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா. இந்த நிலையில், பிரியாணி திருவிழா சர்ச்சை தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்டு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மாட்டிறைச்சி பிரியாணி புறக்கணிப்பு தீண்டாமைச் செயலாகத் தெரிவதாகவும் ஆணையம் அதிரடியாகக் கேள்வி தொடுத்திருக்கிறது. நோட்டீஸில், ‘‘சுமார் இரண்டு லட்சம் இஸ்லாமிய மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில், மாட்டிறைச்சி பிரியாணிக்கு அனுமதி வழங்கப்படாததை வகுப்புவாத அடிப்படையில், நாங்கள் ஏன் பாகுபாடாக எடுத்துகொள்ளக் கூடாது... தீண்டாமையைக் கடைபிடிக்கவில்லையென்றால், அது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்’’ என ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

நோட்டீஸ்
நோட்டீஸ்

‘‘ஆம்பூர் மாதிரியான பதற்றம் நிறைந்த பகுதியில், மனித ஒருமைப்பாடு அவசியம். மாட்டிறைச்சி பிரியாணிக்கு அனுமதி கொடுத்தாலும் பிரச்னை ஏற்படும். அனுமதி கொடுக்காவிட்டாலும் பிரச்னை வெடிக்கும் என்பதை மாவட்ட ஆட்சியர் முன்கூட்டியே ஆராய்ந்திருக்க வேண்டும். மாட்டிறைச்சி பிரியாணியைப் புறக்கணிக்க வேண்டுமென்பதில், அவருக்கு உள்நோக்கம் இருந்திருக்காது என்று நம்புகிறோம். ஒருவேளை உள்நோக்கத்துடன் அவர் செயல்பட்டிருந்தால் அது தவறு. சாதி, மத வேறுபாடின்றி பொதுமக்கள் அனைவரும் இணைந்து வாழ்வதற்கான சூழலை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும். அதை விடுத்து, விழா எடுக்கிறோம் என்ற பெயரில் மக்களை பிளவுப்படுத்தும் செயலில் ஈடுபடக் கூடாது’’ என்கிறார்கள் சமூகச் செயற்பாட்டாளர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism