Published:Updated:

மயக்கம் என்ன?

மயக்கம் என்ன?

மயக்கம் என்ன?

மயக்கம் என்ன?

Published:Updated:
மயக்கம் என்ன?
##~##

பூசாரி சொன்னது உண்மைதான். இப்போ​தெல்லாம் டாஸ்மாக் மதுக்கடைகளின் வாசலில் பெண்களையும் சர்வ சாதாரணமாகப் பார்க்க முடிகிறது. இங்கு வரும் பெரும்பாலான பெண்கள் அடித்தட்டு ஏழைகள். கணவன் சகிதம் வந்து குடிக்கும் பெண்களும் உண்டு. இன்னொரு பக்கம் நட்சத்திர ஹோட்டல் பார்களில் வசதி படைத்த பெண்கள் கூட்டம் கூட்டமாகக் குடிக்கிறார்கள். குறிப்பாக, கல்லூரி மாணவிகள்.. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஓர் ஆணும் ஒரு பெண்ணும் தினமும் ஆறு லார்ஜ் மது அருந்துகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். பரலோகத்துக்கு முதலில் டிக்கெட் வாங்குவது நிச்சயம் பெண்ணாகத்தான் இருக்கும். ஏனெனில், இந்த விஷயத்திலும் லேடீஸ்தான் ஃபர்ஸ்ட்!

அடித்தட்டு ஏழைப் பெண்கள் உழைப்பின் களைப்பைப் போக்குகிறேன் என்று காரணம் சொல்லிக் குடிக்கிறார்கள். இல்லைஎன்றால், கணவனின் குடிப்பழக்கத்தால் தாங்களும் அந்தப் பழக்கத்துக்கு ஆளாகின்றனர். கணவனின் குடி காரணமாக பாதை மாறிப்போய், கோபம் விரக்தியாக மாறி குடிப்பழக்கத்துக்கு ஆளாகும் பெண்களும் உண்டு. கட்டட வேலை, சாலைப் பணி போன்ற கடின வேலைகளில் இருக்கும் பெண்களிடம் குடிப்பழக்கம் வேகமாகப் பரவுகிறது. அதிகம் குடிக்கிறார்கள். சீக்கிரமே இறக்கிறார்கள்!

மயக்கம் என்ன?

மதுரை, சிவகங்கை பகுதியில் உள்ள பல செங்கல் சூளைகளில் தினக் கூலி பெறும் பெண்களுக்கு சம்பளத்தோடு சேர்த்து, குவார்ட்டர் பாட்டிலும் கொடுக்கிறார்கள் - அதாவது, கொடுக்கும் சொற்பக் கூலியில் பாதி, மட்டமான மதுவாக வழங்கப்படுகிறது - என்ற தகவலை மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மாரிக்குமார் சொன்னபோது, காளவாயை விட அதிகமாக எரிந்தது வயிறு!

அடித்தட்டுப் பெண்கள் உடல் வலியை மறக்க என்ற பெயரில் மதுவுக்கு அடிமை ஆகிறார்கள் என்றால், மேல்தட்டுப் பெண்கள் கொண்டாட்டத்துக்காகவும் உடல் கட்டமைப்புக்காவும் அடிமை ஆகிறார்கள். அதாவது, ஆட்டத்துக்காகவும் அளவான இடுப்புக்காகவும்!

ஒருகாலத்தில் மேற்கத்திய இளம்பெண்களிடம் பரவலாக இருந்த 'டிரங்க்கோர்ஷியா’ நோய் (Drunkorexia) இப்போது சென்னை, கோவை போன்ற நகரத்து இளம்பெண்களிடம் அதிகமாகப் பரவிவருகிறது என்கின்றனர் மனநல மருத்துவர்கள். இந்த நோயால் பீடிக்கப்பட்டவர்களுக்கு, மது போதை இருந்துகொண்டே இருக்க  வேண்டும். அதுவும் போதை அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக வெறும் வயிற்றில் மது அருந்துவார்கள். மது அருந்திய பின், நன்றாகப் பசிக்கும். ஆனால், சாப்பிட மாட்டார்கள். சாப்பிட்டால் உடம்பு எடை போட்டுவிடும் என்ற நினைப்பு. அதனால், மேலும்மேலும் போதை ஏற்றிக்கொண்டு, சலிக்க சலிக்க ஆடி அப்படியே மட்டை ஆவார்கள். இதுதான் 'டிரங்க்கோர்ஷியா’.

