Published:Updated:

ஹெச்.ஐ.வி பாதிப்பில் மரணமடைந்த இளைஞர் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஹெச்.ஐ.வி பாதிப்பில் மரணமடைந்த இளைஞர் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
ஹெச்.ஐ.வி பாதிப்பில் மரணமடைந்த இளைஞர் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்டதற்கு காரணமான ரத்தம் வழங்கிய இளைஞர், மருத்துவமனை சிகிச்சையின் போது  மரணமடைந்ததில் சந்தேகம் எழுப்பி,  இன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், 'வேறு மாவட்ட மருத்துவர்களைக் கொண்டு உடற்கூராய்வு செய்ய ' அதிரடியாக உத்தரவிட்டுள்ளது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை.

ஹெச்.ஐ.வி ரத்த விவகாரத்தில் ரத்த தானம் வழங்கிய இளைஞர் தற்கொலைக்கு முயன்று பின் காப்பாற்றப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். இந்த நிலையில் தன் மகனின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று, வேறு மாவட்ட மருத்துவர்களை கொண்டு உடற்கூராய்வு செய்ய வேண்டும் என்பது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இளைஞரின் பெற்றோர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரணை நடத்திய நீதிபதி புகழேந்தி, இதற்கு அரசு விளக்கம்  அளிக்க  அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை  ஒத்திவைத்தார்.அரசு தரப்பு விளக்கத்துக்கு பிறகு, இரவில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, "எச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்டு இறந்த இளைஞர் உடலை சிவகங்கை, தேனி, நெல்லை, மாவட்டத்தை சேர்ந்த  மூத்த  அரசு மருத்துவர்கள் உடற் கூராய்வு செய்யவும், மனுதாரர் தரப்பில் இரண்டு ஒளிப்பதிவாளர்கள் உடற்கூராய்வு நடப்பதை பதிவு செய்ய அனுமதிப்பதாகவும்" உத்தரவிட்டார். இது ஒரு முக்கியமான வழக்கு என்பதால் இந்த உத்தரவு என்றார்.