Published:Updated:

16,000 விஞ்ஞானிகள்... கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க போராட்டம்!

கொரோனாவுக்கு மருந்து
கொரோனாவுக்கு மருந்து ( pexels )

சீனாதான் கொரோனா வைரஸைத் திட்டமிட்டுப் பரப்பியதாக அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாண நீதிமன்றத்தில் 20 டிரில்லியன் டாலர்கள் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதிலிருந்தே, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் மோதல் அதிகரித்துள்ளது. அமெரிக்க ராணுவ வீரர்கள்தான், வுகானில் கொரோனா வைரஸ் பரவக் காரணமாக இருந்துள்ளனர் என்று சீனா குற்றம்சாட்டியது. ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், கொரோனாவை சீன வைரைஸ் என்று தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறார். இந்த நிலையில், சீனாதான் கொரோனா வைரஸைத் திட்டமிட்டுப் பரப்பியதாக அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாண நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

டொனால்ட் ட்ரம்ப்
டொனால்ட் ட்ரம்ப்
AP / Alex Brandon

வாஷிங்டனைச் சேர்ந்த ஃப்ரீடம் வாட்ச் வழக்கறிஞர்கள் குழுவும் பஸ் போட்டோகிராபிக் நிறுவனம் மற்றும் அமெரிக்க செனட்டர் லேரி கிளேமேன் ஆகியோர் இணைந்து இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர். வழக்கு மனுவில், ``உலகில் 3,34,000 மக்களை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. 17,000 மக்கள் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸ் ஒரு பயோலாஜிக்கல் ஆயுதம். ஒரு மனிதரிடத்தில் இருந்து மற்றவருக்கு எளிதாக தொற்றும்படி அது வடிவமைக்கப்பட்டு சேமித்து வைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் மிகுந்த ஆபத்து நிறைந்தது. அமெரிக்கச் சட்டம் , உலக பொதுச்சட்டத்தை மீறி இந்த வைரஸை சீனா உருவாக்கி பரப்பியுள்ளது. எனவே, அமெரிக்காவுக்கு சீனா 20 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்ட ஈடாக தர வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

சீனாவின் வுகான் நகரிலிருந்துதான் கோவிட்-19 என்ற இந்தக் கொரோனா வைரஸ் பரவியது. இங்குதான் சீனாவின் மிகப் பெரிய வுகான் வைரலாஜி ஆய்வு மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தில்தான் இந்த வைரஸ் உருவாக்கப்பட்டிருந்ததாகப் பேச்சு அடிபடுகிறது. இந்த ஆய்வகத்தில் விலங்கினங்களுக்கு கொரோனா வைரஸைக் கொடுத்துப் பரிசோதித்து பார்த்தபோது வெளியே பரவியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா தன் வேலையைக் காட்டி வருவதால், இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், அயர்லாந்து போன்ற நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

Corona
Corona

கொரோனாவைக் கட்டுப்படுத்த உலகம் முழுக்க 16,000 விஞ்ஞானிகள் மருந்து கண்டுபிடிக்க முயன்று கொண்டிருக்கின்றனர். பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள், லத்தீன் அமெரிக்க நாடுகள் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த கியூபா நாட்டு மருத்துவ முறையைப் பின்பற்றத் தொடங்கியுள்ளன.

`இத்தாலியில் கியூபா டாக்டர்கள்!' - படிப்படியாகக் குறையும் கொரோனா இறப்பு விகிதம்

சீனா - கியூபா நாட்டு கூட்டுத்தயாரிப்பான Alfa-2B என்ற மருந்து வைரஸைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாகச் செயல்படுகிறது. இந்த மருந்தை ஹெச்.ஐ.வி., மனிதர்களைத் தொற்றும் வைரஸ்கள், பி மற்றும் சி வகை சர்க்கரை நோயாளிகளுக்குக் கொடுத்துப் பார்த்ததில் நல்ல பலன் கிடத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு