சரி, குடிநோய்ப் பரிசோதனைக்குத் தயாராகி விட்டீர்களா?

இந்த கேள்விகளுக்கான உண்மையான பதிலை 'டிக்’ அடியுங்கள். கிடைக்கும் மதிப்பெண்களை வைத்து

நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

1.எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மது அருந்துகிறீர்கள்?

அ. எப்போதும் இல்லை

ஆ. இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை

இ. மாதத்துக்கு 2 முதல் 4 முறை

ஈ. வாரத்துக்கு 2 முதல் 3 முறை

உ. வாரத்துக்கு 4 முறை, அதற்கு மேலும்

2.எத்தனை கோப்பை (லார்ஜ்) மது அருந்து கிறீர்கள்?

அ. 1 அல்லது 2 ஆ. 3 அல்லது 4

இ. 5 அல்லது 6 ஈ. 7 முதல் 9

உ. 10 ,அதற்கு மேல்

3. ஒரே தடவையில் ஆறு கோப்பை அல்லது அதற்கு மேலும் குடிக்கிறீர்கள் என்றால் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை அப்படிக் குடிக்கிறீர்கள்?

அ. எப்போதும் இல்லை

ஆ. இரண்டு மூன்று மாதங்களுக்கு

ஒரு முறை

இ. மாதத்துக்கு ஒருமுறை

ஈ. வாரம் ஒருமுறை

உ. தினமும்

4. மது அருந்த ஆரம்பித்து விட்டால் நிறுத்தவே முடியாது என்ற சூழ்நிலை கடந்த ஆண்டில் எத்தனை முறை உங்களுக்கு ஏற்பட்டது?

அ. எப்போதும் இல்லை

ஆ. இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை

இ. ஒவ்வொரு மாதமும்

ஈ. ஒவ்வொரு வாரமும்

உ. தினமும்

5. குடிப்பதற்காக கடந்த ஆண்டு, நீங்கள் வழக்கமான செய்யும் அலுவல்களை எத்தனை முறை புறக்கணித்து இருக்கிறீர்கள்?

அ. எப்போதும் இல்லை

ஆ. இரண்டு மூன்று

மாதங்களுக்கு ஒரு முறை

இ. ஒவ்வொரு மாதமும்

ஈ. ஒவ்வொரு வாரமும்

உ. தினமும்

6. மிக அதிகமாகக் குடித்த பிறகு மறுநாள் காலை எழுந்தவுடன் மீண்டும் மது அருந்த வேண்டும் என்ற சூழ்நிலை கடந்த ஆண்டு எத்தனை முறை ஏற்பட்டது?

அ. எப்போதும் இல்லை

ஆ. இரண்டு மூன்று

மாதங்களுக்கு ஒரு முறை

இ. ஒவ்வொரு மாதமும்

ஈ. ஒவ்வொரு வாரமும்

உ. தினமும்

7. மது அருந்தியதால் குற்ற உணர்ச்சி மற்றும் நீங்கள் செய்த செயலுக்காக வருந்தும் சூழ்நிலை கடந்த ஆண்டு எத்தனை முறை ஏற்பட்டது?

அ. எப்போதும் இல்லை

ஆ. இரண்டு மூன்று

மாதங்களுக்கு ஒரு முறை

இ. ஒவ்வொரு மாதமும்

ஈ. ஒவ்வொரு வாரமும்

உ. தினமும்

8. அதிகமாகக் குடித்த பின், கடந்த இரவில் என்ன நடந்தது என்பதே நினைவு இல்லாத சூழல் கடந்த ஆண்டில் எத்தனை முறை ஏற்பட்டது?

அ. எப்போதும் இல்லை

ஆ. இரண்டு மூன்று

மாதங்களுக்கு ஒரு முறை

இ. ஒவ்வொரு மாதமும்

ஈ. ஒவ்வொரு வாரமும்

உ. தினமும்

9. நீங்கள் குடிப்பதால் உங்களுக்கோ அல்லது உங்களால் மற்றவர்களுக்கோ கடந்த ஆண்டு காயம் ஏற்பட்டுள்ளதா?

அ. இல்லை

ஆ. ஆம், ஆனால் கடந்த ஆண்டு இல்லை

இ. ஆம். கடந்த ஆண்டு ஏற்பட்டது.

10. உறவினர், நண்பர், மருத்துவர் என யாரேனும், நீங்கள் குடிப்பது குறித்து கவலை தெரிவித்து குடிப்பதை நிறுத்த வேண்டும் என்று அறிவுரை கூறி இருக்கிறார்களா?

அ. இல்லை

ஆ. ஆம், ஆனால் கடந்த ஆண்டு இல்லை

இ. ஆம், கடந்த ஆண்டு கூறினார்.

மதிப்பெண்கள்:

1-8 கேள்விகளுக்கு: அ-0; ஆ-1; இ-2; ஈ-3; உ-4.

9-10 கேள்விகளுக்கு: அ-0; ஆ-2; இ-4.

