Published:Updated:

உ.பி-யில் 17 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட சிறுமி... 32 வயதில் டெல்லியில் கண்டுபிடித்த போலீஸார்!

போலீஸ்

உத்தரப்பிரதேசத்தில் 2006-ல் கடத்தப்பட்ட சிறுமி 17 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டார்.

Published:Updated:

உ.பி-யில் 17 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட சிறுமி... 32 வயதில் டெல்லியில் கண்டுபிடித்த போலீஸார்!

உத்தரப்பிரதேசத்தில் 2006-ல் கடத்தப்பட்ட சிறுமி 17 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டார்.

போலீஸ்

உத்தரப்பிரதேசத்தில் 17 ஆண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்ட சிறுமியொருவர், தற்போது 32 வயதில் டெல்லியில் போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார். இது குறித்து போலீஸார் கூறிய தகவலின்படி, சம்பந்தப்பட்ட பெண், உத்தரப்பிரதேசத்தில் 2006-ம் ஆண்டு சிறுமியாக இருந்தபோது கடத்தப்பட்டிருக்கிறார்.

17 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சிறுமி கண்டுபிடிப்பு
17 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சிறுமி கண்டுபிடிப்பு

இந்த நிலையில், மே 22-ம் தேதியன்று டெல்லியின் கோகல்புரியில் போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டார். இது குறித்து பேசிய காவல்துறை அதிகாரி ஷஹ்தரா ரோஹித் மீனா, ``2006-ம் ஆண்டு சிறுமி கடத்தப்பட்டார். மே 22 அன்று, சீமாபுரி காவல் நிலையத்தின் ரகசிய தகவலின் பேரில், 17 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட சிறுமி, தற்போது 32 வயதாகும் அந்தப் பெண்ணை போலீஸார் கண்டுபிடித்தனர். சிறுமியின் பெற்றோர் இது தொடர்பாக புகாரளித்ததை அடுத்து வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

விசாரணையில், சிறுமி கடத்தப்பட்டதையடுத்து, உத்தரப்பிரதேசத்தின் செர்டிஹ் மாவட்டம் பாலியா என்ற கிராமத்தில் தீபக் என்ற நபருடன் வசித்ததாகவும், அதன் பிறகு சில பிரச்னைகளுக்குப் பிறகு தீபக்கை விட்டுவிட்டு கோகல்புரியில் வாடகை வீட்டில் வசிக்கத் தொடங்கியதாகவும் அந்தப் பெண் தெரிவித்தார்" என்று கூறினார்.

போலீஸ்
போலீஸ்

மேலும் ஷஹ்தரா ரோஹித் மீனாவின் கூற்றுப்படி, கடத்தப்பட்ட குழந்தைகள், பெரியவர்கள் என காணாமல் போனவர்கள் மொத்தம் 417 பேர் இந்த ஆண்டில் மீட்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.