Published:Updated:

"பி.எஸ்.எஃப்-ல் முன்னாள் அக்னி வீரர்களுக்கு 10% இட ஒதுக்கீடு!" - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

அக்னிபத்

``எல்லைப் பாதுகாப்புப் படையில் (பி.எஸ்.எஃப்) காலியாக உள்ள பணியிடங்களில், முன்னாள் அக்னி வீரர்களுக்கு உடற்தகுதித் தேர்வில் விலக்குடன்கூடிய 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும்'' என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது.

Published:Updated:

"பி.எஸ்.எஃப்-ல் முன்னாள் அக்னி வீரர்களுக்கு 10% இட ஒதுக்கீடு!" - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

``எல்லைப் பாதுகாப்புப் படையில் (பி.எஸ்.எஃப்) காலியாக உள்ள பணியிடங்களில், முன்னாள் அக்னி வீரர்களுக்கு உடற்தகுதித் தேர்வில் விலக்குடன்கூடிய 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும்'' என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது.

அக்னிபத்

இந்தியாவில் கடந்த ஆண்டு பெரும் போராட்டத்துக்கும், எதிர்க்கட்சிகளின் கடும் கண்டனத்துக்கும் வழிவகுத்த ஒன்றுதான், மத்திய அரசு கொண்டுவந்த `அக்னிபத்' திட்டம். இந்திய ராணுவத்தின் முப்படைகளின் புதிய ஆட்சேர்ப்பு திட்டமான அக்னிபத் திட்டத்தில் தேர்வுபெறும் வீரர்கள், நான்காண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவர். அதன் பிறகு அதிலிருந்து 25 சதவிகிதம் பேர் மட்டுமே நிரந்தரமாகப் பணியமர்த்தப்படுவர். மற்ற 75 சதவிகிதம் பேர் ஓய்வுபெற்றவர்களாவர்.

அக்னிபத் திட்டம்
அக்னிபத் திட்டம்

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, `மத்திய துணை ராணுவப் படை, அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் ஆகியவற்றில் காலியாக இருக்கிற 10 சதவிகிதப் பணியிடங்கள், 75 சதவிகித அக்னி வீரர்களுக்கு ஒதுக்கப்படும்' என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

இந்த நிலையில், `எல்லைப் பாதுகாப்புப் படையில் (பி.எஸ்.எஃப்) காலியாக உள்ள பணியிடங்களில், முன்னாள் அக்னி வீரர்களுக்கு உடற்தகுதி தேர்வில் விலக்குடன்கூடிய 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும்' என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது. மேலும், துணை ராணுவப் படைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான குறிப்பிட்ட வயது வரம்பு என்பது 18 முதல் 23 வயது ஆகும்.

அக்னிபத் - ராணுவ ஆட்சேர்ப்பு
அக்னிபத் - ராணுவ ஆட்சேர்ப்பு

இப்படியிருக்க, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட இந்த அறிவிப்பில், முதல் தொகுதியிலிருந்து (first batch) ஓய்வுபெற்ற முன்னாள் அக்னி வீரர்களுக்கு, அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் வரையிலும், அடுத்தடுத்த தொகுதியிலிருந்து ஓய்வுபெறும் முன்னாள் அக்னி வீரர்களுக்கு அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரையிலும், வயது வரம்பு தளர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.