Published:Updated:

Vikatan Poll: "பீட்டா அமைப்பைத் தடை செய்ய வேண்டும்!"- அமுல் நிறுவன துணைத்தலைவர்... உங்கள் கருத்து?

பீட்டா இந்தியா
பீட்டா இந்தியா

பீட்டா அமைப்பைத் தடை செய்ய வேண்டுமென அமுல் நிறுவன துணைத்தலைவர் கோரிக்கை வைத்திருக்கிறாரே?! இது குறித்து உங்களின் கருத்து என்ன?

பீட்டா இந்தியா அமைப்புக்கும் அமுல் நிறுவனத்துக்கும் முட்டல் மோதலாக இருக்கிறது. சில நாள்களுக்கு முன் பீட்டா அமைப்பு அமுல் நிறுவனத்திடம் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறது. அதில் முன்னணி பால் மற்றும் பால் பொருள் தயாரிப்பு நிறுவனமான அமுல், தன் நிறுவனம் சார்பாக, வீகன் பால், உணவுப் பொருள் போன்றவற்றைத் தயாரிக்க, பிரபலப்படுத்த முன்வர வேண்டுமெனத் தெரிவித்திருக்கிறது. இந்தியாவிலும் உலக நாடுகளிலும் மக்கள் இந்த மாற்றத்துக்குத் தயாராக இருப்பதாகவும் பீட்டா தெரிவித்திருக்கிறது.

இதனையடுத்து, அமுல் நிறுவனத்தின் துணைத்தலைவர் வலம்ஜி ஹும்பல், விஷமத்தனமான பிரசாரங்கள் செய்யும் பீட்டா நிறுவனத்தைத் தடை செய்யவேண்டுமெனப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார். பீட்டா இந்த வேண்டுகோளின் மூலம், 10 கோடி பேர் பயன்பெறும் பால்வளத் துறையையே சிதைக்கப் பார்க்கிறது என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இது குறித்து உங்களின் கருத்து என்ன? கமென்ட்டில் தெரிவியுங்கள்.
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு