Published:Updated:

மிரட்டும் வைரஸ்... விரட்டும் அன்னாசிப்பூ!

மிரட்டும் வைரஸ்... விரட்டும் அன்னாசிப்பூ!

பிரீமியம் ஸ்டோரி

னிதர்களை வாட்டி வதைத்துக் கொண்டிரு​க்கிறது பன்றிக்காய்ச்சல். தமிழகத்தில் இதுவரை 14 பேர் இறந்துபோயிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சையில் இருக்கிறார்கள். இந்த நிலையில், ஆங்கில மருந்தான 'டாமிஃப்ளு’ மாத்திரையால் காய்ச்சல் முழுமையாக குணமாகவில்லை. எந்த ஒரு வைரஸும் தன்னுடைய உடல் அமைப்பை காலப்போக்கில் மாற்றிக்கொண்டே இருக்கும் இயல்புடையது. ஆதலால், இந்த எதிர் வைரஸ் மருந்துகள் எல்லா நேரத்திலும் எல்லா நபருக்கும் எதிர்பார்த்த விளைவைத் தரும் என்பது உறுதி இல்லை என்று மருத்துவ வட்டாரத்தில் பேச்சுக் கிளம்பியிருக்கிறது.

மிரட்டும் வைரஸ்... விரட்டும் அன்னாசிப்பூ!

இதுபற்றி, தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, ''டாமிஃப்ளு மாத்திரை சாப்பிட்ட சுமார் 400 நோயாளிகள் குணமாகி வீடு திரும்பிவிட்டார்கள். தற்சமயம் எங்களிடம் 6.75 லட்சம் மாத்திரைகள் கையிருப்பில் இருக்கின்றன. இந்த வைரஸின் வீரியம் திடீரென அதிகமாகிவிட்டதாகச் சொல்வதெல்லாம் தவறானது'' என்றார்.

மிரட்டும் வைரஸ்... விரட்டும் அன்னாசிப்பூ!

ஆங்கில மருந்துக்கு மாற்றாக சித்தமருத்து​வத்தில் உள்ள மருந்துகள் அதிக பலனைத் தருவதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். பிரபல சித்த மருத்துவர் கு.சிவராமனிடம் பேசினோம். ''பன்றிக் காய்ச்சலுக்கான மருந்து நம் வீட்டுக்குள்ளேயே இருக்கிறது. நாம் பிரியாணியில் பயன்படுத்தும் அன்னாசிப்பூவில் (நட்சத்திர வடிவில் இருக்கும்) இருக்கும் 'சிக்கிமிக்’ என்ற அமிலத்தில் இருந்துதான் பன்றிக்காய்ச்சலுக்கு மருந்து தயாரிக்கிறார்கள். இந்த அன்னாசிப்பூவை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அன்னாசிப்பூவை டீயுடன் சேர்த்து வேக வைக்கலாம். அல்லது அன்னாசிப்பூவை மட்டுமே பயன்படுத்தி கசாயம் தயாரித்தும் குடிக்கலாம். பன்றிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டவர்களும், அவர்கள் வீட்டில் உள்ளவர்களும் இதை அவசியம் குடிக்க வேண்டும். பன்றிக்காய்ச்சலை வரும்முன் தடுக்க எல்லோருமே இந்த அன்னாசிப்பூவைப் பயன்படுத்தலாம்.

மிரட்டும் வைரஸ்... விரட்டும் அன்னாசிப்பூ!

பொதுவாகவே அன்றாடம் உணவில் மிளகு, மஞ்சள், துளசி இந்த மூன்று இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த மூன்றும் எல்லா வைரஸ்களுக்கும் எதிரான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் ஆற்றல் மிக்கது'' என்று சொன்னார்.

மிரட்டும் வைரஸ்... விரட்டும் அன்னாசிப்பூ!

