சமூகம்
அலசல்
அரசியல்
Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
News
ஜூனியர் வாக்கி டாக்கி

பிளாக் அண்ட் வொயிட் காலத்து, பகுத்தறிவுக் கவிஞரின் பெயருக்கு முன்னால் வரும் ஊரில், ஆளுங்கட்சி நகர்மன்ற உறுப்பினராக தமிழ்க் கடவுளின் மறுபெயர்கொண்டவர் இருக்கிறார்

அமைச்சரின் லாரிக்கே அபராதம் விதித்த இன்ஸ்பெக்டர்!
அமைச்சரின் லாரிக்கே அபராதம் விதித்த இன்ஸ்பெக்டர்!

அமைச்சரின் லாரிக்கே அபராதம் விதித்த இன்ஸ்பெக்டர்!

திருப்பமான மாவட்டத்திலுள்ள பிரியாணிக்கு ஃபேமஸான ஊரில், ‘ஹைவே’ பணியில் சீனியர் அமைச்சர் ஒருவரின் லாரிகள் பயன்படுத்தப்படுகின்றன. சமீபத்தில், அவற்றில் ஒரு லாரி, நடுரோட்டில் குறுக்கு மறுக்காக வழியை மறித்து நிற்க... அவதாரக் கடவுள் பெயரைக்கொண்ட போக்குவரத்து இன்ஸ்பெக்டர், பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து பில்லை நீட்டியிருக்கிறார். ஆடிப்போன லாரி ஓட்டுநர், ‘ஓனர் யார் தெரியுமா?’ என்று சொன்ன பிறகுதான் இன்ஸ்பெக்டருக்கு வியர்த்திருக்கிறது. இதற்கு முன்பு 27 முறை டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டவராம் அந்த இன்ஸ்பெக்டர். சமீபத்தில்தான் பிரியாணி ஊருக்குத் தூக்கியடிக்கப்பட்டிருக்கிறார். ஆன்லைன் அபராதம் என்பதால், கேன்சல் பண்ண வழியின்றி, தொகையைக் கட்டி முடித்திருக்கிறதாம் அமைச்சர் தரப்பு. ‘சிங்கம்’ போலீஸ் மாதிரி இல்லை. ‘சாமி’ போலீஸ் மாதிரி அனுசரித்துப்போகிறவர்தான் என்று விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள். ஆனாலும், அமைச்சரின் லாரிக்கே அபராதம் விதித்த இன்ஸின் செயலுக்குப் பரிசாக 28-வது டிரான்ஸ்ஃபரும் ரெடியாகிக் கொண்டிருக்கிறதாம்!

சமாதானப் புறா அனுப்பும் அதிகாரி!
சமாதானப் புறா அனுப்பும் அதிகாரி!

சமாதானப் புறா அனுப்பும் அதிகாரி!

பிளாக் அண்ட் வொயிட் காலத்து, பகுத்தறிவுக் கவிஞரின் பெயருக்கு முன்னால் வரும் ஊரில், ஆளுங்கட்சி நகர்மன்ற உறுப்பினராக தமிழ்க் கடவுளின் மறுபெயர்கொண்டவர் இருக்கிறார். ‘மாந்திரீகம் செய்வதாகக் கூறி, தன்னிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டதாக’ தென்னை நகரத்திலுள்ள பெண் ஒருவர் அண்மையில் இவர்மீது புகாரளித்திருக்கிறார். காவல் கண்காணிப்பு அந்தஸ்திலுள்ள ஒரு தேனான அதிகாரிதான் இந்தப் புகாரை விசாரித்தாராம். அப்போது சம்பந்தப்பட்ட நகர்மன்ற உறுப்பினரிடம் வலுவான தொகையைப் பெற்றுக்கொண்ட அதிகாரி, நகர்மன்ற உறுப்பினருக்கு பதிலாக அவரது கையாள் ஒருவர்தான் மோசடியில் ஈடுபட்டார் என்பதாக வழக்கை மாற்றிவிட்டாராம். புகாரளித்த பெண், இது குறித்து முதல்வர் தனிப்பிரிவுக்குத் தொடர்ந்து புகார் அனுப்பவே... பயந்துபோன அதிகாரி, தனக்குக் கீழ் பணியாற்றிவரும் பெண் அதிகாரியைப் புகார்தாரரின் வீட்டுக்கே அனுப்பி சமாதானத் தூது விட்டுவருகிறாராம்!

‘‘மாசம் பொறந்தா... மாமூல் வந்துடணும்!’’
‘‘மாசம் பொறந்தா... மாமூல் வந்துடணும்!’’

‘‘மாசம் பொறந்தா... மாமூல் வந்துடணும்!’’