மயக்கம் என்ன?

நம் சமூகத்தைப் பல விஷயங்கள் கரையான்களைப் போல ஊடுருவி அழித்துக்கொண்டு இருக்கின்றன. அவையோ, அவற்றின் தாக்குதலோ வெளியே தெரிவது இல்லை. அவற்றில் ஒன்றுதான் இன்றைய இளம்பெண்களின் இந்தக் குடிப்பழக்கமும் அது சார்ந்த நோய்களும்!

இந்த நோயின் விளைவுகள் என்ன தெரியுமா? ஒவ்வொன்றாகச் சொல்கிறேன். பெண்கள் பெரிதும் விரும்புவது தங்களின் முகம் மற்றும் தோல் அழகை. ஆல்கஹால் அதைத்தான் முதலில் அழிக்கும். ஆண்களைவிட பெண்களின் உடலில் கொழுப்புச் சத்து அதிகம். கல்லீரல் சுருங்கி, கொழுப்பு அதிகமாகி​விடும்பட்சத்தில் என்சைம்களில் சிக்கலாகி முகம் மற்றும் தோல் அழகைப் பாதிக்கும். அடுத்து இதயம். ஆண்களைவிட பெண்களே எளிதில் உணர்ச்சி​வசப்படுகிறார்கள். எனவே, குடிக்கும்போது உணர்ச்சிவசப்படுவதால் ரத்த அழுத்தம் அதிகமாகி இதயம் பலவீனம் ஆகும். சில சமயம், ரத்த அழுத்தம் தாங்காமல் இதயத்துக்குச் செல்லும் ரத்தக்குழாய்கள் வீங்கி, வெடிக்கும் அபாயமும் அதிகம். இல்லை எனில், இதயத்தில் அழுத்தம் தாங்காமல் ஓட்டை விழும். திடீரென இதயம் அதிகமாகத் துடிக்கும். சில சமயம் மிகமெதுவாகத் துடிக்கும்.  மது அருந்தாத பெண்களைவிட மது அருந்தும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட 41 சதவிகிதம் வாய்ப்பு அதிகம் என்கிறது  அமெரிக்காவின் மெடிக்கல் அசோசி​யேஷன். இவர்களுக்கு அந்த மூன்று நாட்களும் சீராக இருக்காது. வலியும் அதிகம் இருக்கும். அதேபோல், மது அருந்திவிட்டு செக்ஸ் வைத்துக்கொண்டால் கூடுதல் சுகம் கிடைக்கும் என்று நம்பிக் குடிக்கும் பெண்களும் இருக்கிறார்கள். உண்மையில், செக்ஸ் விஷயத்தில் ஆண் ஆக்டிவ் (Active) பார்ட்னர். பெண் பாசிவ் (Passive)  பார்ட்னர். அதாவது இயக்குவது ஆண். இயங்குவது பெண். அதனால், மது அருந்திவிட்டு செக்ஸ் வைத்துக்கொள்ளும் ஆணைவிட பெண்ணுக்குத்தான் பாதிப்பு அதிகம். ஆல்கஹால் அருந்தியதால் செக்ஸின்போது பெண்ணுக்கு பிறப்பு உறுப்பில் இயல்பாக சுரக்க வேண்டிய திரவம் சுரக்காது. உராய்வின்போது பிறப்பு உறுப்பில் வலி அதிகம் ஏற்படும். ஆண் உச்ச நிலை அடைந்தாலும் பெண்ணால் அது  முடியாது. எரிச்சலும் குற்ற உணர்வுமே மிஞ்சும்!

விளைவு... எந்தச் சுகத்தையுமே அனுபவிக்காமல் கருத்தரிக்கிறாள் பெண். அதன் பின்பும் கர்ப்பக் காலத்தில் குடிக்கும் ஒரு பெண் எவ்வளவு பெரிய பாவத்துக்கு ஆளாகிறாள் தெரியுமா? ஒரு சந்ததியையே அழிக்கிறாள்... ஒரு பாவமும் அறியாத பச்சிளங் குழந்தையின் வாழ்க்கையைக் காவு வாங்குகிறது அவளது கர்ப்பக் காலக் குடிப்பழக்கம். கர்ப்பக் காலத்தில் தறிகெட்டுக் குடித்துத் திரியும் பெண்ணின் குழந்தை பெரும்பாலும் மனநிலை பாதிக்கப்பட்டு, அவலட்சணமாகத்தான் பிறக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

அந்த நோயின் பெயர் 'ஃபெடல் ஆல்கஹால் சின்ரோம்’ (Fetal alcohol syndrome).இதன் காரணமாக 'க்ரானியோ ஃபேஷியல் அப்நார்மாலிட்டீஸ்’ (Cranio facial abnormalities) என்று சொல்லப்படும் வகை குழந்தைகளேயே குடிகாரத் தாய்மார்கள் பெற்று எடுப்பார்கள். இப்படிப் பிறக்கும் குழந்தையின் கண்கள் மிகச் சிறியதாக இருக்கும். மூக்கு மிகக் குறுகியதாக இருக்கும். உதடு பிளவுபட்டு இருக்கலாம் அல்லது மேல் உதடு மிகவும் மெலிந்து காணப்படலாம். இயல்பைவிட தலை பெருத்தோ அல்லது சிறுத்தோ இருக்கும். புத்தி மந்தமாகி குணம் மூர்க்கத்தனத்துடனோ அல்லது மூடத்தனத்துடனோ இருக்கும். சுவாசக்கோளாறு இருக்கும். கற்றல் குறைபாடு கட்டாயம் இருக்கும். மூட்டுக்கள் வலிமை இழந்து சிதைந்து காணப்படும். இப்படி ஒரு குழந்தையின் வாழ்க்கையையே நாசம் செய்கிறாள் குடிநோய்க்கு உள்ளான ஒரு பெண். இந்த நோயைப் பற்றியும் நோய் மீட்பு பற்றியும் உலகம் முழுவதும் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகங்கள், மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். ஆனால், இதுவரை தீர்வு கண்டுபிடிக்கப்படவில்லை. இப்போதைக்குள்ள ஒரே தீர்வு மது அருந்தாமைதான்!

மருத்துவமனைக்கு டாக்டரைப் பார்க்க வந்து இருந்த ஒருவரை சந்தித்தேன். வயதான 'க்ரானியோ ஃபேஷியல் அப்நார்மாலிட்டீஸ்’போல இருந்தார். குச்சி போன்ற எலும்புக்கூடு உடம்பு, பானை போன்ற வீங்கிப் பளபளத்த வயிற்றைச் சுமந்து நின்றது. அவர் வயிற்றுக்குள் மூன்று லிட்டர் வீச்சம் எடுத்த தண்ணீர் இருக்கிறது என்றார் டாக்டர்!

 - தெளிவோம்

மயக்கம் என்ன?

தமிழருவி மணியன், ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மதுவுக்கு எதிராக போராடி வருவது தெரியும். ஆனால், வெளியே தெரியாமல், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தமிழகத்தில் எத்தனையோ பேர் குடிக்கு எதிராகப் போராடி வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான், சேலத்தைச் சேர்ந்த டாக்டர் ஃப்ராங்கிளின் ஆசாத் காந்தி. தானே நெய்த கதர்த் துணியில் ஆடை தைத்து அணிந்து வரும் அளவுக்கு காந்தியக் கொள்கை மீது ஈர்ப்பு​கொண்டவர். தினமும் மாலை நேரத்தில் டாஸ்மாக் கடைக்கு வரும் இவர், குடிக்க வேண்டாம் என்று, குடிமகன்களிடம் பிரசாரம் செய்து வருகிறார். பாருக்குள் குடித்துக்கொண்டு இருக்கும் குடிமகன்களிடம் குடியின் தீமைகளைப் பற்றி அன்புடன் எடுத்துச் சொல்கிறார். இதை எல்லாம் விட இன்னும் ஒருபடி மேலே சென்று,  குடிகாரர்களின் காலில் விழுந்து குடிக்க வேண்டாம் என்று கெஞ்சுகிறார்.

