லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

கீழடி... தமிழரின் தாய்மடி!

கீழடி அருங்காட்சியகம்
பிரீமியம் ஸ்டோரி
News
கீழடி அருங்காட்சியகம்

சர்வதேச தொல்லியல் அறிஞர்களின் பகுப்பாய்வுகள், கரிம ஆய்வுகள் மூலம் கீழடி நாகரிகம் 2,600 வருடம் பழைமையானது என உறுதி செய்யப்பட்டது, வரலாற்றுத் தருணம்.

“அருங்காட்சியகத்துக்குள்ள கால் வெச்ச துமே கால இயந்திரத்தில் 2,600 வருடங்கள் பின்னோக்கிப் போனதுபோல ஓர் உணர்வு” என்று வங்கி ஊழியரான இளைஞர் நிவாஸ் சொன்னது மிகை அல்ல. அங்கு வந்திருந்த அனைவருமே வயது வேறுபாடு இல்லாமல் இதேபோன்ற சிலிர்ப்பூட்டும் அனுபவத்துடன்தான் இருந்தார்கள்.

மதுரைக்கு அருகில் இருந்தாலும் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலுகாவில் நான்கு வழிச்சாலையை ஒட்டினாற்போல் அமைந் துள்ள கீழடி அருங்காட்சியகம், தமிழகத்துக்குப் புதியதோர் அடையாளமாக மட்டுமல்ல, பண்பாட்டுப் பெருமையாகவும் எழுந்து நிற்கிறது. உலகத் தமிழர்களின் பண்பாட்டுத் தலமாக மாறியிருக்கும் கீழடியில் சமீபத்தில் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தைக் காண தமிழகம் முழுவதுமிருந்து மக்கள் ஆர்வத்துடன் வந்து கொண்டிருக்கிறார்கள்.

கீழடி
கீழடி
கீழடி
கீழடி

தொல்லியல் அகழாய்வின் உச்ச வெற்றி, கீழடி. இங்கு மண் தோண்டப்பட்ட கதையே பல மாமாங்கம் நீளமானது. 1980-களில் இங்கு பணியாற்றிய அரசுப்பள்ளி ஆசிரியர் பால சுப்பிரமணியனுக்கு, சில தொல்பொருள்கள் மாணவர்கள் மூலம் கிடைக்க, கீழடி மண் ணுக்குக் கீழ் மிகப்பெரிய அதிசயம் இருக்கிறது என்ற உறுதி செய்தவர் அதை வெளிக்கொண்டு வர மத்திய, மாநில அரசையும், தொல்லியல் துறையையும் வலியுறுத்தினார். நீண்ட காலத் துக்குப் பின் 2014-ல் மத்திய தொல்லியல்துறை நிபுணர் அமர்நாத் தலைமையில் வைகை நதிக்கரை நாகரிக ஆய்வு தொடங்கியது; அதிசயங்கள் வெளிவர ஆரம்பித்தன. பின்பு சில அரசியல் பிரச்னைகளால் அவர் மாற்றப் பட்டு மூன்று வருடங்களுடன் கீழடி ஆய்வை முடித்துக்கொண்டது மத்திய தொல்லியல் துறை. பின்னர் தமிழகத் தொல்லியல் துறை நான்காம் கட்ட அகழாய்வினை 2017-ல் தொடங்கியது. அந்தாண்டு மட்டும் 5,820 தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. `கீழடி தமிழர் நாகரிகத்தின் தாய்மடி’ என்பது உறுதியானது. கீழடியைச் சுற்றி மணலூர், கொந்தகை, அகரம் ஆகிய ஊர்களிலும் அகழாய்வு நடத்தப்பட்டு ஆயிரக்கணக்கான பொருள்கள் எடுக்கப்பட்டன.

கீழடி
கீழடி
கீழடி
கீழடி

சர்வதேச தொல்லியல் அறிஞர்களின் பகுப்பாய்வுகள், கரிம ஆய்வுகள் மூலம் கீழடி நாகரிகம் 2,600 வருடம் பழைமையானது என உறுதி செய்யப்பட்டது, வரலாற்றுத் தருணம். அந்த உண்மையை, பெருமையை மக்களுக்கு வெளிப்படுத்தும் வகையில் கீழடியில் இந்த அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூர் முதல் அழகன்குளம் வரை தமிழகத்தின் பல இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடந்து பல அரிய பொருள்கள் கண்டெடுக் கப்பட்டுள்ளன. அவையெல்லாம் எங்கே இருக்கின்றன என்று மக்களுக்குத் தெரி யாது. ஆனால், சமகாலத்தில் நம் கண் முன்னே ஆய்வு நடத்தி கண்டெடுக்கப் பட்ட ஆயிரக்கணக்கான பொருள்கள், அதே நிலத்திலேயே காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளது பிரமிப்பையும் சிலிர்ப்பையும் ஏற்படுத்துகிறது. சர்வதேச நகரங்களில் அமைந்துள்ள பிரமாண்ட அருங்காட்சி யகங்களுக்கு நிகராக 2 ஏக்கர் பரப்பில் ரூ. 18,43,00,000 செலவில் 31,000 சதுர அடியில், செட்டி நாட்டு கட்டடக்கலை பாணியில் அமைந்துள்ளது அருங் காட்சியம். நாட்டு ஓடுகள் வேயப் பட்டு, தரைக்கு ஆத்தங்குடி கற்கள் பதிக்கப்பட்டு, முற்றங்கள், மரத் தூண்களுடன் திண்ணை வைத்த வீடுகள்போல கட்டடங்கள் வரிசையாக அமைந்துள்ளன. ‘மதுரை யும் கீழடியும்’, ‘வேளாண்மையும் நீர் மேலாண்மையும்’, ‘கலம் செய்கோ’, ‘ஆடையும் அணிகலன்களும்’, ‘கடல் வணிகம்’, ‘வாழ்வியல்’ என ஆறு தலைப்புகளில் இந்தக் கட்டங்களை அமைத்துள்ளனர்.

கீழடி
கீழடி
கீழடி
கீழடி

வளாகத்தின் உள்ளே, அகழாய்வில் கண்டு பிடிக்கப்பட்ட செங்கல் கட்டுமானம், மண் பாண்டங்கள், யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட பொருள்கள், முதுமக்கள் தாழிகள், விளையாட்டுப் பொருள்கள், வட்ட சில்லுகள், மணிகள், சுடுமண் சிற்பங்கள், தங்கக் காசுகள், அணிகலன்கள், இரும்புக் கருவிகள் என ஆயிரக்கணக்கான பொருள்கள் பார்வைக்கு அழகாக வைக்கப் பட்டுள்ளன. மேலும் ஆடியோ விவரணைகள், டிஜிட்டல் திரை வழி ஒளிபரப்பு என தொல்லியல் வரலாறு, தமிழகத்தில் தொல்லியல் ஆய்வுகள் நடக்கும் இடங்கள் என பார்வையாளர்களுக்குத் தெரியப்படுத்துகிறார்கள். முழுமையாகப் பார்த்து முடிக்க குறைந்தபட்சம் 3 மணி நேரமாகும். களைப்பில் பசியாற சிறுதானிய சிற்றுணவு விற்பனைக் கூடமும் உள்ளே அமைந்துள்ளது. மக்களுக்கு உதவி செய்ய தொல்லியல்துறை ஊழியர்களுடன், உள்ளூர் மக்கள் 26 பேர் பணியமர்த்தப் பட்டுள்ளனர்.

அருங்காட்சி அலுவலர்கள், ‘`இப்போது சாதாரண நாள்களில் தினமும் 2,000 பேரும், விடுமுறை தினங்களில் 4,000 பேரும் வருகிறார்கள். விடுமுறை காலம் என்பதால் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மதுரை யிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் கீழடி அமைந்துள்ளதால் இங்கு ஹோட்டல்கள், விடுதிகள் அமைக்கப்பட்டு எதிர்காலத்தில் சுற்றுலா தலமாக மாறும் வாய்ப்பும் உள்ளது’’ என்றார்கள். கீழடிக்கு வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள், நீதிபதிகள், அரசு உயர்பதவியில் உள்ளவர்கள், கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் எனப் பல தரப்பினரும் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்.

தமிழர் நாகரிகம் அரியணையில் அமர்ந்திருக் கிறது கீழடியில்!

``தமிழர் அறிவு மெய்சிலிர்க்க வைக்குது!”

கீழடிக்கு தினமும் மக்கள் வந்து குவிகிறார்கள். தற்போது நுழைவுக் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குக் கட்டணச்சலுகை உண்டு. அங்கு வந்திருந்தவர்களிடம் பேசினோம்...

அரசுப்பள்ளி மாணவர்களுடன் ஆசிரியர்கள் அமுதா மற்றும் ஆறுமுகம்
அரசுப்பள்ளி மாணவர்களுடன் ஆசிரியர்கள் அமுதா மற்றும் ஆறுமுகம்

``எங்களோட கமுதி, புத்திருத்தி அரசுப்பள்ளி மாணவர் களை சொந்தச் செலவுல இங்க கூட்டிட்டு வந்தோம். வருங்கால சந்ததி ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இடம் இது. வியப்பும் பெருமையுமா ஆகிட்டாங்க!”

ஜானகிராமன்
ஜானகிராமன்

‘`நான் கடலூர் மாவட்டம், சிதம்பரத் திலிருந்து நண்பருடன் வந்தேன். இங்க வந்து பார்க்கப் பார்க்க தமிழர் அறிவு மெய்சிலிர்க்க வைக்குது. எவ்வளவு நாகரிகமா வாழ்ந்திருக்காங்க!” - ஜானகிராமன்

பள்ளி மாணவர் கிஷோர்
பள்ளி மாணவர் கிஷோர்

``எங்க ஸ்கூல்ல கீழடியை பத்தி டீச்சர்ஸ் சொன்னாங்க. ரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நம்ம அரசர்களும், மக் களும் பயன்படுத்தின பொருள் களைப் பார்த்தப்போ டைம் டிராவல் பண்ணின மாதிரி த்ரில்லா இருந்துச்சு!” - பள்ளி மாணவர் கிஷோர்

ரிதன்யா குடும்பத்தினர்
ரிதன்யா குடும்பத்தினர்

‘`ஈரோட்டுல இருந்து வர்றோம்ங்க. வழக்கமான அருங் காட்சியகம் போல இருக்கும்னு நெனைச்சோம். ஆனா பார்த்துட்டு அசந்துட்டோம்ங்க. கடுமையான உழைப்போட, பிரமாண்டமா ஆவணப்படுத்தியிருக்காங்க!” - ரிதன்யா குடும்பத்தினர்

மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள்
மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள்

``தொல்லியல்னா உடைஞ்ச ஓடு, முதுமக்கள் தாழி, மண்பாண்டம்னு இருக்கும்னு நினைச்சு வந்தோம். உள்ள போனா... அரச காலத்துக்கே போயிட்ட மாதிரி இருந்துச்சு. ஒவ்வொரு பொருளையும் அதற்கான விவரங் களோட அருமையா காட்சிப்படுத்தியிருக்காங்க. டிஜிட்டலைஸும் பண்ணியிருக்காங்க!” - மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள்