Published:Updated:

`தொழிலாளர்களுக்கு 12 மணி நேர வேலை; மசோதா நிறைவேற்றிய திமுக அரசு!' - விகடன் கருத்துக்கணிப்பு முடிவு

விகடன் கருத்துக்கணிப்பு

எதிர்க்கட்சிகள், ஆளும் கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்புகளுக்கிடையே, தொழிலாளர்களின் 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றும் மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

Published:Updated:

`தொழிலாளர்களுக்கு 12 மணி நேர வேலை; மசோதா நிறைவேற்றிய திமுக அரசு!' - விகடன் கருத்துக்கணிப்பு முடிவு

எதிர்க்கட்சிகள், ஆளும் கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்புகளுக்கிடையே, தொழிலாளர்களின் 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றும் மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

விகடன் கருத்துக்கணிப்பு

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வெள்ளிக்கிழமையன்று முடிவடைந்தது. இதில் கடைசி நாளன்று, எதிர்க்கட்சிகள், ஆளும் கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்புகளுக்கிடையே, தொழிலாளர்களின் 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றும் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், கம்யூனிஸ்ட், ம.தி.மு.க, வி.சி.க உள்ளிட்ட ஆளும் கூட்டணிக் கட்சிகளும் இந்த மசோதாவைத் திரும்பப்பெற வலியுறுத்திவருகின்றன.

முதல்வர் மு.க. ஸ்டாலின்
முதல்வர் மு.க. ஸ்டாலின்

மேலும், மசோதா குறித்து அரசுத் தரப்பிலிருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் பன்னாட்டு நிறுவனங்களின் நெகிழ்வுத் தன்மைக்காக இது கொண்டுவரப்படுவதாகவும், விருப்பப்படும் தொழிலாளர்கள் இதைச் செய்யலாம் என்றும் விளக்கமளித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் இத்தகைய முடிவு குறித்து விகடன் வலைதளப் பக்கத்தில் வாசகர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில், `வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதாவை தி.மு.க அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றியிருப்பது...' எனக் கேள்வி கொடுக்கப்பட்டு, `தொழிலாளர் நலனுக்கு விரோதமானது, வரவேற்கத்தக்கது, உழைப்புச் சுரண்டலுக்கு வழிவகுக்கும்' என்ற மூன்று விருப்பங்கள் தரப்பட்டிருந்தன.

விகடன் கருத்துக்கணிப்பு
விகடன் கருத்துக்கணிப்பு

இந்த நிலையில், கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி அதிகபட்சமாக `55 சதவிகிதம் பேர்' இது தொழிலாளர் நலனுக்கு விரோதமானது என்று தெரிவித்திருக்கின்றனர். அதற்கடுத்தபடியாக, `28 சதவிகிதம் பேர்' உழைப்புச் சுரண்டலுக்கு வழிவகுக்கும் என்றும், `17 சதவிகிதம் பேர்' வரவேற்கத்தக்கது என்றும் தெரிவித்திருக்கின்றனர்.

விகடன் கருத்துக்கணிப்பு
விகடன் கருத்துக்கணிப்பு

முன்னதாக இந்த விவகாரம் தொழிற்சங்கங்களிடையே பெரும் அதிருப்தியையும், எதிர்ப்பையும் கிளப்பியதையடுத்து, அரசு சார்பில் தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன், தலைமைச் செயலாளர் இறையன்பு முன்னிலையில் ஆலோசனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.