Published:Updated:

`ஏன் சீட் பெல்ட் போடலை?' - ஸ்கூட்டியில் வந்தவருக்கு அபராதம் விதித்து `ஷாக்’ கொடுத்த போலீஸ்!

டிராஃபிக் போலீஸ் அபராதம்

பீகாரில் ஸ்கூட்டியில் வந்தவர் சீட் பெல்ட் போடவில்லை எனக் கூறி, போக்குவரத்து போலீஸார் 1,000 ரூபாய் அபராதம் விதித்த சம்பவம் பலரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது.

Published:Updated:

`ஏன் சீட் பெல்ட் போடலை?' - ஸ்கூட்டியில் வந்தவருக்கு அபராதம் விதித்து `ஷாக்’ கொடுத்த போலீஸ்!

பீகாரில் ஸ்கூட்டியில் வந்தவர் சீட் பெல்ட் போடவில்லை எனக் கூறி, போக்குவரத்து போலீஸார் 1,000 ரூபாய் அபராதம் விதித்த சம்பவம் பலரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது.

டிராஃபிக் போலீஸ் அபராதம்

பொதுவாகவே சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் வருகிறவர்கள் ஹெல்மெட் அணியவில்லையென்றாலோ, குடித்துவிட்டு வந்தாலோ, லைசென்ஸ் இல்லாமல் வந்தாலோதான் டிராஃபிக் போலீஸ் அபராதம் விதிப்பார்கள். அதேபோல காரில் வருகிறவர்கள் சீட் பெல்ட் போடவில்லையென்றாலோ, குடித்துவிட்டு வந்தாலோ போலீஸ் அபராதம் விதித்துப் பார்த்திருப்போம்.

டிராஃபிக் போலீஸ்
டிராஃபிக் போலீஸ்
மாதிரிப்படம்

கடந்த ஆண்டுகூட, காரில் பின்பக்கம் இருப்பவர்களும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருந்தார். இப்படியிருக்க பீகாரில் ஸ்கூட்டியில் வந்தவர் சீட் பெல்ட் போடவில்லையென ஜா (jha) என்பவருக்கு போக்குவரத்து போலீஸ் 1,000 ரூபாய் அபராதம் விதித்திருக்கும் செயல் பலரை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது.

இது குறித்து ஊடகத்திடம் பேசிய ஜா, ``என்னிடம் ஒரு ஸ்கூட்டி இருக்கிறது. ஏப்ரல் 27 அன்று ரயிலில் நான் வாரணாசிக்குச் சென்றுகொண்டிருந்தபோது, எனக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக மெசேஜில் ஒரு ரசீது வந்தது. காரணம் என்னவென்று அதைப் பார்த்தபோது, `2020-ம் ஆண்டு அக்டோபரில் சீட் பெல்ட் அணியவில்லை’ என்று அதில் கூறப்பட்டிருக்கிறது. மேலும், அபராதம் ஏற்கெனவே டெபாசிட் செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், எனக்குத் தெரிந்தவரை அப்படி எதுவும் நடக்கவில்லை" என்று கூறினார்.

டிராஃபிக் போலீஸ் அபராதம்
டிராஃபிக் போலீஸ் அபராதம்

பின்னர் இது குறித்து பேசிய பீகார் போக்குவரத்துக் காவல்துறை அதிகாரி பல்பீர் தாஸ், ``ஜா பெற்ற ரசீது என்பது நேரடியாக வழங்கப்பட்டது. அத்தகைய ரசீதுகளை தற்போது இ-ரசீதாக (e-challans) மாற்றும் பணிகளில் நாங்கள் ஈடுபட்டுவருகிறோம். தற்போது ஜா விவகாரத்தில் தவறு எங்கே நடந்திருக்கிறது என்பதைச் சரிபார்க்கிறோம்" என்றார்.

இதே போன்ற ஒரு சம்பவமாக, கடந்த பிப்ரவரியில் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது சீட் பெல்ட் அணியவில்லை என அபிசேக் கர் என்பவருக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.