Published:Updated:

`முதல் குடும்ப’ வாரிசு அரசியல் - ஸ்டாலினுக்கு எதிராக நட்டா பேசிய அரசியலின் பின்னணி என்ன?!

உதயநிதி - ஸ்டாலின்

“கனிமொழிக்கு மோடியும், அமித் ஷாவும் பிறந்த நாள் வாழ்த்து கூறியதும் இதில் ஒரு பகுதித்தான்.” - ரவீந்திரன் துரைசாமி.

`முதல் குடும்ப’ வாரிசு அரசியல் - ஸ்டாலினுக்கு எதிராக நட்டா பேசிய அரசியலின் பின்னணி என்ன?!

“கனிமொழிக்கு மோடியும், அமித் ஷாவும் பிறந்த நாள் வாழ்த்து கூறியதும் இதில் ஒரு பகுதித்தான்.” - ரவீந்திரன் துரைசாமி.

Published:Updated:
உதயநிதி - ஸ்டாலின்

பாஜக சார்பில் 2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, கோவை, நீலகிரி தொகுதிகளுக்கான பிரசார பொதுக்கூட்டம் கோவை காரமடை பகுதியில் கடந்த 27-ம் தேதி நடைபெற்றது. இதில் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மூத்த தலைவர்களான சி.பி.ராதாகிருஷ்ணன், பொன்.ராதகிருஷ்னன் உள்ளிட்ட நிர்வாகிகள், பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வுகளுக்கு முன்னதாக, கோவையில் பா.ஜ.க சார்பில் சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்களுடன் ஜே.பி.நட்டா கலந்துரையாடினார்.

பாஜக | அண்ணாமலை - நட்டா
பாஜக | அண்ணாமலை - நட்டா

அதன் பிறகு பொதுக்கூட்டத்தில், “தமிழகத்தை ஆளும் தி.மு.க என்பது ஒரு மாநில கட்சி அல்ல. அது ஒரு குடும்பத்துக்கு மட்டுமான கட்சி. மாநிலத்துக்கான நலன்களைப் பற்றி கவலைப்படுவதைவிட குடும்பத்துக்கான நலன்களை பற்றிய அந்த கட்சி அதிகம் கவலைப்படும். குடும்ப கட்சி என்பதிலும் அது முதல் குடும்பத்துக்கான கட்சி மட்டுமே. ஸ்டாலினுடைய சகோதரர்களுக்கோ சகோதிகரிகளுக்கோ அங்கே இடமில்லை. ஒரே ஒரு குடும்பத்துக்கான கட்சியாக மட்டுமே திமுக செயல்படுகிறது” என்று பேசி தமிழ்நாட்டு அரசியல் களத்தில் புதிய விவாதத்தை தொடங்கி வைத்திருக்கிறார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா.

இது தொடர்பாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, “அரசியல் அரங்கத்தில் தொடர் வெற்றி கூட்டணியாக தி.மு.க இருக்கிறார்கள். இன்று ஸ்டாலின் அணிக்கு இணையாக யாரும் இல்லை என்கிற சூழல் இருக்கிறது. அதற்குள் பிரச்னை வராதா என்கிற எதிர்பார்ப்பு பா.ஜ.க போன்ற எதிர்க்கட்சிகளுக்கு இருப்பது இயல்பு. அந்த வகையில்தான் சூசகமாக சில விஷயங்களை ஜே.பி.நட்டா பேசி இருக்கிறார்.

ரவீந்திரன் துரைசாமி
ரவீந்திரன் துரைசாமி

ஆனால், எல்லாவற்றையும் புரிந்து கொண்டு கட்சிக்குள் எல்லோரையும் பேலன்ஸ் செய்து மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு அடியும் அளந்து, நிதானமாக தனது அரசியல் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார். கனிமொழிக்கு மோடியும், அமித் ஷாவும் பிறந்த நாள் வாழ்த்து கூறியதும் இதில் ஒரு பகுதித்தான். இவர்களும் கலைஞரின் வாரிசுகள். இவர்களுக்கும் எல்லா அரசியல் சூட்சமங்களும் தெரிந்தவர்கள்தான்” என்றார்.