திருநெல்வேலியைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் எளிய முறையில் பன்றிக்காய்ச்சலுக்கு கஷாயம் தயாரித்து விநியோகித்து வருகிறார்கள். அதற்கு 'கபசுர’ குடிநீர் கஷாயம் என்று பெயர். பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு மாணவர்களான பி.கே.ரமேஷ், கனியமுதன், ஜானகிராம் ஆகியோர் இது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். பி.கே.ரமேஷ் நம்மிடம் கூறும்போது, ''நவீன மருத்துவத்தில குறிப்பிடப்படும் சிக்குன்குன்யா, பறவைக்காய்ச்சல், டெங்கு, பன்றிக்காய்ச்சல் ஆகியவற்றுக்்கு சித்த மருத்துவத்தில் 1,000 வருடங்களுக்கு முன்பே மருத்துவம் சொல்லப்பட்டிருக்கிறது. அந்தவகையில், டெங்கு காய்ச்சலை ஒழித்தது நிலவேம்பு கஷாயம்தான். நெல்லை, பாளையங்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரங்களில் 158 முகாம்களை நடத்தி 737 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதைக் கண்டுபிடித்தோம். அவர்களுக்கு நிலவேம்பு கஷாயத்தைப் பருகக் கொடுத்தோம். காய்ச்சல் குணமானது. உயிர் இழப்பு ஏதும் இல்லை. இப்போது பரவி வரும் பன்றிக்காய்ச்சலைக் குணப்படுத்த பல்வேறு மருத்துவ முறைகளை சித்த மருத்துவத்தில் கூறியிருக்கிறார்கள். அதில், ஒன்று... 'கபசுர’ குடிநீர் கஷாயம். கபசுரத்தின் அறிகுறிகளைப் போலவே இருக்கிறது பன்றிக்காய்சல் அறிகுறிகள். இடைவிடாத ஜுரம், குளிர், மூச்சுத் திணறல், உடல் வலி, பேதி, மன உளைச்சல், தொண்டை வலி, நாக்கு சுவை அறியாத நிலை... இதெல்லாம்தான் பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள்.

மிரட்டும் வைரஸ்... விரட்டும் அன்னாசிப்பூ!

இதற்கான மூலிகைக் குடிநீரை வீட்டில் நாமே தயாரிக்கலாம். நிலவேம்பு, சுக்கு, திப்பிலி, இலவங்கம், நெல்லிவேர், கற்பூரவல்லி, சிறுதேக்கு, ஆடாதொடை, சிறுகாஞ்சொறிவேர், வட்டதிருப்பி வேர், சீந்தில் தண்டு, கடுக்காய்தோல், கோஷ்டம், கோரைக்கிழங்கு, அக்கரகாரம் ஆகிய 15 வகையான மூலிகைப் பொருட்களைப் பொடிசெய்து, சம அளவு சேர்த்து 'கபசுர’ குடிநீர் கஷாயம் தயாரிக்கலாம். இதில் கூறப்பட்டுள்ள பொருட்கள் சித்த மருத்துவக் கடைகளில் தாராளமாகக் கிடைக்கும். ஒரு வேளைக்கு 10 கிராம் பொடியை எடுத்து 400 மி.லி. தண்ணீர் கலந்து காய்ச்ச வேண்டும். அதை, 50 மி.லியாக வற்றவிட வேண்டும். இந்த கஷாயத்தை காய்ச்சல் கண்டவர்கள் தினமும் மூன்று முதல் ஐந்து வேளைகள் சாப்பிட வேண்டும்.

மிரட்டும் வைரஸ்... விரட்டும் அன்னாசிப்பூ!

தொடர்ந்து ஐந்து நாட்கள் வரை சாப்பிடலாம். காய்ச்சல் வராமல் இருப்பவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு வேளைகள்... ஐந்து நாட்கள் வரை சாப்பிடலாம். காய்ச்சல் வராதவர்கள் முன்னெச்சரிக்கையாகப் பருகினால், நோய் தடுக்கப்படும். நெல்லையில் எம்.பி மற்றும் மேயர் முன்னிலையில் நாங்கள் தனிப்பட்ட முறையில் ஐந்து முகாம்களை நடத்தி 1,600 பேர்களுக்கு கஷாயம் வழங்கியிருக்கிறோம். இதை சித்த மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவமனைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்றனர்.

நோய் தீர்க்கும் மருந்து பாரம்பர்ய மருத்துவத்தில் இருப்பதை ஏற்போம்!

ஆர்.பி., படங்கள்: வீ.சக்தி அருணகிரி, ஆர்.எம்.முத்துராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு