Published:Updated:

`சுகாதாரப் பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை’ - கேரளாவில் அவசர சட்டம் நிறைவேற்றம்

மருத்துவர்கள் போராட்டம்

சுகாதாரப் பணியாளர்கள் அல்லது சுகாதார நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு எதிராக வன்முறை செயல்களில் ஈடுபடுவோர் அல்லது தூண்டிவிடுவோர் என எவராக இருந்தாலும் ஆறு மாதங்கள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்படும் என இந்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் இதர மருத்துவ பணியாளர்களைத் தாக்கினால் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் வரை அபராதம் உள்ளிட்ட கடுமையான தண்டனை வழங்கும் அவசரச் சட்டத்துக்கு கேரள அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட மருத்துவர் - தாக்கிய குற்றவாளி
கொல்லப்பட்ட மருத்துவர் - தாக்கிய குற்றவாளி

கடந்த வாரம் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் பணியில் இருந்த பயிற்சி மருத்துவ மாணவியை, நோயாளியாக வந்த ஒரு கைதி கடுமையாகத் தாக்கியதில், அந்த மாணவி உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தை அடுத்து அங்கு அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுகாதாரப் பணியாளர்கள் அல்லது சுகாதார நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு எதிராக வன்முறை செயல்களில் ஈடுபடுவோர் அல்லது தூண்டிவிடுவோர் என எவராக இருந்தாலும் ஆறு மாதங்கள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்படும் என இந்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தின் மூலம் தண்டனையை அதிகரிப்பது மட்டுமன்றி இந்த சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகளின் விசாரணையை உரிய காலத்தில் முடிக்க வேண்டும் என்றும், விரைந்து தீர்ப்பு வழங்க மாவட்டம் முழுவதும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் அரசாணையில் கூறபட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை இன்ஸ்பெக்டர் அந்தஸ்துக்குக் குறையாத போலீஸ் அதிகாரி விசாரிக்க வேண்டும் என்றும், எஃப்ஐஆர் பதிவு செய்த 60 நாள்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி மருத்துவர்
பயிற்சி மருத்துவர்

மேலும் துணை மருத்துவ மாணவர்கள், பாதுகாவலர்கள், நிர்வாக பணியாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், சுகாதார நிறுவனங்களில் பணிபுரியும் உதவியாளர்கள் என அனைவருக்கும் இச்சட்டத்தின் கீழ் பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தச் சட்ட வரைவு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அவரின் ஒப்புதலுக்குப் பிறகு அதிகாரபூர்வ சட்டமாகும்.

கொல்லம் பயிற்சி மருத்துவர் உயிரிழந்த விவகாரத்தை கேரள உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து, மருத்துவரை பாதுகாக்கத் தவறிய மாநில அரசு மற்றும் காவல்துறையைக் கடுமையாகச் சாடியது. சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய புதிய நெறிமுறைகளை கொண்டு வருமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.