இதற்காக, கோபக்கார குடிமகன்களிடம் இவர் பட்ட காயங்களும் அதிகம்.

படங்கள்: க.தனசேகரன்

மயக்கம் என்ன?

 1912-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், உவரி கிராமத்தில் அருட்தந்தை அந்தோணி சூசைநாதர் என்ப​வரால் தொடங்கப்பட்டது பரிசுத்த அமலோற்பவ மாதா மது​விலக்கு திருச்சபை. அன்றைய காலகட்டத்தில் உவரியில் நிறையப் பேர் சாராயத்துக்கு அடிமையாகி இருந்தனராம். அவர்​களை மீட்க 15 பேருடன் தொடங்கப்பட்ட இந்தச் சபையில் இன்று 300-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருக்​கின்றனர். மதுப்பழக்கம், சூதாட்டம், விலைமாதர்​களிடம் செல்லக்கூடாது என்பது இவர்களின் பிரதான கொள்கை. இதன் உறுப்பினர்கள் எந்த ஊரில் இருந்​தாலும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை புனித அம​லோற்பவ மாதாவின் முன் கூடி, 'மது, சூது, விலைமாதர் இந்த மூன்றையும் தொட மாட்டோம்...’ என்று உறுதிமொழி ஏற்கிறார்கள். அப்படி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உறுதிமொழி ஏற்காதவர்கள் சபையில் இருந்து நீக்கப்படுவார்கள். வெளிநாட்டிலோ அல்லது வர முடியாத இக்கட்டான சூழலில் இருந்தால் மட்டும் உறுதிமொழி ஏற்பில் விலக்கு உண்டாம். வாழ்நாள் முழுக்க மதுவுக்கு எதிரான பிரசாரம் மேற்கொள்வது இவர்களின் பணி!

படம்: எல்.ராஜேந்திரன்

மயக்கம் என்ன?

*நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த அருட்தந்தை ஃபிரான்ஸில் ஜெயபதி. குடியால்  பாதிக்கப்பட்டு, அதில் இருந்து மீண்டவர். குடியை ஒழிக்க வேண்டும் என்று சபதம் எடுத்து குடிக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வருகிறார். ஆக்ஸ்போர்டு கல்லூரியில் எம்.ஃபில். மற்றும் டாக்டர் பட்டம் பெற்றவர். சென்னை லயோலா கல்லூரி உட்பட பல்​வேறு கல்லூரி​களில் பேராசிரி​யராகப் பணிபுரிந்தவர். இப்போது, நாகர்கோவில் கார்மல் மேல்​நிலைப் பள்ளியில், குடிநோயாளி​களுக்கு இலவசமாக கவுன்சிலிங் அளித்து வருகிறார். தவிர, குடி நோயாளிகளின் தனித்திறமைகளைக் கண்டறிந்து அவர்களை ஊக்குவித்து, பயிற்சியும் அளிக்கிறார்.

கன்னியாகுமாரி மாவட்டத்தில் சுமார் 68 கி.மீ. நீள​முள்ள கடற்கரையின் ஏராளமான கிராமங்களில் குடிப்பழக்கம் தொடர்பாக ஆய்வு செய்தவர், மீனவச் சமுதாயத்தில் மதுவின் தாக்கம் அதிகம் இருப்பதைக் கண்டறிந்து ஒவ்வொரு கிராமத்திலும் கால் தேய நடந்து, குடிக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism