உலகில் உள்ள ஒரே குடும்ப நோய் எது தெரியுமா?

சர்க்கரை நோய், காச நோய், இதய நோய்... எதற்கும் அந்தக் கசப்பான அந்தஸ்தை அளிக்க முடியாது; ஒரே நோய், குடிநோய் மட்டுமே!

மரபு அணுக்கள் வழியாகக் கடத்தப்படும் மரபுவழி நோய்களான சர்க்கரை உள்ளிட்ட நோய்களைக் கூட 'ஏதோ பாட்டன், பூட்டன் கொடுத்துட்டுப்போன சொத்து...’ என்று அலுப்புடன் ஆறுதல்பட்டு ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், குடிநோய்? நோயாளியின் மனைவி, மக்களையும் சேர்த்துக் கொல்லும்!

குடும்ப நோய் என்றால் என்ன? குடும்பத்தில் ஒருவருக்கோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவருக்கோ இருக்கும் நாள்பட்ட, மீட்க மிகவும் பிரயத்தனப்படும், தொடர்ந்து துன்பமான போராட்டத்தை உருவாக்கி வரும் ஒரு நோய் - குடும்பத்தில் ஓரிருவருக்கு மட்டும் இருக்கும் இந்த நோயால் குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேரும் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், சமூகரீதியாகவும் பாதிக்கப்பட்டு இருந்தால், அது குடும்ப நோய்.

'வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்’ என்று சொன்ன தமிழக அரசுதான் இன்று, 'டாஸ்மாக்’ விற்பனை இலக்கை அபரிமிதமாக உயர்த்தி, 'வீட்டுக்கு ஒரு குடிநோயாளியை உருவாக்குவோம்’ என மறைமுகமாக வற்புறுத்துகிறது.

அரசாங்கம் நேர்மையாக ஒரு கணக்கு எடுத்தால், இன்றைக்குத் தமிழகத்தில் 50 சதவிகிதம் குடும்பங்களில், குடும்பத்துக்கு ஒருவராவது குடிநோயாளியாக இருக்கும் அதிர்ச்சியான உண்மை தெரியவரும். அப்படியெனில், தமிழகத்தில் இருக்கும் பாதிக்குப் பாதி குடும்பங்கள் குடிநோயால் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. அதாவது, சுமார் மூன்றரைக் கோடி மக்கள் குடிநோயால் பீடிக்கப்பட்டு உள்ளனர் என்றுதானே அர்த்தம்? இதைப் படிப்பவர்களுக்கும் சரி... அரசுக்கும் சரி... நான் மிகைப்படுத்தி எழுதுவதாகவே தோன்றும். ஆம், மேலோட்டமாகப் பார்த்தால் அப்படித்தான் தோன்றும். பட்டியலிட்டு ஒவ்வொன்றாகத் தெளிவாகச் சொல்கிறேன். தொடர்ந்து படியுங்கள் புரியும்.

ஒரு வீட்டில் குடும்பத் தலைவர் குடிநோயாளியாக இருக்கும் பட்சத்தில் அவரது பெற்றோர், மனைவி, குழந்தைகள் என அனைவருமே பாதிக்கப்பட்டு இருப்பார்கள். மனைவி குடிநோயாளியாக இருந்தாலும் அப்படியே. குழந்தைகள் குடிநோயாளியாக இருந்தாலும் அப்படியே.

சரி... குடும்பத்தில் ஒருவர் அல்லது இருவர் குடிப்பதால், மற்ற உறுப்பினர்களும் எப்படி நோயாளி ஆகிறார்கள்?

முதலில் குழந்தைகள்... ஏனெனில், ஒரு குடும்பத்தில் மற்றவர்களை விட குடிநோயாளிகளால் அதிகம் பாதிக்கப்படுவது இந்தப் பிஞ்சுகளே.

குடிநோயாளிகளால் குழந்தைகள் படும் வேதனைகளையும் அதனால் அவர்களின் மனநிலை, உடல்நிலையில் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் சென்னையின் பிரபல மது மீட்பு சிகிச்சை மையமான டி.டி.கே. மருத்துவமனை நிறுவனம் பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் புத்தகங்களையும் வெளியிட்டுள்ளது.

ஒருவரின் வாழ்க்கையில் முதல் 18 ஆண்டுகள் மிகவும் முக்கியமான காலகட்டம். குழந்தைகளின் உடல் வளர்ச்சி, மனம் பக்குவம் அடைதல், படைப்பாற்றல், தனித்திறமைகள் போன்றவை இந்தக் காலகட்டத்தில்தான் வளர்ச்சி அடைகின்றன. குழந்தைகளின் அக, புறத் தேவைகளைப் புரிந்து கொண்டு பெற்றோர் அவற்றைப் பூர்த்திசெய்ய வேண்டிய காலகட்டமும் இதுதான்.

எந்த ஒரு குழந்தையுமே ஒவ்வொன்றையும் தனது பெற்றோரைப் பார்த்தே கற்றுக்கொள்கிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் தனது பெற்றோரே முதல் முன்மாதிரி.

ஆனால், குடிநோயாளியின் குடும்பங்களில் நடப்பது என்ன? குடிநோயாளி தவறு செய்துவிட்டு வந்து, தவறை நியாயப்படுத்துகிறார். பொய் பேசுகிறார். வாக்குறுதி கொடுத்துவிட்டு மீறுகிறார். அலங்கோலமாக வீட்டுக்கு வருகிறார். வீட்டில் திருடுகிறார். அடித்துப் பிடுங்குகிறார். குளிக்காமல் அசுத்தமாக இருக்கிறார். அழுக்காய்த் திரிகிறார். காலம் தவறி வீட்டுக்கு வருகிறார். சமயங்களில் வருவதே இல்லை. ஒழுங்கின்மையாகச் சாப்பிடுகிறார். மனைவியை தாக்குகிறார். வீட்டில் சண்டை நாறுகிறது. சாப்பாட்டுத் தட்டை வீசி அடிக்கிறார். நடுவீட்டில் வாந்தி எடுக்கிறார். மனைவியிடம் வன்புணர்கிறார். வேலைக்குச் செல்வது இல்லை. தினமும் உடற்பயிற்சி, தியானம், யோகா என வாழ்வியல் ஆரோக்கிய - ஒழுக்க நடைமுறைகள் எதுவும் அவரிடம் இல்லை.

இதை எல்லாம் பார்த்து வளரும் குழந்தைகள் எப்படி இருப்பார்கள்?

குடிநோயாளியின் கோபமான நடவடிக்கைகளைப் பார்த்து குடும்பத்தின் இதர உறுப்பினர்களே அவர் மீது பயத்தில், வெறுப்பில் இருப்பார்கள். பெரியவர்களுக்கே அப்படி என்றால், குழந்தைகள் தாங்க முடியாத பயத்தில் இருப்பார்கள். கொஞ்சம் வளர்ந்த குழந்தைகளுக்குச் சிந்தனைகள் எதிர்மறையாக இருக்கும். இதுபோன்ற சூழ்நிலைகளில் குழந்தைகள் தனக்குத்தானே மூன்று விதிமுறைகளை வகுத்துக்கொள்கின்றன என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். அவை... யாரிடமும் பேசாதே. யாரையும் நம்பாதே. யாரிடமும் உணர்ச்சியைக் காட்டாதே!

பொதுவாக, மூன்று வயதுக்குட்பட்ட குட்டிக் குழந்தைகளுக்கு நெருக்கமானவர்கள் பெற்றோரே. கொஞ்சம் வளர்ந்த பின்னரே பக்கத்து வீட்டு பாபிம்மா, சந்தோஷ் எல்லோரும். சந்தோஷம், பயம், துக்கம் எல்லாவற்றையும் அந்தக் குழந்தை முதலில் பெற்றோரிடம்தான் பகிர்ந்துகொள்ளும். ஆனால், குடிநோயாளியின் குடும்பத்தில் பிரச்னைகளைச் சமாளிப்பதற்கே நேரம் போதாது. அப்புறம் எங்கே குழந்தையின் வார்த்தைகளைச் செவிமடுத்து கேட்பது... அவர்களுடன் மனம்விட்டு பேசுவது?

'இன்னைக்கு ரன்னிங்ல நான்தான் ஃபர்ஸ்ட்’ என்றோ... 'பின்னாடி பெஞ்சு கணேஷ் பென்சில்ல என் தலையில குத்திட்டான்’ என்றோ மனதில் இருக்கும் சந்தோஷத்தை, துக்கத்தைக் குழந்தை பெற்றோரிடம் சொல்லக்கூட முடிவது இல்லை. அப்படியும் சண்டை முடியும் வரை காத்திருந்து, எல்லாம் ஓய்ந்த பிறகு, பிள்ளை மெதுவாகப் பேச்சு எடுக்கிறது என்று வைத்துக்கொள்வோம். என்ன ரியாக்ஷன் கிடைக்கும்? குழந்தை கூறுவதை யாரும் செவிமடுத்துக் கேட்க மாட்டார்கள். இல்லை, சோகமாக... எந்த உணர்வையும் காட்டாமல் 'ம்ஹூம்... அப்படியா?’ என்பார்கள். குழந்தை ஏமாற்றத்துடன் 'இல்லப்பா... இல்லம்மா... அவன் வந்து...’ என்று ஆரம்பித்தால், 'சனியனே, இருக்கிற பிரச்னை பத்தாம நீ வேற ஏன் நச்சரிக்கிற’ என்று தள்ளிவிடுவார்கள். முதுகில் நாலு சாத்து சாத்துவார்கள். இப்படி பழகிப்போன குழந்தைக்கு 'யாரிடமும் பேசாதே’ என்று மனதுக்குள் ஆழமாகப் பதிந்து விடுகிறது!

அடுத்தது, 'யாரையும் நம்பாதே!’ குடிநோயாளிகள் குடிக்காமல் இருக்கும் போதும் குடித்துவிட்டு வந்த பிறகும் குழந்தைகளுக்கு எவ்வளவு வாக்குறுதி கொடுக் கிறார்கள்? பொதுவாக குடிநோயாளிகள் அலுவலகத்தில், நண்பர்களிடம், இதர குடும்ப உறுப்பினர்களிடம் கொடுக்கிற உறுதிமொழிகளையே பெரும்பாலும் காப்பாற்றத் தவறிவிடுகின்றனர். அப்படியானால் குழந்தைகளிடம் கொடுக்கும் வாக்குறுதிகளுக்கு எப்படி முக்கியத்துவம் அளிப்பார்கள்? மூக்கு முட்டக் குடித்துவிட்டு வந்து, நன்றாக தூங்கிக்கொண்டிருக்கிற குழந்தையைக் கொஞ்சுகிறேன் பேர்வழி என்று எழுப்பி, முத்தம் கொடுத்து, கன்னத்தில் கடித்துவைத்து அது தூக்கம் தெளிந்து... ஓவென்று அழுத பிறகு, 'டாடி நாளைக்கு சர்க்கஸுக்குக் கூட்டிப்போறேன்...’ 'அப்பா நாளைக்கு உனக்கு சைக்கிள் வாங்கித் தர்றேன்...’ என்று அந்தக் குழந்தையை கலர், கலர் கனவுகளில் ஆழ்த்துவார்கள். குழந்தையும் சைக்கிள் ஓட்டிக் கொண்டே தூங்கிவிடும்.

ஆனால், இவை எதுவுமே குடிநோயாளிக்கு மறு நாள் நினைவில் இருக்காது. அப்படியே இருந்தாலும் குழந்தைதானே... சமாளித்துக்கொள்ளலாம் என்று அலட்சியப்படுத்தி விடுகிறார்கள். ஆனால், குழந்தை மறக்காது. அப்பா வந்தவுடன் கரெக்டாகக் கேட்கும். ஒன்று, அப்புறம் வாங்கித் தருவதாக சமாளிப்பார்கள். ரொம்ப தொந்தரவு செய்தால், முத்தம் கொடுத்த அதே கன்னத்தில் அடி விழும். இப்படி பழகிப்போன குழந்தையின் ஆழ்மனதில், 'யாரையும் நம்பாதே’ என்பது அழுத்தமாகப் பதிந்து விடுகிறது.

அடுத்து... 'யாரிடமும் உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொள்ளாதே!’ 'பாட்டி... அப்பா பாவம், அம்மா நேத்து அப்பாவைப் போட்டு அடிச்சிருச்சி. அப்பா அழுதாரு தெரியுமா...’ என்று சொல்லும் குழந்தைக்கு என்ன பதில் கிடைக்கும்? 'அவனை அடிக்காம என்ன பண்ணுவாங்களாம். அவன் கிடக்கான் குடிகாரன். அவனால என் புள்ளை வாழ்க்கையே நாசமாப்போச்சு...’ என்று குழந்தையிடம் புலம் புவார் பாட்டி. தனக்கு மிகவும் பிடித்த அப்பா குடிகாரனா? அப்பாவால், அம்மாவின் வாழ்க்கை நாசமாகப் போச்சா? யோசித்து குழம்பித் தவிக்கும் குழந்தை, உணர்ச்சிகளை அடக்க முடியாமல் ஒருநாள் அப்பாவிடமே இதைக் கேட்டுவிடும். கொதித்துப்போகும் குடிநோயாளி 'பச்ச மண்ணுல விஷத்தை விதைக்கிறாங்களே’ என்று பிரச்னை செய்வார். வீடு இரண்டுபட்டு ரணகளமாகிவிடும். இப்படிப் பழகிப்போன குழந்தைக்கு, 'யாரிடமும் உணர்ச்சிகளைக் பகிர்ந்து கொள்ளாதே’ என்று மனதில் பதிந்து விடும்!

இப்படி, மனதில் பதிந்து போகும் குழந்தைகள் எப்படி மாறிப் போகும் தெரியுமா?

தெளிவோம்

''இழுத்துப் பூட்டுவோம்!''

டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கடந்த ஐந்து ஆண்டுகளாகப் போராடி வருகிறது மாநில அளவில் செயல்படும், 'மகளிர் ஆயம்’ அமைப்பு. இந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளரான அருணா, ''செய்தித்தாளைப் புரட்டினால் மது குடித்துவிட்டு பெண்கள் மீது நடக்கும் வன்கொடுமை செய்திகள்தான் நிறைய வருகின்றன. கடந்த மாதம் மதுரை பி.பி.குளத்தில் மது குடித்துவிட்டு வந்த நபர் ஒருவர், தனது தாயையே பலாத்காரம் செய்ய முயன்று இருக்கிறார். அதனால், தாயே மகனின் தலையில் கல்லைத் தூக்கிப்போட்டுக் கொன்று விட்டார். இப்படி, மதுவால் நடக்கும் கொடுமைகள் ஏராளம். டாஸ்மாக் கடைகளால் தமிழகத்தில் விதவைகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது. இனியும் தமிழக அரசு மதுக் கடைகளை மூடவில்லை என்றால், பெண்கள் அமைப்புகள் திரண்டு வீதிதோறும் மதுக்கடைகளை இழுத்துப் பூட்டுவோம்...'' என்றார்!

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி