அறிவிப்புகள்
கார்ட்டூன்
சமூகம்
Published:Updated:

ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!
பிரீமியம் ஸ்டோரி
News
ஐடியா அய்யனாரு!

ஷோ முடிந்து கூட்டம் கூட்டமாக வெளியேறுவதுபோல முகாம் மாறிக்கொண்டிருக்கிறார்கள் அ.ம.மு.க நிர்வாகிகள். அதில் லேட்டஸ்ட், டி.டி.வி-யின் தளபதியாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன்.

அ.தி.மு.க-வின் அடுத்தத் தலைவர் என ஒரு காலத்தில் எதிர்பார்க்கப்பட்ட டி.டி.வி.தினகரன் இப்போது அ.ம.மு.க-வைத் தக்கவைக்கவே போராடுகிறார். நிர்வாகிகளைச் சமாளிக்க அவருக்கு அய்யனார் சார்பில் சில ஐடியாக்கள்.

 எத்தனை நாள்கள்தான் ‘ஸ்லீப்பர் செல்’ டயலாக்கையே பேசுவது. அடுத்தது, ‘மனித வெடிகுண்டு’ ஐடியாவைக் கையில் எடுக்கலாம். ‘‘இங்கிருந்து எதிர் அணிக்கு மனித வெடிகுண்டுகளை அனுப்பியிருக்கிறேன்’’ என்று சொல்லிவிட்டால்போதும்... எதிர் அணி மட்டுமல்ல... எந்த அணியும் அ.ம.மு.க-வினரைக் கிட்ட சேர்க்க மாட்டார்கள்.

 ‘‘ஒரே அணியில் இருப்பவர்கள் ஐ.பி.எல்-லின்போது வேறு வேறு அணியில் விளையாடுவதில்லையா? அதுபோலத்தான் இதுவும். அவர்களுக்கு இலக்கு, கோப்பையை வெல்வது. நமக்கு இலக்கு மக்கள் நலன். அதனால், அணி முக்கியமில்லை. அர்ப்பணிப்புதான் முக்கியம்’’ என்று தட்டிவிடலாம். நம்பமாட்டார்கள்தான். சமாளிக்க ஏதாவது வேண்டுமே!

 ‘‘இதெல்லாம் என்னோட மாஸ்டர் மைண்ட். ‘போக்கிரி’ விஜய் மாதிரி, ‘ஏகன்’ அஜித் மாதிரி அவங்க எல்லாம் அண்டர்கவர் ஆபரேஷனுக்காக அங்கே போயிருக்காங்க. அந்த டீமோட பலம், பலவீனம் எல்லாம் நமக்கு சொல்லுவாங்க. நாம சரியான டைம் பார்த்து அட்டாக் பண்ணி சின்னத்தையும் கட்சியையும் மீட்டெடுத்துடலாம்’’ என்று சொல்லிச் சமாளிக்கலாம்.

 ‘‘ஒவ்வொரு கூட்டத்தின்போதும் கட்சி நிர்வாகிகள் லட்சக்கணக்குல கூடுறாங்க. வெயில் காலம் என்பதால், அவங்களுக்குத் தண்ணீர் சப்ளைசெய்ய முடியலை. அதனால தற்காலிகமா முகாம் மாறியிருக்காங்க. மழை பெய்ஞ்சு தண்ணீர் வந்ததும் திரும்பவும் இங்கேயே வந்துடுவாங்க’’ என்று சொல்லி ஆறு மாதங்கள் நிலைமையைக் கட்டுக்குள் வைக்கலாம்.

 ‘‘தங்க தமிழ்ச்செல்வனின் பெரிய எதிரி ஓ.பி.எஸ். இப்போ இவர் அங்கே போயிருக் கார்ன்னா... அப்போ அவர் இங்கே வந்துதானே ஆகணும்? சீக்கிரமே ஓ.பி.எஸ் நம்மகிட்ட வருவார். அப்புறம் பாருங்க நம்மளோட ஆட்டத்தை’’ என இரண்டு ஆண்டுகளாகத் தரும் பில்டப்பை இப்போதும் தரலாம்.