Published:Updated:

ஸ்டார் ஹோட்டல் வசதிகளுடன் ஆதரவற்றோர் மற்றும் முதியோர்களுக்கான இலவச இல்லம்; எங்கு தெரியுமா?!

எஸ்.எஸ்.கே.ஆர்  முதியோருக்கான இலவச தங்கும் இல்லம்.
News
எஸ்.எஸ்.கே.ஆர் முதியோருக்கான இலவச தங்கும் இல்லம்.

``முதியோர்களின் வசதிக்காக லிஃப்ட் உள்ளது. மருத்துவ அரங்கும், அதில் 24 மணி நேரமும் 2 செவிலியர்களும் மற்றும் ஒரு மருத்துவரும் பணியில் இருப்பார்கள். 20 அடி ஸ்கீரின் கொண்டு திரையரங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.’’

Published:Updated:

ஸ்டார் ஹோட்டல் வசதிகளுடன் ஆதரவற்றோர் மற்றும் முதியோர்களுக்கான இலவச இல்லம்; எங்கு தெரியுமா?!

``முதியோர்களின் வசதிக்காக லிஃப்ட் உள்ளது. மருத்துவ அரங்கும், அதில் 24 மணி நேரமும் 2 செவிலியர்களும் மற்றும் ஒரு மருத்துவரும் பணியில் இருப்பார்கள். 20 அடி ஸ்கீரின் கொண்டு திரையரங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.’’

எஸ்.எஸ்.கே.ஆர்  முதியோருக்கான இலவச தங்கும் இல்லம்.
News
எஸ்.எஸ்.கே.ஆர் முதியோருக்கான இலவச தங்கும் இல்லம்.

சேலம், ஓமலூரில் இருந்து தாரமங்கலம் செல்லும் சாலையில் எஸ்.எஸ்.கே.ஆர் ஆதரவற்றோர் மற்றும் முதியோருக்கான இலவச தங்கும் இல்லம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த முதியோர் இல்லம் அனைவரையும் பிரமிக்க வைக்கும் அளவுக்கு இயற்கையான சூழல்களுக்கு நடுவே கட்டப்பட்டுள்ளது. கட்டணம் வாங்காமல் தொடங்கப்படும் இந்த இல்லம், தமிழகத்தில் கட்டணம் பெற்று இயங்கும் பல்வேறு விடுதிகளுக்குப் போட்டியாக அமையும் என்று கருதும் அளவுக்கு பல்வேறு வசதிகள் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து எஸ்.எஸ்.கே.ஆர் டிரஸ்ட்டின் தலைவர் ராதா ராஜேந்திரனிடம் பேசினோம்... ``என் கணவர் பிசினஸ் செய்து வருகிறார். எனக்கு இரண்டு பிள்ளைகள். நான் பி.பி.ஏ பட்டதாரி. எங்களுக்கு சொந்தமாகத் திருமண மண்டபம் ஓமலூரில் இருக்கிறது. மற்றும் சொந்தமாக செங்கல் சூளைகள் நடத்தி வருகிறோம். இவற்றை எல்லாம் நான்தான் கவனித்து வருகிறேன்.

எஸ்.எஸ்.கே.ஆர் டிரஸ்டின் தலைவர் ராதா ராஜேந்திரன்
எஸ்.எஸ்.கே.ஆர் டிரஸ்டின் தலைவர் ராதா ராஜேந்திரன்

எனக்கும் என் கணவருக்கும் ரொம்ப நாளாகவே ஓர் ஆசை. நாங்கள் கோயில், விசேஷம் என்று செல்லும்போதெல்லாம் சாலைகளில் ஆதரவற்றோர்களைப் பார்ப்போம். உணவுக்கும் உறங்கவும் கூட வழியில்லாமல் தவிப்பார்கள். நாங்கள் சாப்பாடு வாங்கிக் கொடுத்து, செலவுக்குக் காசு கொடுத்துவிட்டு வருவோம். அப்போதுதான் எங்களுக்கு, இவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று தோன்றியது. இந்த ஆதரவற்றோர் இல்லத்தைக் கட்டும் எண்ணம் வந்தது.

அப்படித்தான் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன், ஒன்றரை ஏக்கர் அளவில் இருந்த எங்கள் சொந்த நிலத்தில் இந்த ஆதரவற்றோர் இல்லத்தைக் கட்ட ஆரம்பித்தோம். இப்போது எல்லா வேலைகளும் முடிவடைந்து வரும் ஜனவரி 29-ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதில், 250 பேர் தங்கும் அளவுக்கு படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மூன்று அடுக்குமாடி கட்டடத்தில் தரை தளத்தில் பெண்களும், மேல் இரண்டு தளங்களில் ஆண்களும் தங்க வைக்கப்பட உள்ளனர்’’ என்பவர் உருவாக்கியுள்ள இலவச முதியோர் இல்லத்தில், அலங்காரம் முதல் லிஃப்ட், நீச்சல்குளம் வசதிகள் வரை ஸ்டார் ஹோட்டல் அளவுக்கு அமைக்கப்பட்டுள்ளதுதான் ஹைலைட். அதைப் பற்றி பகிர்ந்தார்.

``முதியோர்களின் வசதிக்காக லிஃப்ட் உள்ளது. ஒவ்வொரு தளத்திலும் மருத்துவ அரங்கும், அதில் 24 மணி நேரமும் 2 செவிலியர்களும் மற்றும் ஒரு மருத்துவரும் பணியில் இருப்பார்கள். மூன்று தளங்களில் உள்ளவர்களும் பார்க்கும் வகையில் கீழ்க்கூடத்தில் 20 அடி ஸ்கீரின் கொண்டு திரையரங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதியோர்கள் இருக்கும் அறையிலேயே குளிப்பதற்கு 24 மணி நேரமும் வெந்நீர் கிடைக்கும் அளவுக்கு சோலார் அமைக்கப்பட்டுள்ளது.

ஒருவருக்கொருவர் இடையூறு, நெரிசல் இல்லாமல் படுப்பதற்கு ஓர் அறைக்கு குறைந்தது 3 பேரும், பெரிய அறைகளாக இருந்தால் 10 பேரும் உறங்கும் அளவுக்கு படுக்கைகள் போட்டிருக்கிறோம். மேலும் நூலகம், நடைப்பயிற்சி மேற்கொள்ள தனி இடம், வழிபாட்டுத் தளங்கள், அருகிலேயே மாட்டுப்பண்ணை என இயற்கை சூழ உருவாக்கியுள்ளோம்.

திரையரங்குகளுடன் கூடிய இல்லம்
திரையரங்குகளுடன் கூடிய இல்லம்

எங்களது மாட்டுப்பண்ணையில் இருந்து பெறப்படும் பசுமாட்டுப் பால், தயிர் ஆகியவற்றையே உணவுக்கு பயன்படுத்த இருக்கிறோம். முதியோர்களுக்கு ஏற்ற வகையிலான உணவுகள் மூன்று வேளைகளும் வழங்கப்பட உள்ளன. அதுமட்டுமல்லாது தங்களது பிறந்தநாள், கல்யாண நாள் என்று வெளிநபர்கள் இங்குள்ள ஆதரவற்றோர், முதியோர்களுடன் கொண்டாட நினைத்தால், அவர்கள் தங்குவதற்கும் இலவச அறைகள் உள்ளன’’ என்றவர் இல்லத்துக்கான ஆதரவற்றோர், முதியோரை தேர்ந்தெடுக்கும் முறை பற்றிக் கூறினார்.

``குடும்பத்தின் ஆதரவு இன்றி கைவிடப்பட்டவர்களுக்கே இந்த இலவச இல்லத்தைத் தொடங்கியுள்ளோம். கட்டடம் திறப்பதற்கு முன்பே தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலிருந்தும் தொலைபேசி வாயிலாகப் பலரும் பேசுகின்றனர். சிலர் நேரிலேயே வந்துவிடுகின்றனர். இருந்தாலும், எங்களுக்கு என்று சில வரையறைகள் வைத்துதான் அனுமதிக்கிறோம்.   

ஸ்டார் ஹோட்டல் வசதிகளுடன்  ஆதரவற்றோர் மற்றும் முதியோர்களுக்கான இலவச இல்லம்; எங்கு தெரியுமா?!

இது முழுக்க முழுக்க இலவசமாக மட்டுமே செயல்படும் ஆதரவற்றோர் மற்றும் முதியோருக்கான இல்லம். ஒரு ரூபாய்கூட யாரிடமும் பணம் வாங்கப் போவதில்லை. முதியோர் இல்லத்துக்குப் பின்புறத்தில் ஃபைவ் ஸ்டார் அளவிலான ரிசார்ட் ஒன்று கட்டியுள்ளோம். அதில் வரும் வருமானத்தை வைத்துதான் இந்த இல்லத்தை நடத்த இருக்கிறோம்” என்றார்.