Published:Updated:

குஜராத்: பேருந்து - கார் நேருக்கு நேர் மோதியதில் 9 பேர் பலி; வேதனை தெரிவித்த பிரதமர் மோடி!

குஜராத் சாலை விபத்து - மோடி
News
குஜராத் சாலை விபத்து - மோடி

குஜராத்தில், பயணிகளை ஏற்றிவந்த பேருந்து, கார் மோதிய விபத்தில் பேருந்து ஓட்டுநர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.

Published:Updated:

குஜராத்: பேருந்து - கார் நேருக்கு நேர் மோதியதில் 9 பேர் பலி; வேதனை தெரிவித்த பிரதமர் மோடி!

குஜராத்தில், பயணிகளை ஏற்றிவந்த பேருந்து, கார் மோதிய விபத்தில் பேருந்து ஓட்டுநர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.

குஜராத் சாலை விபத்து - மோடி
News
குஜராத் சாலை விபத்து - மோடி

குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் இன்று அதிகாலை பேருந்து-கார் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம், தொடர்பாக வெளியான தகவலின்படி, பிரமுக் சுவாமி மஹராஜ் சதாப்தி மஹோத்சவ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களில் சிலர் சூரத்திலிருந்து பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தனர்.

குஜராத் சாலை விபத்து
குஜராத் சாலை விபத்து

பேருந்து நவ்சாரி தேசிய நெடுஞ்சாலை எண் 48-ல் வந்துகொண்டிருந்தபோது, ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரில் வந்த கார் மீது மோதியது. இதில் காரில் பயணித்த 9 பேரில் 8 பேர் உயிரிழந்தனர். பேருந்தில் இருந்தவர்களில் காயமடைந்த 28 பேரில் 11 பேர் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதேசமயம் மாரடைப்பால் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட பேருந்து ஓட்டுநர் முன்னதாகவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மோடி
மோடி

இத்தகைய துயர சம்பத்துக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் மோடி பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் அறிவித்திருக்கிறார். இதுகுறித்து பிரதமர் அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில், ``நவ்சாரியில் சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளால் மிகவும் வேதனையடைந்தேன். என் எண்ணங்கள் முழுவதும் உயிரிழந்தோர் குடும்பத்துடன் இருக்கிறது. காயமடைந்தவர்கள் கூடிய சீக்கிரம் குணமடைவார்கள் என்று நம்புகிறேன். பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.50,000-மும் வழங்கப்படும்" என மோடி அறிவித்திருக்கிறார்.