Published:Updated:

மும்பை: 90 கன்டெய்னர்களுடன் புறப்பட்ட சரக்கு ரயில் திடீர் மாயமா? - ரயில்வே நிர்வாகம் விளக்கம்!

சரக்கு ரயில்
News
சரக்கு ரயில் ( கோப்புப் படம் )

மும்பை அருகே 90 கன்டெய்னர்களை ஏற்றிவந்த சரக்கு ரயில் திடீரென காணாமல்போனதாகக் செய்தி வெளியான நிலையில், இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் விளக்கமளித்திருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரிலிருந்து பிப்ரவரி ஒன்றாம் தேதி சரக்கு ரயில் ஒன்று ஏற்றுமதிக்காக 90 கன்டெய்னர்களுடன் மும்பை வந்துகொண்டிருந்தது. ரயில் 4 அல்லது 5 நாள்களில் மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகத்துக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை அந்த ரயில் மும்பை துறைமுகத்துக்கு வந்து சேரவில்லை. சரக்கு ரயிலை அதிகாரிகள் நாசிக் வரை சரியாகக் கண்காணித்து வந்தனர். ரயில் நாசிக்கிலிருந்து கல்யாண் நோக்கி வந்துகொண்டிருந்தபோது, கசாரா அருகிலுள்ள ஓம்பர்மாலி என்ற இடத்தில் திடீரென காணாமல்போய்விட்டதாகக் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் இந்தியன் ரயில்வே நிர்வாகம் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்திருக்கிறது. அதில், ``மும்பை அருகே 90 கன்டெய்னர்களை ஏற்றிவந்த சரக்கு ரயில் திடீரென காணாமல்போனது தொடர்பாக தவறான செய்திகள் பரவி வருகின்றன. அதன் உண்மைத் தன்மையை சரிபார்த்த பிறகு செய்தியை வெளியிட வேண்டும்'' எனத் தெரிவித்திருக்கிறது.