Published:Updated:

`அலுவல் பணிகளில் ஆங்கிலம் இருக்கக் கூடாது’ - இத்தாலியின் புதிய சட்டம் என்ன சொல்கிறது?

இத்தாலி

இத்தாலியில் அரசு, வணிகம் மற்றும் பொது வாழ்வில் பிற நாட்டு மொழிகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் விதமாக அந்நாட்டு அரசு புதிய மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது.

Published:Updated:

`அலுவல் பணிகளில் ஆங்கிலம் இருக்கக் கூடாது’ - இத்தாலியின் புதிய சட்டம் என்ன சொல்கிறது?

இத்தாலியில் அரசு, வணிகம் மற்றும் பொது வாழ்வில் பிற நாட்டு மொழிகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் விதமாக அந்நாட்டு அரசு புதிய மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்தாலி

அரசு, வணிகம் மற்றும் பொது வாழ்வில் அந்நிய மொழிகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க இத்தாலிய அரசாங்கம் புதிய சட்டத்தை முன்மொழிந்துள்ளது. இந்த வரைவு மசோதா குறிப்பாக ஆங்கில பயன்பாட்டை தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது இத்தாலிய மொழியை இழிவுபடுத்துகிறது மற்றும் சிதைக்கிறது என்று கூறி இப்படியொரு மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட சட்டத்துக்கு, பிறகு இத்தாலியில் செயல்படும் வெளிநாட்டு வணிகங்களின் வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் மற்றும் உள் கட்டுப்பாடுகள் இத்தாலிய மொழியில் இருக்க வேண்டும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆங்கிலம்
ஆங்கிலம்

1994-ல் பிரான்ஸ் இதேபோன்ற சட்டத்தை அறிமுகப்படுத்தியது, இது நீண்ட காலமாக நடைமுறைப்படுத்த முடியாமல் இருந்தது. ஏறக்குறைய 30 ஆண்டுகளாக பிரான்ஸில் இப்படியொரு சட்டம் இருந்தாலும், அங்கு செயல்படும் அனைத்து பன்னாட்டு நிறுவனங்களும் சட்டத்தை மீறுவதாகக் கருதப்படுகிறது.

சர்வதேச வணிகம் மற்றும் வர்த்தகத்தில் ஆங்கிலம் சந்தேகத்துக்கு இடமின்றி ஆதிக்கம் செலுத்தும் மொழியாக உள்ளது.

உலக அளவில், அனைத்து பன்னாட்டு நிறுவனங்களில் பாதிக்கும் மேற்பட்டவை தங்கள் சர்வதேச செயல்பாடுகளில் ஆங்கிலத்தைப் பயன்படுத்துகின்றன. ஜப்பானின் Rakuten, பிரான்சின் Sodexo, பின்லாந்தின் Nordea மற்றும் மெக்ஸிகோவின் Cemex போன்ற நிறுவனங்கள் ஆங்கிலத்தை பொதுவான பெருநிறுவன மொழியாக அங்கீகரித்துள்ளன. உலக அளவில் சுமார் 150 கோடி மக்கள் ஆங்கிலம் பேசுவதாக மதிப்பிடப் பட்டுள்ளது, எனவே, சர்வதேச வணிகத்தில் அதன் ஆதிக்கம் நீங்கவில்லை.

இத்தாலி நாடாளுமன்றம்
இத்தாலி நாடாளுமன்றம்

இத்தாலியில் முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டத்தின்படி அந்நாட்டில் அதிகாரபூர்வ தகவல்தொடர்புகளில் எந்தவொரு வெளிநாட்டு மொழியையும், குறிப்பாக ஆங்கிலத்தைப் பயன்படுத்தினால், ஒரு லட்சம் யூரோ (ரூ.89 லட்சம்) வரை அபராதம் விதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த மசோதா நாடாளுமன்ற விவாதத்துக்குப் பிறகே, அமல்படுத்தபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.