Published:Updated:

`பிரதமரின் புத்தகம் வாழ்வின் வளர்ச்சிக்கு உதவும்' - ஆளுநர் ரவி பேச்சு

ஆளுநர் ரவி

"வாழ்வில் வெற்றிபெற நேரத்தை மேலாண்மை செய்வது மிகவும் முக்கியம்" என ஆளுநர் ரவி பேசினார்.

`பிரதமரின் புத்தகம் வாழ்வின் வளர்ச்சிக்கு உதவும்' - ஆளுநர் ரவி பேச்சு

"வாழ்வில் வெற்றிபெற நேரத்தை மேலாண்மை செய்வது மிகவும் முக்கியம்" என ஆளுநர் ரவி பேசினார்.

Published:Updated:
ஆளுநர் ரவி

சென்னை கிண்டியிலிருக்கும் ராஜ்பவனில் பிரதமர் நரேந்திர மோடி ஆங்கிலத்தில் எழுதிய ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ என்ற நூலின் தமிழாக்கத்தை வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற ஆளுநர் ரவி, நூலின் முதல் பிரதியை வெளியிட்டார். அதை சென்னை‌ ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, கேந்திரிய வித்யாலயா சங்கதன் துணை ஆணையர் ருக்மணி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். பின்னர், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

மோடி
மோடி

விழாவில் பேசிய ஆளுநர் ரவி, "பொதுத்தேர்வு எழுதுவதற்கு மட்டுமின்றி உங்கள் வாழ்வின் வளர்ச்சிக்கும் இந்தப் புத்தகம் உதவிகரமாக இருக்கும். பிரதமர் மோடி பல்வேறு கடினமான சூழல்களைக் கடந்துவந்திருக்கிறார். அவையே நாட்டை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டுசெல்ல அவருக்கு வழிகாட்டுதலாக இருக்கிறது. அதன் விளைவாக நாடு தற்போது பொருளாதாரம், தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் கண்டிருக்கிறது.

இந்தியாவின் எதிர்காலம் வருங்கால தலைமுறையான உங்கள் கைகளில்தான் இருக்கிறது. இளைஞர்களின் வளர்ச்சியே நாட்டையும் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். தேர்வைக் கண்டு பயப்படவேண்டியதில்லை. முறையாகத் திட்டமிட்டு படித்தால் வெற்றி பெறலாம். அதற்கான எளிய வழிமுறைகளை இந்த நூல் உங்களுக்கு எடுத்துரைக்கும். குழந்தைகள் வெற்றி பெறுவதற்குப் பெற்றோர்களின் பங்களிப்பும் அவசியம். வாழ்வில் வெற்றிபெற நேரத்தை மேலாண்மை செய்வது மிகவும் முக்கியம்" என்றார்.

பின்னர் பேசிய ஐஐடி இயக்குநர் காமகோடி, "மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு குறித்த பயம் இருக்கும். அதைக் கடந்து செல்ல இந்தப் புத்தகம் உதவியாக இருக்கும். ஒரு தேர்வு உங்கள் வாழ்க்கையை முடிவு செய்யாது என்பதை நினைவில்கொள்ள வேண்டும். இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் பல்வேறு வாய்ப்புகள் நமக்கு இருக்கிறது. அதை முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்றார்.