Published:Updated:

``திருமண மண்டபங்கள், மைதானங்களில் மதுபானம் பரிமாறலாம்" - அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு

ஸ்டாலின்

ஒரு நாள் நிகழ்ச்சியாக இருந்தாலும், சிறப்பு அனுமதி பெற்று மது விருந்து பரிமாறலாம்.

Published:Updated:

``திருமண மண்டபங்கள், மைதானங்களில் மதுபானம் பரிமாறலாம்" - அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு

ஒரு நாள் நிகழ்ச்சியாக இருந்தாலும், சிறப்பு அனுமதி பெற்று மது விருந்து பரிமாறலாம்.

ஸ்டாலின்

திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் அரசு அனுமதி பெற்று மது பரிமாறலாம் எனத் தமிழக அரசின் அரசிதழில் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அரசாணையில், "திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள், மைதானங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் சிறப்பு அனுமதி பெற்று மது பரிமாறலாம். ஒரு நாள் நிகழ்ச்சியாக இருந்தாலும், சிறப்பு அனுமதி பெற்று மது விருந்து பரிமாறலாம்.

அரசாணை
அரசாணை

இதற்கு மாவட்ட ஆட்சியர், மதுவிலக்கு துணை ஆணையர் சிறப்பு அனுமதியை வழங்குவார்கள். பி.எல் 2 எனும் சட்டத்தின் சிறப்பு அனுமதி பெற்று மது விருந்து நிகழ்ச்சிகள் நடத்தப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனால்  டாஸ்மாக்கைத் தவிர பார்கள், நட்சத்திர விடுதிகளில் வழங்கப்பட்டுவந்த மதுபானங்கள் இனி திருமணங்கள், விளையாட்டுக் கூடங்களிலும் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த அறிவிப்பு தொடர்பான கட்டுப்பாடுகளில் அந்தந்த பகுதியிலுள்ள  காவல்துறையினர் தேவைப்படும் பட்சத்தில் கண்காணிக்கலாம் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தச் சிறப்பு அனுமதிக்குக் கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.