Published:Updated:

ரெய்டு முதல் சேஸிங் வரை - பஞ்சாப் போலீஸுக்குச் சவாலாக இருக்கும் அம்ரித்பால் யார்?!

அம்ரித்பால் சிங் ( டிவிட்டர் )

சுமார் 25 கி.மீ தூரம் பஞ்சாப் போலீஸார் அம்ரித்பால் சிங்கை சேஸிங் செய்தும் அவர் தப்பித்துவிட்டார். அவரைத் தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுவருவதாக பஞ்சாப் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Published:Updated:

ரெய்டு முதல் சேஸிங் வரை - பஞ்சாப் போலீஸுக்குச் சவாலாக இருக்கும் அம்ரித்பால் யார்?!

சுமார் 25 கி.மீ தூரம் பஞ்சாப் போலீஸார் அம்ரித்பால் சிங்கை சேஸிங் செய்தும் அவர் தப்பித்துவிட்டார். அவரைத் தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுவருவதாக பஞ்சாப் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அம்ரித்பால் சிங் ( டிவிட்டர் )

1984-ல் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பொற்கோவிலில் வைத்து காலிஸ்தான் இயக்கத்தின் தலைவர் ஜர்னைல் சிங் பிந்திரன்வாலேவையும் அவருடைய ஆதரவாளர்களையும் ராணுவம் சுட்டுக்கொன்றது, அதன் பிறகு பஞ்சாப்பைப் பிரித்துத் தனி நாடு கோரிக்கைக்கான குரல் தணிந்தது. இதை ப்ளூ ஸ்டார் ஆபரேஷன் எனக் குறிப்பிடப்பட்டது. கொல்லப்பட்ட ஜர்னைல் சிங் பிந்திரன்வாலேவைப் போலவே பேசி, அவரது கோரிக்கையை முன்னெடுத்துச் செல்லும் 29 வயது நபர் தான் அம்ரித்பால் சிங். ’வாரிஸ் பஞ்சாப் தே’ என்ற அமைப்பு நடிகர் தீப் சித்துவால் தொடங்கப்பட்டது. அவர் கடந்த ஆண்டு விபத்து ஒன்றில் உயிரிழந்தார்.

அதைத் தொடர்ந்து துபாயிலிருந்து பஞ்சாப் வந்த காலிஸ்தான் ஆதரவாளர் அமிரித்பால் சிங், தன்னையே `வாரிஸ் பஞ்சாப் தே’ அமைப்பின் தலைவராக அறிவித்துக்கொண்டார். மேலும் ’எங்கள் லட்சியம் காலிஸ்தான்’ என்பதையும் தொடர்ந்து பேசிவருகிறார், மேலும், இந்திரா காந்திக்கு நேர்ந்தது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் நேரும் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பஞ்சாப் போலீஸாரால் தேடப்பட்டும் வருகிறார்.

காலிஸ்தான் விவகாரம்
காலிஸ்தான் விவகாரம்
ட்விட்டர்

சமீபத்தில் காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங்கின் நண்பர் லவ்ப்ரீத் என்பவர் கடத்தல் வழக்கில் கைதாகி நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். பொய் வழக்கில் லவ்ப்ரீத் கைதாகியிருக்கிறார், போலீஸார் பிடியில் அஜ்னாலா பகுதியில் இருக்கும் லவ்ப்ரீத்தை விடுதலை செய்ய வலியுறுத்தியதோடு ‘லவ்ப்ரீத்தை விடுவிக்க அஜ்னாலாவுக்கு வாருங்கள்’ எனத் தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அஜ்னாலாவுக்குப் படையெடுத்தனர் அவரின் ஆதரவாளர்கள்.

இந்தச் சம்பவத்தால் கலவரம் ஏற்பட்டு காவலர்கள் சிலர் தாக்கப்பட்டனர். அம்ரித்பாலின் ஆதரவாளர்கள் அத்துமீறிக் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் லவ்ப்ரீத் விடுவிக்கப்பட்டார். வன்முறையைத் தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், கடத்தல்காரர் விடுதலை செய்யப்பட்டது பெரும் விமர்சனத்தை எழச் செய்தது. காலிஸ்தான் ஆதரவாளர்களுக்குப் பாகிஸ்தானிலிருந்து நிதி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

அம்ரித்பால் சிங்
அம்ரித்பால் சிங்

இந்த நிலையில் மார்ச் 19-ம் தேதி முகத்சர் என்ற பகுதியில் மத ஊர்வலத்தைத் தொடங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 18-ம் தேதியே அம்ரித்பால் சிங்கைக் கைதுசெய்ய திட்டமிட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் ஜலந்தர் மாவட்டத்தில் இருப்பதாகத் தெரியவந்ததைத் தொடர்ந்து, போலீஸார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அம்ரித்பால் சிங் கைதுசெய்யப்பட்டால் கலவரங்கள் வெடிக்கலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணைய சேவை முடக்கப்பட்டு, 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது

ஜலந்தர் பகுதியில் காரில் தப்பிக்க முயன்ற அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் போலீஸார் 25 கி.மீ தூரம்வரை துரத்திச் சென்றும் அவரைப் பிடிக்கமுடியாமல் போனதாகவும், அவரின் ஆதரவாளர்கள் சிலரைக் கைதுசெய்ததாகவும், பயங்கர ஆயுதங்களைக் கைப்பற்றியதாகவும் தெரிகிறது.

இது குறித்துப் பேசிய பஞ்சாப் காவல்துறை, “அம்ரித்பால் சிங் தப்பித்துவிட்டார், அவரின் ஆதரவாளர்களை மட்டுமே கைதுசெய்திருக்கிறோம்” என்றார். ஆனால், தனது தேடுதல் வேட்டையை போலீஸார் தொடர்ந்ததையடுத்து மெகத்பூர் என்ற பகுதியில் வைத்து பஞ்சாப் போலீசார் அம்ரித்பால் சிங்கை கைதுசெய்துவிட்டதாகத் தகவல் பரவுகிறது.

அம்ரித்பால் சிங்
அம்ரித்பால் சிங்

``அம்ரித்பால் சிங் கைதுசெய்யப்பட்டால், டி.ஜி.பி முறையாக அறிவிப்பார். சில தீய சக்திகள் இருந்தாலும் காவல்துறையினர் நல்ல வேலையைச் செய்கின்றனர். பஞ்சாப் மக்கள் அமைதியையும் சகோதரத்துவத்தையும் பேணுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என பஞ்சாப் அமைச்சர் பல்பீர் சிங் தெரிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

அம்ரீத்பால் சிங்
அம்ரீத்பால் சிங்
டிவிட்டர்

அம்ரித்பால் சிங் பஞ்சாப் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டார், அவர் பஞ்சாப் போலீஸாரால் என்கவுன்டரில் கொல்லப்படலாம் என அம்ரித்பால் சிங்கின் வழக்கறிஞர் தெரிவித்திருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் அம்ரித்பால் சிங்கின் தந்தை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார். அதில், என் மகன் அம்ரித்பால் சிங் மார்ச் 18-ம் தேதியே கைது செய்யப்பட்டதாகவும், இது குறித்த உண்மை நிலையைப் பஞ்சாப் காவல்துறை வெளியில் சொல்லாமல் மறைப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அம்ரித்பால் சிங் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

காலிஸ்தான் கோரிக்கையுடன் வலம்வந்த பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கைக் கைதுசெய்ய முழுவீச்சுடன் செயல்படுகிறது பஞ்சாப் காவல்துறை. அவர் ஏற்கெனவே கைதாகிவிட்டதாக அம்ரித்பால் சிங் தரப்பில் சொல்லப்படுகிறது. கைது செய்யப்பட்டாரா... தப்பித்துச் சென்றாரா... என பஞ்சாப்பில் குழப்பான சூழல் நிலவுகிறது.