Published:Updated:

"சிறையிலிருப்பவர்களில் 22% பேர் குற்றவாளிகள்; மற்றவர்கள்..?" - இந்திய நீதி அறிக்கை சொல்வதென்ன?

சிறை ( சித்திரிப்புப் படம் )

சிறையிலிருப்பவர்களில் 22 சதவிகிதம் பேர் மட்டுமே குற்றவாளிகள் என்றும், 77 சதவிகிதம் பேர் விசாரணைக்கு உட்பட்டவர்கள் அல்லது விசாரணை முடியும்வரை காத்திருக்கும் நபர்கள் என்றும் இந்திய நீதி அறிக்கையின் தரவுகளில் கூறப்பட்டிருக்கிறது.

Published:Updated:

"சிறையிலிருப்பவர்களில் 22% பேர் குற்றவாளிகள்; மற்றவர்கள்..?" - இந்திய நீதி அறிக்கை சொல்வதென்ன?

சிறையிலிருப்பவர்களில் 22 சதவிகிதம் பேர் மட்டுமே குற்றவாளிகள் என்றும், 77 சதவிகிதம் பேர் விசாரணைக்கு உட்பட்டவர்கள் அல்லது விசாரணை முடியும்வரை காத்திருக்கும் நபர்கள் என்றும் இந்திய நீதி அறிக்கையின் தரவுகளில் கூறப்பட்டிருக்கிறது.

சிறை ( சித்திரிப்புப் படம் )

அண்மையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, உச்ச நீதிமன்றத்தில் 69,000-க்கும் மேற்பட்ட வழக்குகளும், உயர் நீதிமன்றங்களில் 59 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகளும், மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் 4.32 கோடிக்கும் மேற்பட்ட வழக்குகளும் நிலுவையிலிருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

இந்த நிலையில், சிறையிலிருப்பவர்களில் 22 சதவிகிதம் பேர் மட்டுமே குற்றவாளிகள் என்றும், 77 சதவிகிதம் பேர் விசாரணைக்கு உட்பட்டவர்கள் அல்லது விசாரணை முடியும்வரை காத்திருக்கும் நபர்கள் என்றும் சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்திய நீதி அறிக்கையின் தரவுகளில் கூறப்பட்டிருக்கிறது.

சிறைக்கு வருபவர்களின் எண்ணிக்கை, 2010-ல் 2.4 லட்சமாக இருந்ததிலிருந்து, 2021-ல் 4.3 லட்சம் என 78 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. அதோடு, அந்தமான் நிக்கோபார் தீவுகள், அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், திரிபுரா, மத்தியப் பிரதேசம் தவிர, மற்ற அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில், விசாரணைக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை 60 சதவிகிதத்தைத் தாண்டியிருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 139 சிறைகளில், 15 சிறைகளில் 100 சதவிகிதத்துக்கும் மேல் சிறைவாசிகள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சிறை
சிறை

மேலும், ஒவ்வொரு 200 கைதிகளுக்கும் ஒரு சீர்திருத்த அதிகாரி என்ற அளவுகோலைப் பூர்த்திசெய்ய, நாடு முழுவதும் குறைந்தது 2,770 சீர்திருத்தப் பணியாளர்களின் பணியிடங்கள் இருக்க வேண்டும் என்றும், ஆனால் தேசிய அளவில், சராசரியாக ஒரு சீர்திருத்தப் பணியாளர் 625 கைதிகளுக்குச் சேவை செய்கிறார் என்றும், 36 சதவிகித சீர்திருத்தப் பணியாளர் இடங்கள் காலியாக இருப்பதாகவும் அறிக்கை கூறுகிறது.

கைது
கைது

தற்காலிக ஜாமீன் அல்லது அவசரகால பரோலில் கைதிகள் விடுவிக்கப்பட்டபோதிலும் சிறைவாசிகளின் எண்ணிக்கை அதிகரித்ததற்குக் காரணம், ஒன்று கைதுசெய்யப்படுதல் அதிகரிப்பது அல்லது நீதிமன்றங்கள் சரியாகச் செயல்படவில்லை என இந்த அறிக்கை எடுத்துரைப்பதாகச் சொல்லப்படுகிறது.