அரசியல்
Published:Updated:

ஹேஷ்டேக்

ஹேஷ்டேக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஹேஷ்டேக்

ஒடிசா மாநிலத்தின் தின்கியா (Dhinkia) கிராமத்தில், எஃகு தொழிற்சாலை அமைப்பதற்கு எதிராக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.

ட்விட்டரில் கடந்த வாரத்தில் டிரெண்டான முக்கியமான ஹேஷ்டேக்குகள் என்னென்ன... ஏன்?

#Boomer_BJP

`பா.ஜ.க., தமிழ்நாட்டில் மதப் பிரிவினைகளை ஏற்படுத்த முயலும்போதெல்லாம், மக்கள் அவர்களுக்குத் தோல்வியையே பரிசாகத் தருகிறார்கள்’ என்ற கருத்தை முன்வைத்து, இந்த ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டது. பின்னர், பல்வேறு மாநிலங்களில் இதே ஹேஷ்டேக் பயன்படுத்தப்பட்டதையடுத்து, இந்திய டிரெண்டிங்கில் இடம்பிடித்தது!

#JaiBhimJoinsOSCARS

ஆஸ்கர் விருதுக்கான 276 படங்கள்கொண்ட தகுதிப் பட்டியலில் `ஜெய் பீம்’ படம் இடம்பெற்றதை அடுத்து, இந்த ஹேஷ்டேக் தென் மாநிலங்களில் அதிக அளவில் டிரெண்டானது!

#Vamika

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், விராட் கோலி அரை சதம் கடந்தார். அப்போது கோலி-அனுஷ்கா ஷர்மா தம்பதியின் மகள் வாமிகா, தனது தந்தைக்காகக் கைதட்ட, அந்தக் காட்சிகளும் இந்த ஹேஷ்டேக்கும் இந்திய அளவில் டிரெண்டாகின!

#NationalGirlChildDay

இந்தியாவில் 2008-ம் ஆண்டு முதல், ஜனவரி 24-ம் தேதி அன்று, `தேசிய பெண் குழந்தைகள் தினம்’ கொண்டாடப்பட்டுவருகிறது. இதன் காரணமாக இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் டிரெண்டானது!

#SidhuKejriWithPakKhalistan

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, பாகிஸ்தான் ஆதரவாளர் என்றும்... ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், காலிஸ்தான் தீவிரவாதிகளின் ஆதரவாளர் என்றும் சொல்லப்பட்டு, `தேர்தலில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சிகளைப் புறக்கணிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி இந்த ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டது!

ஹேஷ்டேக்
ஹேஷ்டேக்

#BJDAgainstOdisha

ஒடிசா மாநிலத்தின் தின்கியா (Dhinkia) கிராமத்தில், எஃகு தொழிற்சாலை அமைப்பதற்கு எதிராக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதில் பலரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து ஆளும் பிஜூ ஜனதா தளம் அரசுக்கு எதிராக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்த ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்தனர்!

#NetajiSubhasChandraBose

இந்திய விடுதலைப் போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளையொட்டி, ஜனவரி 23-ம் தேதி அன்று, இந்திய டிரெண்டிங்கில் இந்த ஹேஷ்டேக் பல மணி நேரம் முதலிடம் பிடித்தது!