Published:Updated:

டெல்லியில் ஒருபுறம் இணக்கம், மறுபுறம் பாய்ச்சல்..! - இது வைகோ 2.0

வைகோ
News
வைகோ

நாடாளுமன்றத்தில் தன்னுடைய இருப்பை, சரியாகப் பதிவுசெய்கிறார் வைகோ. காஷ்மீர் விவகாரத்தில் இவரின் பேச்சு அனைத்து உறுப்பினர்களையும் கவனிக்கவைத்துவிட்டது.

டெல்லியில் ஒருபுறம் இணக்கம், மறுபுறம் பாய்ச்சல்..! - இது வைகோ 2.0

நாடாளுமன்றத்தில் தன்னுடைய இருப்பை, சரியாகப் பதிவுசெய்கிறார் வைகோ. காஷ்மீர் விவகாரத்தில் இவரின் பேச்சு அனைத்து உறுப்பினர்களையும் கவனிக்கவைத்துவிட்டது.

Published:Updated:
வைகோ
News
வைகோ

டெல்லி தி.மு.க-வில் உரசல் அதிகமாகிவிட்டதாக தெரிகிறது. கனிமொழி, டி.ஆர்.பாலு உள்ளிட்டவர்கள் இடையே சிறு உரசல்கள் எழுந்திருக்கின்றன. மறுபுறம் `ஆ.ராசா தனி லாபி செய்கிறார்' என்று சிலர் புலம்புகிறார்கள். தென் சென்னை எம்.பி-யான தமிழச்சி தங்கபாண்டியனுக்கு தமிழ்நாடு ஹவுஸில் சாதாரண அறையை முதலில் ஒதுக்கியுள்ளார்கள். அவர் நேரடியாக ராசாவிடம் சென்று, தனக்கு சூட் ரூம் வேண்டும் என்று கேட்டுள்ளார். ராசாவும் மல்லுக்கட்டி சூட் ரூம் வாங்கிக் கொடுத்துவிட்டாராம். அதேநேரம் மூத்த உறுப்பினரான வைகோவுக்கு சாதாரண அறையை ஒதுக்கியுள்ளனர். 'மூத்த உறுப்பினரான எனக்கு சாதா ரூம்... புதியவர்களுக்கு சூட் ரூமா?' என்று வைகோ கொந்தளித்துவிட்டாராம்.

டெல்லியில் ஒருபுறம் இணக்கம், மறுபுறம் பாய்ச்சல்..! - இது வைகோ 2.0

நாடாளுமன்றத்தில் தன்னுடைய இருப்பை, சரியாகப் பதிவுசெய்கிறார் வைகோ. காஷ்மீர் விவகாரத்தில் இவரின் பேச்சு அனைத்து உறுப்பினர்களையும் கவனிக்கவைத்துவிட்டது. சிறப்புச் சட்டம் குறித்த மசோதாவில் அவரின் பேச்சுக்கு நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவிக்க, புன்னகையை பதிலாகத் தந்துள்ளார் வைகோ. நிர்மலா சீதாராமனைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளார் வைகோ. 'அலுவலகத்துக்கு வாருங்கள்' என்று நிர்மலா சொல்ல, 'என் மனைவியோடு உங்களைச் சந்திக்க வேண்டும்' என்று வற்புறுத்தியுள்ளார். ஒருவழியாக ஆடிவெள்ளி அன்று இரவு நிர்மலா வீட்டுக்கு தன் மனைவியோடு சென்றுள்ளார் வைகோ. `இந்தச் சந்திப்பு குறித்து எந்தப் புகைப்படத்தையும் வெளியிட வேண்டாம்' என்று நிர்மலா சொன்னதும், மறுக்காமல் ஓகே சொல்லியுள்ளார். பட்டு வேஷ்டி, பட்டுச்சேலையை தம்பதிக்குப் பரிசாகக் கொடுத்துள்ளார் நிர்மலா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பி.ஜே.பி. மீதான அ.தி.மு.க-வின் அதிருப்தி, கட்சியிலும் ஆட்சியிலும் எடப்பாடி மேற்கொள்ளவுள்ள மாற்றங்கள், டெல்லியில் தி.மு.க உறுப்பினர்களிடையே உரசல் போன்ற பிற முக்கிய பகுதிகளை வாசிக்க http://bit.ly/kazhugu11Aug2019 .

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காஷ்மீர் பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு முன்பாக, மோடியைத் தனியாகச் சந்தித்து திருக்குறள் புத்தகத்தைப் பரிசாகத் தந்துள்ளார் வைகோ. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாகவும் வெளியில் நட்புடனும் வைகோ செயல்படுவதைப் பார்த்த தி.மு.க உறுப்பினர்கள், 'இவர் கேரக்டரையே புரிஞ்சிக்க முடியலையே!' என்று குழம்பித் தவிக்கிறார்கள்.

இதனிடையே, துரை வையாபுரியை கொஞ்சம் கொஞ்சமாகக் கட்சிக்குள் கொண்டுவரும்விதமாக… கட்சிக் கூட்டங்கள், விழாக்கள் அனைத்திலும் அவர் முன்னிலைப்படுத்தப்படுகிறார். 'துரை வையாபுரி' என்ற பெயர் தற்போது 'துரை வைகோ' என மாற்றம் பெற்றுள்ளது. துரை வைகோ என்ற பெயரில் புதிய வாட்ஸ்அப் குழு அமைக்கப்பட்டுள்ளது. சுவரொட்டிகள், பேனர்கள், பத்திரிகைகள் அனைத்திலும் துரை வைகோ பெயரையும் சேர்க்கச் சொல்கிறார்கள். 'அவருக்கு தனி வரவேற்பு கொடுக்க வேண்டும்' என்கிறார்கள். மாவட்டச் செயலாளர்கள் பலரும், 'துரை வைகோவுக்குப் பதவி கொடுக்க வேண்டும்' என்று பேசிவருகிறார்கள். இவையெல்லாம் வைகோவுக்குத் தெரியாமலோ, அவரின் ஒப்புதல் இல்லாமலோ நடக்க வாய்ப்பேயில்லை. 'துரை வையாபுரி டு துரை வைகோ... வாரிசு அரசியலை வழிமொழிகிறாரா வைகோ?' என்ற கேள்வியும் வலுவாக எழுந்துள்ளது.

டெல்லியில் ஒருபுறம் இணக்கம், மறுபுறம் பாய்ச்சல்..! - இது வைகோ 2.0

> பி.ஜே.பி. மீதான அ.தி.மு.க-வின் அதிருப்தி, கட்சியிலும் ஆட்சியிலும் எடப்பாடி மேற்கொள்ளவுள்ள மாற்றங்கள், டெல்லியில் தி.மு.க உறுப்பினர்களிடையே உரசல் ஆகிய விவகாரங்கள் தொடர்பாக விரிவான உள்ளரசியல் தகவல்களை ஜூனியர் விகடன் இதழின் கழுகார் பகுதியில் வாசிக்கலாம்.

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism