திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சையது இப்ராஹிம். இவர் தனது உறவினரின் திருமணத்துக்காக நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த முத்து (57) என்பவரின் ஆம்னி வேனை வாடகைக்கு எடுத்து, தாய் ரசிதா பேகம் (55), மனைவி ஆசிபா பானு (35) மகள் சஸ்மிதா (10), மகன் இஸ்மாயில் (14) ஆகியோரை உடுமலைக்கு திங்கள்கிழமை அனுப்பி வைத்தார்.

திருமணம் முடிந்து, மடத்துக்குளத்தை நோக்கி வந்துகொண்டிருந்தபோது, நரசிங்கபுரம் பகுதியில் முன்னால் சென்ற டிராக்டரை முந்த ஆம்னி வேன் ஓட்டுநர் முத்து முயற்சி செய்துள்ளார்

அப்போது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த சரக்கு வேன் மீது நேருக்கு நேர் மோதியதில், ஓட்டுநர் முத்து, ரசீதா பேகம், ஆசிபாபானு, சஸ்மிதா ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயத்துடன் இஸ்மாயில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.