உங்கள் மதிப்பெண் எவ்வளவு என்று கணக்கிட்டுப் பார்த்தீர்களா?

இப்போது ரிசல்ட்:

ஆணோ, பெண்ணோ உங்கள் மதிப்பெண் 8 என்றால், நீங்கள் அபாய கட்டத்தை நெருங்கிக்கொண்டு இருக்கிறீர்கள்.

பெண்ணாக இருந்து 13 மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறீர்கள் என்றாலோ... ஆணாக இருந்து 15 மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறீர்கள் என்றாலோ... சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டிய குடிஅடிமை நீங்கள். அதற்கு மேலும் மதிப்பெண் பெற்று இருந்தால், உங்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்!

சரி, மது அருந்துவதால் ஒருவருக்கு ஏற்படும் உடல்நிலை, மனநிலை பாதிப்புகள் நமக்குத் தெரியும். ஆனால், மதுவே அருந்தாமல் குடி நோயாளிகளுடன் குடும்பம் நடத்தும் பெண்களுக்கு உடல் அளவிலும் மனஅளவிலும் ஏற்படும் பாதிப்புகள்பற்றி உங்களுக்குத் தெரியுமா?

குடிநோயாளிகள் கொஞ்சமும் கற்பனை செய்துகூட பார்க்க விரும்பாத அந்த நரக வேதனையை இப்போது பார்க்கலாம்.

மதுவை முகர்ந்துப் பார்க்கும்போது வரும் துர்நாற்றத்தைவிட மது குடித்தவரின் வாய், சுவாசம், வியர்வையில் இருந்து வரும் துர்நாற்றம் பத்து மடங்கு அதிகம். பாழாய்போன பாரில் அழுகிய

முட்டையில் போடப்பட்ட ஹாஃப் பாயில், முந்தா நாள் போட்ட சில்லி சிக்கன்... ஏற்கெனவே வயிற்றுக்குள் அழுகிக்கொண்டு இருக்கும் கல்லீரல், காயம்பட்ட இரைப்பை இவை எல்லாம் சேர்ந்து மதுரை மல்லி வாசனையா மணக்கும்?

மது நாற்றத்துடன் வீட்டுக்கு வரும் ஒரு குடிநோயாளி, இரவில் காம நோக்கத்துடன் தனது மனைவியை நெருங்கும்போது... அதுதான் பெண்ணுக்கு உலகிலேயே சகித்துக்கொள்ள முடியாத வேதனையாக இருக்கும். கிட்டத்தட்ட வல்லுறவுபோலத்தான் இதுவும். தமிழக அரசு வழங்கும் டாஸ்மாக் சாபத்தால் ஒவ்வொரு தெருவுக்கும் பத்து பெண்களாவது இந்தக் கொடுமையை தினம்தினம் அனுபவிக்கிறார்கள்.

நடத்தையில் சந்தேகம்... மனைவி கொலை... கணவன் கைது என்று நாளிதழ்களில் நாள் தவறாமல் வரும் செய்திகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதற்குப் பின்னணியில் இருக்கும் குடிநோய் தொடர்பான மருத்துவ ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

கடந்த தொடரில் படித்த உச்சபட்ச மூன்றாம் நிலை குடிநோயாளிகளுக்கு ஒரு முக்கியமான பிரச்னை இருக்கும். அது... இல்லாத ஒரு விஷயத்தை இருப்பதுபோல நினைத்துக்கொள்வது. குறிப்பாக, தன் மனைவி தனக்கு நேர்மையாக இல்லையோ... நடத்தை தவறி இருப்பாளோ என்ற சந்தேகம் (குடியால் பலர் ஆண்மைக்குறைவு பிரச்னைக்கு உள்ளாவதும் அதனால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மையும்கூட இதற்கு ஒரு காரணம்). மனநல மருத்துவத்தில் இதை Delusion of Infidelity என்பார்கள்.

குடித்துவிட்டு வருவதால் இயல்பாகவே மனைவி தன்னை சரிவரக் கவனிக்காமல் இருப்பது, திட்டுவது, பண விஷயங்களை மறைப்பது போன்றவற்றால் மனைவி மீது வரும் வெறுப்பு இதற்கு ஒரு காரணம். இன்னொரு முக்கியமான மருத்துவரீதியான காரணம், ஆண் மலட்டுத்தன்மை. மருத்துவக் கல்லூரி மாணவர்களிடம் இந்த வாக்கியம் ஏகப் பிரபலம். Provokes the desire but, takes away the performance. அதாவது, காமத்தைத் தூண்டிவிடும்; ஆனால், செயல்படுத்தவிடாது என்று அர்த்தம். மதுவும் அப்படித்தான். ஆல்கஹால், காமத்தைத் தூண்டிவிடும். ஆனால், செயல்படவிடாது. தொடர்ந்து குடிக்கும் குடிநோயாளிகள் மனைவியுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது, நீண்டநேரம் போராடுவார்கள். ம்ஹூம், உருப்படியாக எதுவும் நடக்காது. பெண்களுக்குத் திருப்தியை ஏற்படுத்த முடியாது. ஆணுக்கும் தன்னால் இயலவில்லையே என்கிற குற்றஉணர்வு ஏற்படும்.

