Published:Updated:

Corona Live Updates: தமிழகத்தில் ஒரு லட்சத்தைக் கடந்த பாதிப்பு! - ஒரே நாளில் 4,329 பேருக்கு பாசிட்டிவ்

Corona Treatment
Corona Treatment ( pixabay.com )

3.7.2020 | கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு.

03 Jul 2020 6 PM

தமிழகத்தில் ஒரு லட்சத்தைக் கடந்த பாதிப்பு!

தமிழகத்தில் இன்று மட்டும் 4,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,02,721-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,357 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 58,378 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,385 -ஆக அதிகரித்துள்ளது.

corona spread
corona spread

சென்னையில் மேலும் 2,082 பேருக்குத் தொற்று!

சென்னையில் மட்டும் இன்று 2,082 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64,689ஆக அதிகரித்துள்ளது. 40,111 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 23,581 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். உயிரிழப்பு எண்ணிக்கை 996 ஆக அதிகரித்துள்ளது.

03 Jul 2020 9 AM

இந்தியாவில் கொரோனா பாதிப்பு

இந்தியா -  கொரோனா வைரஸ்
இந்தியா - கொரோனா வைரஸ்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,04,641-லிருந்து 6,25,544 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 20,903 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 379 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17,834-லிருந்து 18,213 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,79,892 ஆகவும் உயர்ந்துள்ளது. 2,27,439 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

03 Jul 2020 9 AM

உலக அளவில் கொரோனா

கொரோனா - உலகம்
கொரோனா - உலகம்

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,09,73,896 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையும் 61,34,789 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,23,231 ஆக உள்ளது.

03 Jul 2020 9 AM

அமெரிக்கா நிலவரம்

கொரோனா வைரஸ் - அமெரிக்கா
கொரோனா வைரஸ் - அமெரிக்கா

உலக அளவில் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துவரும் அமெரிக்காவில் ஒரே நாளில் 56,922 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா உறுதிசெய்யப்பட்டோர் எண்ணிக்கை 28,36,875 ஆகவும், கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,31,477 ஆகவும் உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு