சினிமா
Published:Updated:

‘ஒருமாதிரி’ வினாத்தாள்!

‘ஒருமாதிரி’ வினாத்தாள்!
பிரீமியம் ஸ்டோரி
News
‘ஒருமாதிரி’ வினாத்தாள்!

- எக்ஸாம் பாய்

இந்த ஆண்டும் பள்ளிகள் எப்போது திறக்கும், தேர்வுகள் நடைபெறுமா என்று தெரியவில்லை. வினாத்தாள் எப்படி இருக்கும் என்றே நாம் மறந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் கீழே ‘மாதிரி வினாத்தாள்’ கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மாணவர்கள் மட்டும்தான் பதிலளிக்க வேண்டும் என்பதில்லை. யார் வேண்டுமானாலும் பதிலளிக்கலாம்.

கீழ்க்காணும் கேள்விகளுக்கு சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்.

1) வைரமுத்துவின் இப்போதைய மனநிலைக்கு அவர் எழுதிய பாடலில் எந்தப் பாடலை அவருக்கு டெடிகேட் செய்யலாம்

அ) பூமாலை வாங்கி வந்தான்; பூக்கள் இல்லையே. ஆ) உள்ளே அழுகிறேன் வெளியே சிரிக்கிறேன். இ) ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் உலகைப் புரிஞ்சுக்கிட்டேன் கண்மணி. ஈ) இவை அனைத்தும்.

2) ‘தமிழக அரசைக் கண்டிக்க வேண்டும்’ என்று தமிழக ஆளுநருக்குக் கடிதம் எழுதும் சுப்பிரமணியன் சுவாமி தமிழகத்தில் எந்தப் பொறுப்பில் இருக்கிறார்?

அ) எம்.எல்.ஏ. ஆ) எம்.பி. இ) கவுன்சிலர். ஈ) இவற்றில் எதுவும் இல்லை.

3) ஓய்வு நேரத்தில் எடப்பாடி பழனிசாமி என்ன செய்வார்?

அ) ‘விவசாயி’ படம் பார்ப்பார். ஆ) ‘நான் அடிமை இல்லை’ படம் பார்ப்பார். இ) ‘தர்மயுத்தம்’ படத்தை நிறுத்துவார். ஈ) சேக்கிழார் எழுதிய கம்ப ராமாயணம் புத்தகம் படிப்பார்.

4) காணாமல்போனவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் யார்?

அ) ஜெ.தீபா. ஆ) சசிகலா. இ) கருணாஸ். ஈ) தமிழருவி மணியன்.

5) கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முதன்முதலில் எஸ்கேப் ஆனது யார்?

அ) பாரதி கிருஷ்ணகுமார். ஆ) கு.ஞானசம்பந்தன். இ) கோவை சரளா. ஈ) யாருக்குத் தெரியும்?

சுருக்கமான விடையளிக்கவும்

1) ஹெச்.ராஜா சாரணர் தேர்தலில் 42 வாக்குகள் வாங்குகிறார் என்றால், சட்டமன்றத் தேர்தலில் வாக்குகள் பெற்று எம்.எல்.ஏ ஆக எத்தனை ஆண்டுக் காலம் தேவைப்படும்?

2) பெட்ரோல், டீசல் விலையை எப்போது ஸ்டாலின் குறைப்பார்?

3) அ.தி.மு.கவில் தர்மயுத்தம் 2.0 எப்போது வெடிக்கும்?

4) அரிசிக்கப்பல் முதல் ஆமைக்கறி வரை கதைசொல்லும் சீமான் பிரபாகரனை எவ்வளவு நேரம் சந்தித்திருப்பார்?

5) குஷ்பு அடுத்து தாவ இருக்கும் கட்சி எது?

‘ஒருமாதிரி’ வினாத்தாள்!

விரிவான விடையளிக்கவும்

1) பழ.கருப்பையாவின் கட்சித்தாவல் வரலாறு.

2) கோமியம் குணப்படுத்தியதாக பா.ஜ.க-வினர் சொல்லும் நோய்கள்.

3) ஒய்.ஜி.மகேந்திரனும் நகைச்சுவை சகிப்புணர்வும்.

4) விஜய் படங்களும் ரிலீஸ் தகராறுகளும்.

5) தமிழருவி மணியனும் முதல்வர் வேட்பாளர் முயற்சிகளும்.

இடம் சுட்டிப் பொருள் விளக்குக

1) தர்மயுத்தம்.

2) அன்புமணி ஆகிய நான்.

3) ஆன்மிக அரசியல்.

4) அக்கா சமாதியில் சபதம்.

5) ஆக...

கீழ்க்காண்பவற்றில் கேட்கக்கூடாத கேள்வி எது?

1) சமத்துவ மக்கள் கட்சியும் இந்திய ஜனநாயகக் கட்சியும் தோல்விக்கான காரணம் குறித்து ஆராய்ந்திருக்கிறார்களா?

2) பத்ம சேஷாத்ரி பள்ளி விவகாரம் குறித்து ‘விடவே கூடாது’ என்று ரஜினி எப்போது ட்வீட் போடுவார்?

3) அந்த 15 லட்சம் எப்போ வரும்?

4) சேப்பாக்கத்தில் தி.மு.க எல்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் சிறப்பாகச் செயல்படுகிறார் என்றால், இதற்கு முன் செயல்படாமல் இருந்த எம்.எல்.ஏ எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்?

5) காங்கிரஸ் கட்சியில் மொத்தம் எத்தனை கோஷ்டிகள் உள்ளன?

பொருத்துக

1) நிஜமல்ல கதை - மதுவந்தி

2) மிஸ்டுகால் - தினகரன்

3) போடாதே தப்புக்கணக்கு - சீமான்

4) ஸ்லீப்பர் செல் - உதயநிதி

5 ) தேர்டு கலைஞர் - ஜக்கி வாசுதேவ்

கீழ்க்காணும் வாக்கியம் சரியா, தவறா என்று கூறவும்

1) தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்.

2) உதயநிதி ஸ்டாலின் தி.மு.க தலைவராகும் வாய்ப்பில்லை.

3) அட்லி தன் சொந்தக் கற்பனையில் உதித்த கற்பனைகளையே திரைப்படங்களாக எடுக்கிறார்.

4) ராதாரவியின் பேச்சுகள் அரசியல் நாகரிகத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

5) கார்த்திக் கட்சியில் தொண்டர்கள் உள்ளனர்.