''கண்ணதாசனுக்குக் குடிப்பழக்கம் ஒரு வியாதியைத் தந்து இருந்தது. மன நல மருத்துவத்தில் அதற்கு, 'இரு துருவக் கோளாறு’ என்று (Bipolar mood disorder) பெயர். வின்சென்ட் சர்ச்சிலும் இதே நோயால் பாதிக்கப் பட்டவர்தான்'' என்றார் டாக்டர்.

நான் இந்த வியாதியைக் கேள்விப்பட்டு இருக்கிறேன். வாழ்வில் எல்லோருக்கும் மேடும் வரும்... பள்ளமும் வரும். இந்த ஏற்ற இறக்கம் சாதாரணமாக இருக்கும் வரை பிரச்னை இல்லை. இந்த மேடு அசாதாரண மேடாகவும் பள்ளம் பெரிய பள்ளமாகவும் மாறும்போது அது ஒருவருக்கு மனநலம் சார்ந்த பிரச்னையாகி விடும். இரு துருவக் கோளாறு உள்ளவர் பித்து, மனச்சோர்வு என்று இரண்டு பிரச்னைகளுக்கும் மாறி மாறி உள்ளாகித் துன்பப்படுவர்.

முதலில் தோன்றுவது பித்து நிலை. அந்த நிலையில் உயர் சக்தியுள்ள மனோபாவத்துடன் இருப்பார்கள். அப்போது அசைக்க முடியாத தன்னம்பிக்கை, உயர்ந்த, கலவையான, புதுமையான எண்ணங்கள், சிறந்த படைப்பாற்றல், நகைச் சுவை உணர்வு, அதிகபட்சக் கோபம், கணக்கு வழக்கு பார்க்காமல் செலவு செய்வது, உறக்கமே இல்லாமல் தான் மேற்கொண்ட காரியத்தைச் சிரத்தையாக முடித்தல் ஆகிய குணங்களுடன் இருப்பார்கள். இவை எல்லாம் உயர் உணர்வுகள். சிறிது காலம் இந்த நிலை நீடித்த பின், பெரும் மனச்சோர்வு, விரக்தி ஏற்படும். தற்கொலை எண்ணங்களும் எழ வாய்ப்பு இருக்கிறது. இதுதான் இருதுருவக் கோளாறு.

கண்ணதாசனின் நடவடிக்கைகளை ஆராய்ந்த பல மன நல மருத்துவர்கள் கண்ணதாசன் இருதுருவக் கோளாறால் அவதிப்பட்டார் என்று உறுதியாகக் கருதுகிறார்கள். அவர் கோபப்பட்டபோது எழுதிய பாடல்களையும், அதீத உற்சாக மாக இருந்தபோது எழுதிய பாடல் களையும், சோகமாக இருந்தபோது எழுதிய பாடல்களையும் வகைப்படுத்தி சில மருத்துவக் கட்டுரைகளில் அவர்கள் கோடிட்டுக் காட்டுகிறார்கள்.

''ஒரு முறை பாடல் ஒலிப்பதிவின் போது இயக்குநர் ஸ்ரீதர், எம்.எஸ்.விஸ்வநாதன் உள்ளிட்டோர் நீண்ட நேரம் கண்ணதாசனுக்காகக் காத்திருந்திருந்தனர். ஒரு கட்டத் தில் கடுப்பான எம்.எஸ்.வி., 'இந்தக் குடிகாரரோட இதே வேலையாப் போச்சு. சொன்ன நேரத்துக்கு வந்து தொலைக்க மாட்டார்...’ என்றார். லேட்டாக வந்த கண்ணதாசனிடம் யாரோ ஒருவர் இதைப் போட்டுக்கொடுக்க, கண்ணதாசன் எதையும் காட்டிக் கொள்ளாமல் இயக்குநர் ஸ்ரீதரிடம் சிச்சுவேஷனைக் கேட்டுக்கொண்டார். பின்பு சாந்தம் ததும்ப எம்.எஸ்.வி-யை பார்த்து, 'நீங்க அப்படி எல்லாம் பேச மாட்டீங்களே...’ என்றவர் இசையின் ராகத்துடன் இழுத்துப் பாடினார் - 'சொன்னது நீதானா... சொல்... சொல்... சொல்... என்னுயிரே...’

இன்னொரு முறை, கவிஞர் புதிதாக அறிமுகமான பிரெஞ்சு மதுவைக் குடிக்க ஆசைப்பட்டு இருக்கிறார். கையில் காசு இல்லை. அவரது உடன்பிறந்த அண்ணனிடம் காசு கேட்டபோது, அண்ணன் மறுத்து விட்டாராம். அந்த வேகத்தில் கவிஞர் எழுதிய பாடல்தான், 'அண்ணன் என்னடா... தம்பி என்னடா... அவசரமான உலகத்திலே...’ '' என்று கண்ணதானின் உயர் உணர்வுகளின் வெளிப்பாடுகளைச் சொல்லும் மருத்துவர்கள், அதே கண்ணதாசன் மனச்சோர்வுக்கு உள்ளாகும்போது கடுமையான விரக்திக்கு ஆளானதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

நாஜி படைகள் இங்கிலாந்தை நெருங்கியபோது, நாடாளுமன்றத்தில் சர்ச்சில் ஆற்றிய பேருரைதான் இங்கிலாந்து மக்களையும் ராணுவ வீரர்களையும் சிலிர்த்து எழச் செய்து நாஜிப் படைகளைச் சின்னாபின்ன மாக்கியது. ஆனால், சர்ச்சிலால் இரண்டு லார்ஜ் அடிக்காமல் இயல்பாகப் பேசவே முடியாது. பெரும்பாலும் அவரது காலை உணவில் இரண்டு லார்ஜ் மது இல்லாமல் இருக்காது.

மதுவிடம் நான் இழந்ததை விட மதுவிடம் நான் பெற்றதே அதிகம் என்பது அவர் அடிக்கடி சொல்லும் வாக்கியம். அவர், மதுவின் ஒவ்வொரு துளியையும் ரசித்துக் குடித்தார். அதனால் அவரும் இரு துருவக் கோளாறால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

உலகப்புகழ் பெற்ற ஓவியர் வின்சென்ட் வான்கா, ஹாலிவுட் நடிகர் மெல் கிப்ஸன், எழுத்தாளர் ஷிட்னி ஷெல்டன் என நூற்றுக்கணக்கான படைப்பாளிகள் இரு துருவக் கோளாறில் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதே சமயம், இரு துருவக் கோளாறு மது குடிக்காதவர்களுக்கும்கூட வரும் என்று சொல்பவர்களும் உண்டு. ஆனாலும், மது குடிப்பவர்களே 90 சதவிகிதம் இந்தப் பிரச்னையை எதிர்கொள்கின்றனர் என்று சொல் கிறார்கள்.

ஒரு விஷயம் உறுதி... நானும் கவிதை எழுதுகிறேன் என்று யாரும் குவார்ட்டர் பாட்டிலைத் தட்டித் திறக்க வேண்டாம்... கவிதை வராது; குடிநோய்தான் வரும்.

டாஸ்மாக் பணியாளர்களின் சிரமம்குறித்து எழுதி இருந்ததற்கு நிறைய டாஸ்மாக் ஊழியர்கள் தொலைபேசியிலும் கடிதம் வாயிலாகவும் நன்றி தெரிவித்தனர். நல்லது. ஆனால், இந்தப் புள்ளிவிவரத்தை எழுதினால் திட்டுவார்களோ என்று நினைக்கிறேன். சரி, போற்றுவார் போற்றட்டும்... மண்ணை வாரித் தூற்றுவார் தூற்றட்டும்!

கடந்த ஏப்ரல் 11-ம் தேதியில் இருந்து மார்ச்12-ம் தேதி வரை ஓர் ஆண்டில் தமிழகத்தில் காஞ்சிபுரம், கோயம்புத்தூர், திருவள்ளூர், திருப்பூர், சேலம், மதுரை, திருச்சி, வேலூர், ஈரோடு, தஞ்சாவூர் ஆகிய 10 மாவட்டங்களில் அதிக அளவாக 251.27 லட்சம் மதுபானப் பெட்டிகள் விற்பனை ஆகி இருப்பதாக டாஸ்மாக் நிறுவனம் தெரிவிக்கிறது.

சுமார், இரண்டரைக் கோடி பெட்டிகள். ஒரு பெட்டிக்கு 48 பாட்டில்கள். அப்படி என்றால் மொத்தம் 120

கோடி பாட்டில்கள். ஒரு பாட்டிலுக்கு இரண்டு ரூபாய் கூடுதல் விலை வைத்து விற்கிறார்கள். அப்படி என்றால், ஆண்டுக்கு 240 கோடி ரூபாயை 'குடி’மகன்களிடம் இருந்து இவர்கள் கூடுதலாகப் பறிக்கிறார்கள். இந்த 240 கோடி என்பது வெறும் இரண்டு ரூபாய் கணக்குதான். பாட்டிலுக்கு ஐந்து ரூபாய் வரை கூடுதலாக வசூலிப்பவர்களும் உண்டு. அதைச் சேர்க்கவில்லை. பீருக்கு 10 ரூபாய் வரை கூடுதலாக விற்கிறார்கள். அதையும் இந்த 240 கோடியில் சேர்க்கவில்லை. காலை 5 மணி முதல் காலை 10 மணி வரை... இரவு 10 மணி தொடங்கி விடிய, விடிய ஒரு பாட்டிலுக்கு 30 முதல் 50 ரூபாய் வரை கூடுதலாக விற்கிறார்கள். அதுவும் இதில் சேர்க்கப்படவில்லை. காந்தி ஜெயந்தி, மஹாவீர் ஜெயந்தி உட்பட ஓர் ஆண்டுக்கு டாஸ்மாக் நிறுவனம் அளிக்கும் எட்டு விடுமுறை நாட்களிலும் கள்ளச்சந்தையில் ஒரு பாட்டிலுக்கு 50 ரூபாய் கூடுதலாக விற்கிறார்கள். அதைச் சேர்க்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக மேற்கண்ட 240 கோடி ரூபாய் என்பது 10 மாவட்டங்களுக்கான சராசரி கணக்கு மட்டுமே. எனவே, மிக, மிக, மிகக் குறைந்தபட்சமாக ஒரு ஆண்டுக்கு 240 கோடி பகல் கொள்ளை அடிக்கிறார்கள். அப்படி என்றால் முழுமையான கணக்குதான் எவ்வளவு?

'டாஸ்மாக்’ நிறுவனத்தில் வேலை பார்க்கும் நண்பர் ஒருவரிடம் கேட்டேன்.

''எல்லா வகையான சட்ட விரோத விற்பனை மூலமாக ஒரு நாளைக்குச் சராசரியாக மாநிலத்தில் 10 கோடி ரூபாய் வசூல் ஆகிறது...'' என்றார் அசராமல். அதாவது, மாதத்துக்கு 300 கோடி. ஆண்டுக்கு 3,600 கோடி. அதாவது டாஸ்மாக் நிறுவனத்தின் ஆண்டு வருமானத்தில் சுமார் 20 சதவிகிதம். என்ன, தலை கிறுகிறுக்கிறதா?!

நண்பர் சொன்னதை முழுமையாகப் படியுங்கள்... ''எல்லாவற்றை யும் நாங்கள்தான் அள்ளிக்கொண்டு போகிறோம் என்று நினைக் காதீர்கள். யார், யாருக்கு எல்லாம் போய்ச் சேர்கிறது தெரியுமா?