ஆனால், தொடர்ந்து மது அருந்துவதால்தான் மேற்படி விஷயத்தில் தான் வீக் என்பதை ஆண் அவ்வளவு சீக்கிரம் ஒப்புக்கொள்ள மாட்டான். அது ஆணின் ஈகோ. தன்னால் மனைவியைத் திருப்திப்படுத்த முடியாததால், மனைவி வேறு எங்கோ தாகத்தைத் தீர்த்துக்கொள்கிறாளோ என்ற சந்தேகம் கணவனுக்கு ஏற்படும். குடிபோதையில் இருக்கும் ஒரு குடிகாரனால் வார்த்தைகளை அளந்து பேச முடியாது. குடித்துவிட்டு வந்து மனைவியின் நடத்தை குறித்து ஆபாசமாகக் கேள்வி எழுப்புவான்.

கணவன் குடிப்பதை, குடித்து விட்டு அடிப்பதை, குழந்தையின் மருத்துவத்துக்கு வைத்து இருக்கும் பணத்தைப் பிடுங்கிக்கொண்டு சென்று குடிப்பதை எல்லாம்கூட பொறுத்துக்கொள்ளும் ஒரு நல்ல மனைவியால், தான் நடத்தை கெட்டவள் என்று கணவன் திட்டுவதை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. வன்முறையும் விவாகரத்துகளும் குற்றங்களும் தொடங்கும் இடம் இதுதான்!

செக்ஸ் ரீதியான இந்தப் பாதிப்பின் அடுத்த கட்டம் தெரியுமா? அசிங்கத்தின் உச்சம் அது!

தரம்... தரை டிக்கெட்டு!

வருமானத்தைப் பெருமையாகச் சொல்பவர்கள் மதுவின் தரத்தைப் பற்றிக் கொஞ்சமாவது கவலைப்படுகிறார்களா?

தயாரான மதுபானம் தொழிற்சாலையில் இருந்து வெளியே வர வேண்டும் என்றால் அதற்கு ஏகப்பட்ட விதிமுறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு மதுபான நிறுவனத்துக்கும் துணை வட்டாட்சியர் அந்தஸ்தில் ஓர் அதிகாரி இருப்பார். அன்றைய தினம் டாஸ்மாக் கிடங்குக்குச் செல்லத் தயாராக உள்ள மதுபானத் தொட்டியில் அவர் குறிப்பிட்ட அளவு மதுவை சாம்பிள் எடுத்துக்கொண்டு தொட்டிக்கு சீல் வைக்க வேண்டும். பின்னர், அந்த சாம்பிளை அரசு தரக்கட்டுப்பாடு ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி சான்றிதழ் வாங்க வேண்டும். அதன் பின்னரே அந்த மதுபானம் பாட்டிலிங் செய்யப்படும். ஆனால், இதிலும் ஏகப்பட்ட முறைகேடு நடக்கிறது என்பதுதான் குடல் எரிய வைக்கும் உண்மை.

ஆரம்பத்தில் ஒரு மதுபானத்தின் புதிய பிராண்டை அறிமுகப்படுத்தும்போது அந்த மதுவைக் குடிக்கும் குடிநோயாளி, 'ரொம்ப நல்லா இருக்கு பேஷ் பேஷ்’ என்று குடிப்பான். இப்படி வாய்மொழி விளம்பரம் மூலமே அதன் விற்பனை பல மடங்கு கூடும். அதைக் குடித்துப் பழகிய குடி நோயாளிகள் அவ்வளவு சீக்கிரம் வேறு பிராண்டுக்கு மாற மாட்டார்கள். ஆனால், திடீரென்று அந்த மதுபானத்தின் தரத்தை பல மடங்கு குறைத்து விடுவார்கள். மூடியைத் திறந்தாலே குப்பென வீசும் எரிசாராய வாடை!

சில ஆண்டுகளுக்கு முன், ஒரு நிறுவனம் அறிமுகப்படுத்திய ஐஸ்கிரீம் வாசனை கொண்ட ஒரு மதுபானத்தை, 'மாப்ளே, வீட்ல கண்டேபிடிக்கல... சூப்பரு’ என்று தொடர்ந்து இரண்டு மாதம் வாங்கிச் குடித்த ஒரு நண்பன், திடீரென்று ஒருநாள் ஆரம்பித்து பல மாதங்கள் உடம்பெல்லாம் சொரிந்து கொண்டே இருந்தான். ஒரு கட்டத்தில் சொரிந்து சொரிந்து ரத்தமே வந்துவிட்டது அவனுக்கு. அந்த மதுவின் மகிமை அப்படி!

- தெளிவோம்