Published:Updated:

`தமிழக அரசின் மக்கள் ஐடி' - பாஜக எதிர்ப்பும் திமுக பதிலும்! - ஒரு பார்வை

தமிழக அரசு

தமிழக அரசு 'மக்கள் ஐடி' என்ற பெயரில் புதிய அடையாள எண்ணை வழங்க முடிவு செய்திருக்கிறது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இதன் பின்னணி என்ன?!

`தமிழக அரசின் மக்கள் ஐடி' - பாஜக எதிர்ப்பும் திமுக பதிலும்! - ஒரு பார்வை

தமிழக அரசு 'மக்கள் ஐடி' என்ற பெயரில் புதிய அடையாள எண்ணை வழங்க முடிவு செய்திருக்கிறது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இதன் பின்னணி என்ன?!

Published:Updated:
தமிழக அரசு

ஆதார் vs மக்கள் ஐடி:

மத்திய அரசு கொண்டுவந்த ஆதார் தற்போது நடைமுறையில் இருக்கிறது. இதில் குடிமகனின் தனிப்பட்ட அடையாளங்களுடன் பல்வேறு தகவல்கள் இடம்பெற்றிருக்கிறது. இதன் நோக்கம் அரசின் திட்டங்களைப் பெறுவதற்கும், வங்கிகளில் பயன்படுத்துவதற்குத் தனித்துவமான ஒரு அடையாளத்தை உருவாக்குவது. முன்னதாக இந்த எண்ணைப் பெற, சம்பந்தப்பட்டவர்கள் கைரேகை, கருவிழிப் படல அடையாளம் போன்றவற்றை அரசுக்குத் தர வேண்டும்.

இந்நிலையில்தான் தமிழக அரசு 'மக்கள் ஐடி' என்ற பெயரில் தனித்துவமிக்க புதிய அடையாள எண்ணை வழங்க முடிவு செய்திருக்கிறது. இதுகுறித்து சமீபத்தில் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. அதில், "தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்த, தமிழ்நாடு அரசு 'மக்கள் ஐடி' என்ற பெயரில் ஒரு தனித்துவம் மிக்க அடையாள எண்ணை உருவாக்க விரும்புகிறது.

ஆதார்
ஆதார்

10 அல்லது 12 எண்கள்:

அதற்கான திறன் கொண்ட நிறுவனங்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாநிலத்தில் உள்ள குடும்பங்களின் தகவல் தொகுப்பைத் தமிழ்நாடு அரசு உருவாக்க விரும்புகிறது. அந்தத் தகவல் தொகுப்பை உருவாக்குவதன் மூலம், திட்டமிடுதல், அவற்றைச் செயல்படுத்துதல் ஆகியவை மேம்படும். இதன் மூலம் தமிழ்நாட்டில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் தனித்துவமிக்க ஓர் அடையாளம் உருவாக்கப்படும்.

இது மக்கள் ஐடி எனப்படும். இந்த ஐடி-யில், 10 அல்லது 12 எண்கள் இடம்பெற்றிருக்கலாம். தற்போதைய மக்கள் தொகையையும் எதிர்கால மக்கள் தொகையையும் மனதில் கொண்டு இந்த எண்கள் எவ்வளவு நீளம் என்பது முடிவு செய்யப்படும்" என்பது உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருந்தது.

இதுகுறித்து முன்னதாகவே கடந்த 2013-ம் ஆண்டின் ஆளுநர் உரையிலும் 2013-14-ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையிலும் அறிவிப்பு இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மக்கள் தொகை
மக்கள் தொகை

மக்கள் செயலி:

அப்போது மாநில அரசு, 'மாநிலத்தில் குடியிருப்போரின் தரவுத் தொகுப்பு'யை உருவாக்கத் திட்டமிட்டது. அதன்படி, தேசிய மக்கள் தொகை பதிவேட்டிலிருந்து தமிழகத்தில் வசிப்பவர்களின் தகவல்களை எடுத்து, அனைத்துத் துறைகளுக்கும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கென 'மக்கள் செயலி' உருவாக்கப்பட்டது. இந்த மக்கள் செயலியில், ஆதார் மூலம் கிடைத்த தகவல்கள் தொகுக்கப்படும்.

பின்னர் தமிழக அரசின் அனைத்துத் துறைகளுக்கும் வழங்கப்படும். இந்தத் தகவல்களைப் பயன்படுத்தி, அனைத்து நலத்திட்ட உதவிகளையும் கண்காணிக்கவும் சிறப்பாகச் செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி மாநிலத்தில் வசிக்கும் அனைத்து மக்களின் தகவல்களும் ஒன்றாகத் திரட்டப்பட்டு, பாதுகாப்பான முறையில் அனைத்து துறைகளோடும் பகிரப்படும்.

தமிழக அரசு
தமிழக அரசு

பாஜக கடும் எதிர்ப்பு:

ஒவ்வொரு துறையிலும் பயனடைவோரின் விவரம், ஆதாருடன் இணைக்கப்படும். குடிமக்களுக்கு நேரடியாக பணத்தை வழங்கும் ஒரு வழிமுறையையும் உருவாக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி 'மக்கள் ஐடி' என்பது ஏற்கெனவே உருவாக்கப்பட்டு, தமிழகத்தில் வசிக்கும் பல கோடி பேரின் தகவல்களுடன் இணைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் ஏற்கெனவே ஆதார் இருக்கும் நிலையில் தமிழகத்தில் 'மக்கள் ஐடி' தேவையில்லை என பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுகுறித்து அந்தக் கட்சியின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "ஆதார் எண் போல் தமிழகத்தில் வசிக்கும் அனைவருக்கும் ‘மக்கள் ஐடி’ என்ற பெயரில் 10 முதல் 12 இலக்க எண் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

 - நாராயணன் திருப்பதி
- நாராயணன் திருப்பதி

கடும் விளைவுகளை உருவாக்கும்:

இந்த முயற்சி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதோடு, கடும் விளைவுகளை உருவாக்கும். மேம்போக்காகப் பார்க்கும் போது, மக்கள் நலத்திட்டங்களை ஒரு எண் மூலம் வழங்குவதற்கான ஏற்பாடாகக் கூறப்பட்டாலும், இந்த சிந்தனையின் பின்னணியில் பெரும் உள்நோக்கம் உள்ளதாகவே கருதுகிறேன். லஞ்சம், ஊழல், முறைகேடுகளைத் தடுத்து பயனாளிகளுக்குப் பயன் தரும் வகையில் அமைந்திருக்கிறது.

இந்த நேரடியாக வங்கி கணக்கில் பணம் செலுத்தும் முறை (JAM) பயனாளிகளுக்குப் பேருதவி திட்டமாகவும், ஊழல்வாதிகளுக்குச் சிம்ம சொப்பனமாகவும் அமைந்திருக்கிறது. இந்நிலையில், மாநில அரசு, ஏற்கனவே அமலில் உள்ள கட்டமைக்கப்பட்டுள்ள நடைமுறையைப் பின்பற்றாமல் தனியாக ஒரு எண் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு உள்நோக்கம் கொண்டதாகவே அமையும்.

லஞ்சம்
லஞ்சம்

கைவிட வேண்டும்:

ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட இடைத்தரகர்கள், தவிர்க்கப்பட்ட போலி பயனாளிகள், பலனடைந்த அதிகாரிகள், ஊழல் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் மீண்டும் துளிர்த்தெழுந்து, மாநில அரசின் நலத் திட்டங்களில் மோசடி செய்ய வழிவகை செய்யவே தமிழக அரசு முன்னெடுத்துள்ள இந்த முயற்சி பயன்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை.

ஆதார் அட்டையைப் பயன்படுத்தி, ஊழலற்ற, முறைகேடுகளற்ற வகையில் மக்களுக்கு உதவிகளைச் செலுத்தும் தற்போதைய முறையை மேலும் பலப்படுத்த வேண்டுமேயன்றி, உறுதியாக லஞ்ச, ஊழலுக்கு வழிவகுக்கும் வகையில் அமைப்பைப் பலவீனப்படுத்தும் வகையில் தமிழக அரசு செயல்படக் கூடாது. இந்த முயற்சியை உடனடியாக தமிழக அரசு கைவிட வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.

ஊழல்
ஊழல்

போட்டி அரசியல்:

இது குறித்து நம்மிடம் பேசிய அரசியல் ஆய்வாளர் துரை கருணா, "நாடு முழுவதும் ஏற்கெனவே ஆதார் எண் இருக்கும் போது, தமிழகத்திற்கு என்று தனி எண் எதற்கு என்று பாஜக-வினர் கேட்கிறார்கள். தற்போது அனைத்து இடத்திலும் ஆதார் தான் கேட்கிறார்கள். இப்படியிருக்கும் நிலையில் மக்கள் எண் என்பது எதை நோக்கிய பயணம் என்ற சந்தேகம் பாஜக-வுக்கு எழுத்திருப்பதால் இந்த கேள்வியை முன்வைக்கிறார்கள்.

இதற்கு தமிழக அரசு இந்த திட்டம் கடந்த ஆட்சியிலேயே போடப்பட்டது. சலுகை மற்றும் திட்டங்களினால் பயனடையும் மக்களின் தரவுகளைச் சேகரிப்பதற்காகக் கொண்டுவருகிறோம் என திமுக தெரிவிக்கிறது. ஆனால் இந்த காரணங்களுக்கு ஆதார் எண்ணும் பயன்படுகிறது. இது போட்டி அரசியலோ என்று தோன்றுகிறது. அதாவது மத்திய அரசு தேசிய கல்வி கொள்கை உருவாக்கினால் இவர்கள் மாநில கல்வி கொள்கையை உருவாக்குகிறார்கள்.

துரை கருணா
துரை கருணா

ஏன் பயம் வருகிறது?:

இவ்வாறு செய்வதன் மூலம் மக்களுக்கு என்ன பயன் என்பதைத் தெளிவு படுத்தவில்லை. காலம்காலமாக சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளும் கேட்கிறார்கள். மேலும் ஏற்கெனவே வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட 12 விதமான அடையாள அட்டைகள் இருக்கின்றன. இவை அனைத்தும் ஒரு தனி மனிதனை அடையாளப்படுத்துவதற்குத்தான். அப்புறம் எதற்கு மக்கள் ஐடி?" என்றார்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், "முதலில் ஆதார் வரும் போது எதிர்ப்பு தெரிவித்தது பிரதமர் மோடிதான். அப்போது அவர் முதல்வராக இருந்தார். பிறகு அவர் தான் செயல்படுத்தினார். பிறகு இன்று நாங்கள் தமிழகத்தில் எடுக்கும் முடிவுக்கு அவர்களுக்கு ஏன் பயம் வருகிறது. தமிழர்களுக்காகவும், தமிழுக்காகவும் உழைக்கக்கூடிய கட்சிகள் எதுவும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை" என்றார்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

இதுவும் இருக்கட்டும்:

தொடர்ந்து அவர், "இப்படி இருக்கும் போது பாஜக எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் அவர்களுக்கு ஏதோ பிரச்னை இருப்பதாகத் தெரிகிறது. ஒரு மனிதர்க்கு ஒரு ஐடி கார்டு போதும் என்றால் ஆதாருடன், வாக்காளர் அடையாள அட்டையையும் இணைத்து விட வேண்டியது தானே?. பான் கார்டு எதற்கு கொடுக்கிறீர்கள்?.

என்னிடம் ஆதார், பான், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு போன்ற அடையாள அட்டைகள் இருக்கின்றன. இவை அனைத்தும் ஒவ்வொரு இடத்தில் பயன்படுகிறது. அப்படி இதுவும் இருக்கட்டும். பாஜக எதற்காகக் கொதிக்கிறது?" என்றார்.