Published:Updated:

``கோயில் நிலத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்தவர் சேகர்பாபு!’’ -கோவையில் ஹெச். ராஜா காட்டம்

ஹெச். ராஜா
News
ஹெச். ராஜா

``அறிவு கெட்டவர்கள் எல்லாம் அமைச்சர் ஆகிவிட்டனர். கள்ளாச்சராயம், கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் அமைச்சர் ஆகியுள்ளனர்” - ஹெச். ராஜா

Published:Updated:

``கோயில் நிலத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்தவர் சேகர்பாபு!’’ -கோவையில் ஹெச். ராஜா காட்டம்

``அறிவு கெட்டவர்கள் எல்லாம் அமைச்சர் ஆகிவிட்டனர். கள்ளாச்சராயம், கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் அமைச்சர் ஆகியுள்ளனர்” - ஹெச். ராஜா

ஹெச். ராஜா
News
ஹெச். ராஜா

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில், கடந்த வாரம் நடந்த கருத்தரங்கில் சுப.வீரபாண்டியன், ஜெயரஞ்சன், ஓவியா உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கு பாஜக மற்றும் இந்து இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், பாரதியார் பல்கலைகழகத்தை துணைவேந்தர் காளிராஜ் பயங்கரவாதிகளின் கூடாராமாக மாற்றுவதாக கூறி இந்து முன்னணி, பா.ஜ.கவினர் பல்கலைக்கழகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹெச். ராஜா
ஹெச். ராஜா

பாஜக தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் ஹெச். ராஜா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஹெச். ராஜா உள்ளிட்டோர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய ஹெச். ராஜா, ``துணைவேந்தராக இருக்க தகுதியற்றவர் காளிராஜ். இனியாவது அவர் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். இல்லையென்றால் பதவியை ராஜினாமா செய்துவிட வேண்டும். முதல்வர் ஸ்டாலின் ஒன்றிய அரசு என்று சொல்வதே பிரிவினைவாதத்தை வளர்க்கதான். பிரிவினை சக்திகளுக்காக அதிகாரிகள் சுய கௌரவத்தை அடமானம் வைக்கின்றனர்.

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்

1998-ம் ஆண்டு கோவையில் நடந்த வன்முறையை போல, மீண்டும் ஒரு வன்முறையை வளர்க்க தேச விரோதிகளை அழைத்து வருகிறார். அறிவு கெட்டவர்கள் எல்லாம் அமைச்சர் ஆகிவிட்டனர். கள்ளசாராயம், கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் எல்லாம் அமைச்சர் ஆகியுள்ளனர்.

புதுப்பேட்டை கோயில் நிலத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்தவர் சேகர்பாபு. அவர்களுக்கு போலீஸார் கார் கதவுகளை திறந்துவிடுகின்றனர்” என்றார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா, ``துணைவேந்தர் காளிராஜ் தி.க கூட்டத்தை நடத்தியிருக்கிறார். அதில் சுப. வீரபாண்டியன் கலந்திருக்கிறார். அந்தக் கூட்டத்தில் துணைவேந்தர் காளிராஜ் பேசும்போது, `நானே கறுப்பு சட்டை போட்டுட்டு வரவேண்டுமென மனதார நினைத்தேன்.

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்

சந்தர்ப்ப சூழ்நிலையால் முடியவில்லை’ என்று கூறியிருக்கிறார். அப்படிப்பட்டவர் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாது. கறுப்பு சட்டை போட்டு சென்றிருக்க வேண்டும். பெண்களை போக பொருளாக கருதிய கும்பல், தங்களை பெண் விடுதலை போர்வை போர்த்தி உலா வருவதை நம்பி தமிழ் மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள்” என்றார்.