Published:Updated:

``தானியங்கி இயந்திரம் மூலம் மது விற்கவேண்டிய அவசியம் என்ன?!"- கே.பாலகிருஷ்ணன் கேள்வி

கே.பாலகிருஷ்ணன்

`பா.ஜ.க ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாது’ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:

``தானியங்கி இயந்திரம் மூலம் மது விற்கவேண்டிய அவசியம் என்ன?!"- கே.பாலகிருஷ்ணன் கேள்வி

`பா.ஜ.க ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாது’ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

கே.பாலகிருஷ்ணன்

விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் மே தினவிழா நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு கட்சிக்கொடியை ஏற்றிவைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், "தொழிலாளி வர்க்க தினமான மே நாளில் தமிழ்நாடு முழுவதும் கருத்தாலும், கரத்தாலும் உழைக்கின்ற எல்லா மக்களுக்கும் மே தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

``தானியங்கி இயந்திரம் மூலம் மது விற்கவேண்டிய அவசியம் என்ன?!"- கே.பாலகிருஷ்ணன் கேள்வி

சிகாகோ நகரில் தொடங்கிய மகத்தான போராட்டம், இன்றுவரை தொழிலாளி வர்க்கம் அனுபவிக்கக்கூடிய இன்னல்களுக்கு பல்வேறு போராட்டங்களை நடத்திய காரணத்தால் இன்று பல்வேறு உரிமைகளை நாம் பெற்றிருக்கிறோம். 'உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள். நாம் இழப்பதற்கு ஒன்றுமில்லை, அடிமை விலங்கைத் தவிர. ஆனால், அடைவதற்கோ ஓர் பொன்னுலகம் காத்திருக்கிறது’ என்ற காரல் மார்க்ஸின் அறைகூவலுக்கு இணங்க இந்த மே தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது.

இந்தியாவிலேயே முதன்முதலாக மே தினத்தைக் கொண்டாடிய பெருமை கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் சிங்காரவேலரையே சாரும். கார்ப்பரேட் முதலாளிகளுக்கு காவடி தூக்கும் அதானியின் ஏஜென்டாக, மக்களை மதத்தின் பெயரால் பிளவுபடுத்துகிற மதவெறி ஆட்சி நடத்துகிற பா.ஜ.க-வை வீழ்த்துகிற மகத்தான கடமையை நிறைவேற்றுவோம் என்று இந்த மே தினநாளில் உறுதியேற்க வேண்டும்.

மே தினம்
மே தினம்

சமீபத்தில் சட்டமன்றத்தில் தொழிற்சாலை சட்டத் திருத்தம் வந்தபோது சி.பி.எம் எம்.எல்.ஏ-க்கள் வெளிநடப்பு செய்தனர். மேலும் சி.பி.ஐ., வி.சி.க ஆகிய கட்சிகளும் வெளிநடப்பு செய்தன. மேலும், ம.தி.மு.க., தமிழக வாழ்வுரிமை கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.

எனவே, அதைத் திரும்பப் பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக்கொண்டோம். இதையடுத்து தமிழக முதல்வர் மே தினமான இன்று அந்த சட்டத்தைத் திரும்பப்பெற்றிருக்கிறார். அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். அதேவேளை, சமூகத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருக்கக் கூடாது. அதேபோல சாதிய ஏற்றத்தாழ்வுகள் கொடிக்கட்டி பறந்துகொண்டிருக்கிறது.

கொடியேற்றுதல்
கொடியேற்றுதல்

உழைப்பாளிகளாக இருக்கிற பட்டியலின மக்களுக்கு அனைவருக்கும் சமமான வாழ்க்கை என்பது கனவாகவே இருக்கிறது. இங்கு நிலவும் பொருளதார ஏற்றத்தாழ்வு ஒழிக்கப்பட்டு, சமதர்ம சமுதாயத்தை அமைக்கவே விரும்புகிறோம், அதேபோல சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து ஒரு சமுத்துவ வாழ்க்கையை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும்.

சென்னையில் கொண்டுவரப்பட்டிருக்கும் தானியங்கி இயந்திரம் மூலம் மது விற்பனை செய்வது தேவையற்ற ஒன்று. தானியங்கி இயந்திரம் மூலம் மது விற்கவேண்டிய அவசியம் என்ன... படிப்படியாக மதுப்பழக்கதை பொதுமக்கள் குறைப்பதற்குத் தேவையான முயற்சியை தமிழக அரசு செய்திட வேண்டும். எப்போது தேர்தல் நடந்தாலும் தமிழகத்தைப் பொறுத்தவரை மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தேர்தலைச் சந்திக்கத் தயாராக இருக்கிறது. அடுத்த மாதமே தேர்தல் வைத்தாலும் 40 தொகுதியிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றிபெறும். தமிழகத்தில் ஒரு தொகுதியில்கூட பா.ஜ.க வெற்றி பெற முடியாது.

சிபிஎம்
சிபிஎம்

இந்தியா முழுவதும் பா.ஜ.க-வின் தோல்விக் கணக்கு எழுத ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் நடைபெறவிருக்கும் தேர்தலில் பா.ஜ.க படுதோல்வியடைவது உறுதி. அந்தக் கட்சியில் இருப்பவர்கள் எல்லாம் காங்கிரஸ் உள்ளிட்ட வேறு கட்சிக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே இமாச்சல பிரதேச மாநிலத் தேர்தலில் தோல்வி. டெல்லியில் மாநகராட்சித் தேர்தலில் தோல்வி, இனி கர்நாடக மாநிலத்தில் தோல்வி என இனிமேல் எந்தத் தேர்தலாக இருந்தாலும் பா.ஜ.க-வுக்குத் தோல்வி முகம்தான் என்பது எழுதப்படாத உண்மையாக இருக்கும்" என்றார்.