ஒரு மாதக் கணக்கு சொல்கிறேன். கேளுங்கள். அதிகாரிகளுக்கு ஒரு லட்சம். மதுவிலக்குப் பிரிவுக்கு 10 ஆயிரம். ஏரியா கவுன்சிலருக்கு 5,000. லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு 5,000. லோக்கல் தாதா, அரசியல் அடிப்பொடிகளுக்கு 5,000. ஆக, ஒரு கடைக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மொய் எழுதியாக வேண்டும். கூடுதல் விலை வைத்து விற்பதால், ஒரு கடையின் சராசரி மாத வருமானம் மூன்று லட்சம் ரூபாய். லஞ்சம் கொடுத்தது போக மீதம் இருப்பது ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய். இதை ஒரு கடையின் ஏழு ஊழியர் களுக்குப் பிரித்தால், ஒருவருக்கு 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே வருமானம். இந்தப் பாவப் பணத்துக்கு நாங்கள் கொடுக்கும் விலை என்ன தெரியுமா?

இன்றைக்கு 80 சதவிகித டாஸ்மாக் ஊழியர்கள் தினமும் குடிக்கிறார்கள். இதில் 40 சதவிகிதம் பேர் காலையிலேயே குடிப்ப வர்கள். கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 100 டாஸ்மாக் ஊழியர்கள் கல்லீரல் வீங்கி இறந்து இருக்கிறார்கள். பலர் குடித்து, குடித்து நடைப் பிணமாக இருக்கிறார்கள். பாதிப்பேருக்கு பேனா எடுத்து எழுத முடியாது. கை உதறும். இவை எல்லாம் உடல் ரீதியான பிரச்னைகள். 'எங்கே வேலை பார்க்கிறீர்கள்?’ என்று சொந்தக்காரர்கள் கேட்பார்கள். நாங்கள் தயங்கித் தயங்கித்தான் பதில் சொல்வோம். உடனே அவர்களின் முகமே மாறிவிடும். எங்கள் ஊழியர்களில் 50 சதவிகிதம் பேருக்கு வயது 40-ஐ நெருங்கியும் திருமணம் ஆகவில்லை என்ற அதிர்ச்சியான உண்மை உங்களுக்குத் தெரியுமா? எங்களுக்கு யாரும் பெண் கொடுக்க முன்வருவது இல்லை.

'குடிக்காமல் இருந்து தொலைய வேண்டியதுதானே? அத்தனைப் பேருமா குடிக்கிறார்கள்?’ என்று நீங்கள் கேட்கலாம். ஒழுக்கத்தைக் கற்றுத்தரும் ஆசிரியர்களே குடித்துவிட்டுப் பள்ளிக்குச் செல்கிறார்கள் என்று செய்திகளை படிக்கிறோம். புத்தகங் களுக்கு நடுவே இருப்பவருக்கே மனம் தடுமாறுகிறது என்றால், பாட்டில்களுக்கு மத்தியில் இருக்கும் எங்களுக்கு மனம் தடுமாறாதா? சரி, அப்படியும் கட்டுப்பாடாக இருக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு ஒரு கடைக்கு 100 பெட்டிகள் வந்து இறங்குகிறது என்றால், குறைந்தது 10 பாட்டில்கள் உடைகின்றன. அதை நாங்கள் என்ன செய்வதாம்? மனம் தடுமாறாமல் இருக்க டாஸ்மாக் ஊழியர்கள் அத்தனை பேரும் என்ன புத்தர்களா? இல்லை, போதி மரத்தடியில்தான் டாஸ்மாக் கடை இருக்கிறதா?

ஒரு பேச்சுக்கு நாங்கள் மொத்த ஊழியர்களும் திருந்தி விடுகிறோம். கூடுதல் விலை வசூலிக்க வில்லை என்றே வைத்துக் கொள்ளுங்கள். விடுவார்களா அதிகாரிகள்? பிடுங்கி எடுத்துவிட மாட்டார்கள்? உண்மையைச் சொல்லப் போனால், மாதம் 25 ஆயிரம் ரூபாய் வருமானத்துக்காக வாழ்க்கையைத் தொலைத்து விட்டோம்'' என்றார் அவர்!

தெளிவோம்