Published:Updated:

நீலகிரி கொரோனா நிலவரம்: 17 பேருக்கு பாசிட்டிவ்; திடீர் உயர்வுக்கு என்ன காரணம்?

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

வைரஸ் பரவல் கட்டுக்குள் இருந்த நீலகிரியில் தற்போது வேகமாகத் தொற்று ஏற்பட்டு வருகிறது. கண்காணிப்பு அலுவலர் சுப்ரியா சாஹூ மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உள்ளிட்டோர் பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு நீலகிரியிலும் கொரோனா வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. தொற்றுப் பரவல் நிலவரம் குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அவர் கூறுகையில்,``நீலகிரி மாவட்டத்தில் நேற்று17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் இத்தனை பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது இதுவே முதல்முறையாக உள்ளது.

கண்காணிப்பு அலுவலர்
கண்காணிப்பு அலுவலர்

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை நீலகிரியில் 14 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பினர். அதன் பின் 36 நாள்களாகப் புதிதாக யாரும் தொற்றால் பாதிக்கப்படவில்லை.

பின்னர் புதிதாக 15 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்தது. நேற்று 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவர் சென்னையைச் சேர்ந்தவர், மற்றொருவர் பெங்களூருவைச் சேர்ந்தவர்.

கண்காணிப்பு அலுவலர்
கண்காணிப்பு அலுவலர்

இந்த திடீர் உயர்வுக்கு காரணம், ஊட்டி அருகில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் பணி புாிந்து வந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள், இரண்டாம் நிலை தொடர்பாளர்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதிகளவிலான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் நிறுவனமாக இருப்பதால், அனைவருக்கும் தொடர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிறுவனத்தில் பணிபுரிந்த 755 நபர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

கண்காணிப்பு அலுவலர்
கண்காணிப்பு அலுவலர்

மேலும் குன்னூர் மாடல் அவுஸ் பகுதியில் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவரின் வீட்டின் அருகில் இருந்த இருவருக்கும், அருவங்காடு நல்லப்பன் தெரு பகுதியில் கரூர் சென்று வந்தவருடன், தொடர்பில் இருந்தவர் என 12 பேர் தொடர்பின் அடிப்படையில் அவர்களுக்கு தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

3 பேருக்கு சோதனை சாவடிகளில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் தொற்று உறுதி செய்யப்பட்டது. நீலகிரியில் தற்போது 19 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. குன்னூர் நகராட்சி பகுதியில் அதிகத் தொற்று உள்ள மேல் வண்ணாரப்பேட்டை, மாடல் அவுஸ் போன்ற கிளஸ்டராக உள்ள பகுதிகளில் தனித்தனி குழுக்கள் அமைத்து தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

கண்காணிப்பு அலுவலர் தலைமையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மூலம் எடுக்கப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. நீலகிரியில் தொற்று அதிகாிக்க காரணமே மக்கள் தேவையற்ற பயணங்களை மேற்கொண்டதுதான். தேவையற்ற பயணங்கள் மேற்கொள்வதை அனுமதிக்க முடியாது. பர்லியார், குஞ்சப்பனை உள்ளிட்ட அனைத்து சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தப்படும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு