கட்டுரைகள்
Published:Updated:

மீண்டும் போர்ப் பதற்றம்... பதறும் உலக நாடுகள்!

மீண்டும் போர்ப் பதற்றம்... பதறும் உலக நாடுகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
மீண்டும் போர்ப் பதற்றம்... பதறும் உலக நாடுகள்!

கிழக்கு ஜெருசலேமின் பழைமையான பகுதியில் ‘அல் அக்‌சா மசூதி’ அமைந்திருக்கிறது. அதுதான், இஸ்லாமியர்களின் மூன்றாவது பெரிய புனிதத்தலம்.

இஸ்ரேல் - பாலஸ்தீனத்துக்கிடையிலான போர்ப் பதற்றம் மீண்டும் அதிகரித்துவருகிறது. கடந்த சில மாதங்களாக நடைபெற்றுவந்த மோதல் சம்பவங்கள், தற்போது இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு அனுசரித்துவரும் வேளையில் தீவிரமடைந்திருப்பது, உலக நாடுகளைக் கவலைகொள்ளச் செய்திருக்கிறது.

மத்திய கிழக்கில் அமைந்திருக்கும் இஸ்ரேலில் 70 சதவிகிதம் யூதர்களும், 20 சதவிகிதம் இஸ்லாமியர்களும், 10 சதவிகிதம் கிறிஸ்தவர்களும் வாழ்கிறார்கள். இஸ்ரேலையொட்டிய பாலஸ்தீனத்தில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். இஸ்ரேலை ஒரு நாடாக ஐ.நா அங்கீகரித்திருக்கிறது. ஆனால், அத்தகைய அங்கீகாரத்துக்காக பாலஸ்தீனம் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறது. இந்த இரு நாடுகளின் முக்கியப் பிரச்னையாக நிலவுவது ஜெருசலேம் நகரின் உரிமை.

மீண்டும் போர்ப் பதற்றம்... பதறும் உலக நாடுகள்!
மீண்டும் போர்ப் பதற்றம்... பதறும் உலக நாடுகள்!

கிழக்கு ஜெருசலேமின் பழைமையான பகுதியில் ‘அல் அக்‌சா மசூதி’ அமைந்திருக்கிறது. அதுதான், இஸ்லாமியர்களின் மூன்றாவது பெரிய புனிதத்தலம். அந்த மசூதியைச் சுற்றி `வெஸ்ட் வால்' என்ற சுவர் அமைந்திருக்கிறது. அதை, `டெம்பிள் மவுன்ட்' என்று அழைக்கும் யூதர்கள், அதைத் தங்களின் புனிதத்தலம் எனக் கருதுகிறார்கள். 1948-ல் இஸ்ரேலுக்கும், எகிப்து, ஜோர்டான், சிரியா உள்ளிட்ட மத்தியக் கிழக்கு நாடுகளுக்குமான போரில் மேற்கு ஜெருசலேம் இஸ்ரேல் வசமும், கிழக்கு ஜெருசலேம் ஜோர்டானின் கட்டுப்பாட்டிலும் வந்தன. அதன் பிறகு 1967-ல் நடந்த அரபுப் போரில் கிழக்கு ஜெருசலேமையும் இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து, ஒருங்கிணைந்த ஜெருசலேமைத் தங்களுடையதாக இஸ்ரேல் உரிமை கொண்டாடிவருகிறது. இதற்கு பாலஸ்தீனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள். ஒருபுறம் அமெரிக்காவின் ஆதரவுடன் இயங்கும் இஸ்ரேல் ராணுவமும், மறுபுறம் பாலஸ்தீனத்தைத் தனி நாடாக அறிவிக்கக் கேட்கும் `ஹமாஸ் படை' எனும் ஆயுதம் தாங்கிய அமைப்பும் இந்தப் பின்னணியுடன் தங்களுக்குள் மோதிக்கொள்கின்றன.

இந்தச் சூழலில், தற்போதைய ரமலான் மாதத் தொழுகைக்காக ‘அல் அக்‌சா மசூதி’க்குச் செல்லும் இஸ்லாமியர்கள்மீது, இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியிருக்கிறது. கடந்த மார்ச் 25 அன்று மசூதிக்குள் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களை வலுக்கட்டாயமாக இஸ்ரேல் போலீஸார் வெளியேற்றினர். மீண்டும் ஏப்ரல் 4-ம் தேதி ஆயுதங்களுடன் மசூதிக்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவம், இஸ்லாமியர்களை அங்கிருந்து வெளியேற்ற முயன்றது. அப்போது, இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலையடுத்து 300-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் போலீஸார் கைதுசெய்தனர். இதற்கு பதிலடியாக, ஹமாஸ் படையினர், இஸ்ரேலை நோக்கி ராக்கெட் தாக்குதல் நடத்தினர். அந்த ராக்கெட்டை நடுவானில் தகர்த்த இஸ்ரேல் விமானப்படை, ஹமாஸ் படையின் ஆயுதக் கிடங்குமீது தாக்குதல் நடத்தியது. இதனால், அங்கு போர்ப் பதற்றம் அதிகரித்திருக்கிறது.

மீண்டும் போர்ப் பதற்றம்... பதறும் உலக நாடுகள்!
மீண்டும் போர்ப் பதற்றம்... பதறும் உலக நாடுகள்!

பாலஸ்தீனியர்கள் பயங்கரவாத குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டால், அவர்களின் குடியுரிமை ரத்துசெய்யப்படும் என்றும், அவர்களின் வீடுகள் புல்டோசரால் இடிக்கப்படும் என்றும் இஸ்ரேல் அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. தற்போது, அதை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சியில் இஸ்ரேல் இறங்கியிருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. அப்படியொரு நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கினால், நிலைமை மேலும் மோசமடைய வாய்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில், “இரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்” என்று போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

புறா பறக்குமா?!