முட்டை மாவட்டத்திலுள்ள ராசியான ஊரில் பணியாற்றும் தமிழ்க் கடவுளின் பெயர்கொண்ட அதிகாரியின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கஞ்சா, லாட்டரி, சந்துக்கடை மது விற்பனை, மணல் கடத்தல் எனச் சகலவித சட்டவிரோதச் செயல்களும் தங்கு தடையின்றி கனஜோராக நடந்துவருகின்றனவாம். இந்தச் சட்டவிரோதக் கும்பலிடம் மாமூல் வசூல் செய்வதற்காக மூன்றெழுத்து பெயர்கொண்ட கட்சிப் பிரமுகர் ஒருவரையும் ஏஜென்ட்டாக நியமித்திருப்பவர், ‘மாசம் பொறந்தா, ரூ.5 லட்சத்துக்குக் குறையாமல் மாமூல் வந்துடணும்’ என்று டார்கெட் ஃபிக்ஸ் பண்ணியிருக்கிறாராம். ஏற்கெனவே, தனியார் கோழிப்பண்ணை ஒன்றில் மின்சாரம் தாக்கி ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில், விவகாரத்தை `சப்’பென்று ஆக்க, தமிழ்க் கடவுள் ‘லம்ப்பாக’ தொகை வாங்கிய விவகாரம் வெளியில் கசிந்து சர்ச்சையானது. ஆனாலும் என்ன... ஆளுங்கட்சி இனிஷியல் புள்ளியிடம் அடைக்கலமாகித் தப்பித்தவர், தொடர்ந்து தங்கு தடையின்றி வசூல்வேட்டையாடி வருகிறாராம்!

‘‘ரெண்டு அடி வேணாலும் அடிச்சுக்குங்க... ‘பன்ச்’ அடிக்காதீங்கய்யா!’’
‘‘ரெண்டு அடி வேணாலும் அடிச்சுக்குங்க... ‘பன்ச்’ அடிக்காதீங்கய்யா!’’

‘‘ரெண்டு அடி வேணாலும் அடிச்சுக்குங்க... ‘பன்ச்’ அடிக்காதீங்கய்யா!’’

மேற்கேயுள்ள முக்கிய மாவட்டத்தின் ஆறு எழுத்து காவல் நிலையம் அது. அங்குள்ள ஆய்வாளருக்கு சினிமாமீது தீராக்காதலாம். அண்மையில், ரௌடி ஒருவரிடம் போனில் பேசிய அதிகாரி, ‘‘நீயாக சரணடைந்துவிட்டால் தப்பித்தாய்... நாங்களே வந்து பிடித்தால் அப்புறம் என் பேச்சை நானே கேட்க மாட்டேன்’’ என்று தெறிக்கவிட்ட ஆடியோ வைரலானது. வெளியுலகுக்குத் தன்னை லட்சியவாதியாகக் காட்டிக்கொள்ளும் இந்த அதிகாரி, தனக்கு மாமூல் வெட்டாத நபர்களிடம் பன்ச் டயலாக் பேசியும் மிரட்டுகிறாராம். “நான் போலீஸ் இல்லை பொறுக்கி...”, “டிபார்ட்மென்ட்ல எனக்கு என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டுனு பேரு’’ என்றெல்லாம் ஸ்டைலாகத் துப்பாக்கியைச் சுழற்றிக் காட்டி, இவர் பேசும் பன்ச் டயலாக்குகளுக்கு பயந்தே மக்களும், சக காக்கிகளும் சிதறி ஓடுகிறார்களாம்!

துட்டுக்கு துட்டு... ஜாலிக்கு ஜாலி!
துட்டுக்கு துட்டு... ஜாலிக்கு ஜாலி!

துட்டுக்கு துட்டு... ஜாலிக்கு ஜாலி!

தலைநகரிலுள்ள ‘பட்டு’ போன்ற காவல் நிலையத்தில் பணியாற்றும் வாகை மலர் சூடும் அதிகாரி, பாலியல் புரோக்கர்களுடன் கூட்டுச் சேர்ந்து வசூல் மழையில் நனைகிறாராம். விபசார தடுப்புப் பிரிவு போலீஸார் ரெய்டு சென்றால்கூட, உயரதிகாரிகளிடம் சொல்லி நடவடிக்கை எடுக்கவிடாமல் குறுக்கே விழுந்து தடுத்து விடுகிறாராம். இந்தச் சலுகைக்காக அந்த அதிகாரியை ‘தொழில்’ரீதியாக ரொம்பவே குஷிப்படுத்துகிறார்களாம் புரோக்கர்கள். இந்தக் காவல் சரகத்திலுள்ள துணையான பெரிய அதிகாரியோடு வாகைக்கு நல்ல நட்பு இருப்பதால், எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என விபசார தடுப்புப் பிரிவு போலீஸாரே புலம்புகின்றனர். ஆனால், வாகையோ ‘துட்டுக்கு துட்டு, ஜாலிக்கு ஜாலி’ எனப் புன்னகையோடு வலம் வந்துகொண்டிருக்கிறாராம்!