சென்னையில் நடந்த குடிநோயாளிகளுக் கான 'ஏஏ’ கூட்டம் அது. குடிநோயில் இருந்து மீண்டுவிட்ட குடிநோயாளி ஒருவர் (மீண்டு விட்டாலும் அவர் குடிநோயாளியே) அந்தக் கூட்டத்தில் பகிர்ந்துகொண்டதைக் கேட்டபோது நெஞ்சம் கலங்கியது.

கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். பெற்றோருக்கு ஒரே மகன். கம்பீரமான அரசுத் துறைப் பணியில் இருப்பவர். அவர் மிதமிஞ்சிய குடிநோய்க்கு ஆட்பட்டபோது ஓய்வுபெற்ற ஆசிரியையான தனது தாயை டாஸ்மாக் கடைக்கு அனுப்பி இருக்கிறார். சிகரெட் வாங்கி வரச் சொல்லி துரத்தி இருக்கிறார். கணவனை இழந்த, மகனை அண்டிப் பிழைக்க வேண்டிய அந்தத் தாய் வேறு வழி இல்லாமல் டாஸ்மாக் கடைக்குச் சென்று குடிநோயாளிகளின் கூட்டத்தில் நசுங்கி, கைகள் நடுங்க... கண்ணீர் வழிய மதுபாட்டில் வாங்கி வந்து கொடுத்து இருக்கிறார். அதைச்செய்ய மறுத்தபோது தாயை அவர் கடுமையாக அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்தச் சம்பவங்களைக் குடிநோயாளி நண்பர் அந்தக் கூட்டத்தில் சொன்னபோது தாங்க மாட்டாமல் கதறிவிட்டார். பலர் சமாதானப்படுத்தியபோதும் அவரது அழுகை நிற்கவில்லை. ஒரு கட்டத்தில் பார்வையாளர் கூட்டத்தில் இருந்த அவரது தாய் மேடை ஏறி மகனைச் சமாதானப்படுத்த முயல... அத்தனை பேர் முன்னிலையிலும் அவர், தாயின் காலில் விழுந்து கதறி தலையில் மடார் மடார் என்று அடித்துக்கொண்டு அழுது கண்ணீரால் தாயின் காலைக் கழுவியது ஆயுசுக்கும் மறக்க முடியாத காட்சி!

கருவைச் சுமப்பதில் தொடங்கி ஒரு குழந்தை வளர வளர அதன் ஒவ்வோர் அசைவையும் பார்த்து, ரசித்து ஆயிரம் ஆசைகளுடனும் லட்சியக் கனவுகளுடனும் குழந்தையை வளர்க்கிறார்கள் பெற்றோர். தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன் என்பார்கள். ஆனால், பெற்றோரைப் பொறுத்தவரை தனது குழந்தை தோளுக்கு மேல் வளர்ந்தாலும் குழந்தையே. இப்படிப் பெற்றோரால் குழந்தையாகப் பாவிக்கப்படும் ஒருவர் குடிநோயாளியாக மாறும்போது, அந்தப் பெற்றோருக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா?

தனது பிள்ளை மது அருந்தினார் என்பதை முதல்முறையாகக் கேள்விப்படும்போது மது வாசனையே அறியாத... மது குடிப்பதை குற்றமாகக் கருதும் பெற்றோர் அடையும் அதிர்ச்சி ஆயிரம் வால்ட் மின் தாக்குதலைவிட மோசமானது என் கிறார்கள் மருத்துவர்கள். அப்போது, அவர்களின் எதிர்வினை எப்படி இருக்கும்? தங்கள் குழந்தை மீது அதீத பாசம் கொண்ட படித்த மற்றும் படிக்காத, பக்குவமற்ற, உணர்ச்சி வசப்படும் பெற்றோர் பிள்ளையை சாத்துசாத்து என்று சாத்துவார்கள். கதவைத் தாழிட்டு உள்ளே வராதே என்று கட்டளை இடுவார்கள். உறவினரை, ஊராரைக் கூட்டி குடும்பமானம் போய்விட்டதே என்று பதறிக் கதறுவார்கள்.

பக்குவமான, படித்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்து, கவலையுற்றாலும்கூட, அமைதியுடன் அமர்ந்து பிரச்னையை எப்படிக் களையலாம்; தங்கள் குழந்தையை எப்படி மீட்கலாம் என்று ஆலோசிப்பார்கள். சில பெற்றோரோ எல்லாவற்றையும் தங்களுக்குள் போட்டு அடைத் துக்கொண்டு, புழுங்குவார்கள். இன்னும் சில பெற் றோர்கள் சந்திக்கும் வேதனைகள் வேறுரகம். குடி நோயாளியாக மாறிய ஒருவர் தனது குடிநோய் உள்ளிட்ட அனைத்துப் பாதிப்புகளுக்கும் தனது பெற் றோரை காரணம் காட்டியே சித்ரவதை செய்வார்கள். 'எதுக்கு என்னைப் பெத்த?’ 'நீ நல்லாப் படிக்க வெச்சி இருந்தா, இப்படிக் குடிச்சு இருப்பேனா?’ 'அத்தனை சொத்தையும் வித்துத் தின் னுட்ட... எனக்கு என்ன மீதி வெச்ச?’ என்பவற்றில் தொடங்கி, 'எவன்கூட படுத்து என்னைப் பெத்த?’ என்பது வரை நீளும் குடிநோயாளியின் வக்கிரக் கேள்விகள். ஏனெனில், மனைவி மீது மட்டும் அல்ல... எல்லோர் மீதும் சந்தேகப்படுவது குடிநோயாளிகளின் இயல்பு.

குடிநோயாளிகளின் கலாட்டாக்களால் காவல் நிலையம் சென்று அவமானப்படும் பெற்றோரும் உண்டு. குடிநோயாளி வாங்கிய கடனைத் தங்களின் ஓய்வு ஊதியத்தில் அடைக்கும் பெற்றோரும் உண்டு. வெளியூர் சென்றால் கூட, ஊரில் இந்நேரம் தனது குடிநோயாளிப் பிள்ளை என்ன செய்துகொண்டு இருக்கிறானோ, எங்கு விழுந்து கிடக்கிறானோ என்று நினைத்து நினைத்து நெஞ்சம் கலங்கும் பெற்றோரும் உண்டு. ஓர் இரவு கூட நிம்மதியாக உறங்க முடியாமல் நடுஇரவில் துர்கனவு கண்டு தூக்கிவாரிப் போட்டு விழித்து எழுந்து பதறும் பெற்றோரும் உண்டு. குடிநோயாளியின் எதிர்காலத்தை நினைத்து உடல் ரீதியாக, உள்ள ரீதியாக கலங்கி, கலங்கி வாழ வேண்டிய ஆயுளின் பத்து ஆண்டுகளுக்கு முன்பே இறந்துபோகும் பெற்றோரும் உண்டு.

இப்படிப் பாதிப்புக்கு உள்ளாகும் பெற்றோர்கள் குடிப் பழக்கத்துக்கு ஆளான பிள்ளைகளைத் திருத்த எடுக்கும் ஆயுதங்களில் ஒன்று... கால் கட்டு. குடிநோயாளிக்குத் திருமணம் செய்து வைப்பது பெரியதவறு மட்டும் அல்ல... துரோகமும் கூட. ஒரு பெண்ணை மட்டும் அல்லாமல் குடிநோய்க்குத் தொடர்பே இல்லாத இன்னொரு குடும்பத்தையும் சேர்த்து குடும்ப நோய் என்ற படுகுழிக்குள் தள்ளிவிடும் பாவம் இது. குடிநோயின் உச்சத்தில் இருக்கும் ஒரு குடிநோயாளி, தனது குடி சார்ந்த தனிப்பட்ட உலகத்துக்குள் இன்னொருவர் வருவதை ஒருபோதும் விரும்ப மாட்டார். இந்தநிலையில், கால்கட்டு போட்டால் சரியாகிவிடும் என்று நினைத்து, வற்புறுத்தி அவருக்குத் திருமணம் செய்துவைத்தால், குடிநோயாளியின் ஒட்டுமொத்த வெறுப்பும் அந்த அப்பாவிப் பெண் மீதுதான் திரும்பும். தனது சுதந்திரமும் தனிமையும் பறிக்கப்பட்டதற்கு அந்தப் பெண்தான் காரணம் என்று குடிநோயாளி கருதுவார். ஏற்கெனவே, குடித்ததை விட இரு மடங்கு மது குடிப்பார். மனைவியையும் சேர்த்து குடிக்கத் தூண்டுவார். மனைவியின் மீதான வன்முறைகள் - சிகரெட்டால் சூடு வைப்பது, கயிற்றில் கட்டிப்போட்டு உதைப்பது, நிர்வாணப்படுத்தி அடிப்பது - போன்ற சைக்கோ வகையிலான சித்ரவதைகளுக்கு எல்லாம் காரணம் இந்தவகைக் கால்கட்டுகள்தான் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால், இதற்கும் பெற்றோர் விலை கொடுக்க வேண்டி இருக்கும்... 'நல்ல பொண்ணைக் கட்டிவெச்சு இருந்தா இப்படிக் குடிச்சு நாசமாப் போய் இருப்பேனா?’ என்று கேட்டு அடிப்பார்கள் குடிநோயாளிகள். ஆகை யால், குடிநோயாளிகள் குடிப்பழக்கத்தால் எவ்வளவு உடல்ரீதியாக பாதிக்கப் படுகிறார்களோ, அதே அளவுக்கு மனரீதியாக அவர்களுடைய பெற் றோர் பாதிக்கப்படுகிறார்கள் என்கின்றனர் மருத் துவர்கள்.

சில வாரங்களுக்கு முன், தமிழகத்தில் பாதிக்குப் பாதி பேர் குடிநோயாளிகள் என்று நான் எழுதிய போது உங்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கலாம். ஆனால், அதில் எத்தனை உண்மை இருக்கிறது என்பதை இப்போது உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.

இப்படி இருந்தால், இந்த மாநிலத்தின் மனித வளம் என்ன ஆவது? பள்ளிக் குழந்தைகளில் தொடங்கி முதியவர்கள் வரை குடிநோயாளிகளாக இருந்தால்... எதிர்காலத்தில் இந்த மாநிலம் எப்படி முன்னோடி மாநிலமாக மாறும்? வெறும் 20,000 கோடி லாபத்துக்காக ஒட்டுமொத்த மக்களின் உயிரையும் பணயம் வைப்பது கண்ணை விற்று சித்திரம் வாங்குவதுபோல் ஆகாதா?

மருத்துவர்கள் சொல்கிறார்கள் குடிநோய் ஒரு குடும்ப நோய் என்று. நான் சொல்கிறேன் குடிநோய் குடும்ப நோய் இல்லை - அது ஒரு சமூக நோய். குடிநோயாளியை மட்டும் அல்லாமல் அவரது குழந்தையை, மனைவியை, பெற்றோரை, சகோதரர், சகோதரியை, மாமனார், மாமியார் என்று மற்றும் ஒரு குடும்பத்தை, உறவினர்களை, நண்பர்களை என மொத்த சமூகத்தையும் சிதைக்கும் குடிநோய் ஒரு சமூக நோய். இன்றைக்கு நமது அரசுகள் பல மாநிலங்களில் புதுப்புது மதுபான நிறுவனங்களுக்கு அளித்துவரும் அனுமதிகளைப் பார்க்கும்போதும்... மது விற்பனைக் கொள்கைகளை ஊக்குவிக்கும்போதும் சந்தேகமாக இருக்கிறது - அன்னிய சக்திகள் நம் மீது தொடுக்கும் 'பயோ வார்’ போன்ற 'ஆல்கஹாலிக் வார்’க்கு நாம் பலியாகிக் கொண்டு இருக்கிறோமா என்று!

மது விலக்கை அமல்படுத்தினால், கள்ளச் சாராயம் பெருகும் என்பது ஒரு சாராரின் வாதம். கள்ளச் சாராயத்தைக் கட்டுப்படுத்த முடியாது என்று சொல்வது போலீஸாரின் கையாலாகாத்தனம்; இப்போதே, தமிழகத்தில் கள்ளச்சாராயம் தாராளமாகப் புழங்குகிறது என்கிறார்கள் இன்னொரு சாரார். இதை நிரூபிப்பதுபோல கும்பகோணத்தில் கள்ளச் சாராய விற்பனை படுஜோராக நடக்கிறது.

கடந்த அக்டோபர் 2-ம் தேதி, கும்பகோணம் அருகே வலையப்பேட்டை ஊராட்சியைச் சேர்ந்த பெண்கள் தங்கள் ஊரில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதைக் கண்டித்து சாலை மறியல் நடத்தினர். போராட்டத்துக்கு ஆதாரமாக கள்ளச் சாராய பாக்கெட்டுகளை மாலைபோல சரம், சரமாக கோத்து எடுத்து வந்து இருந்தனர். ''புதுச்சேரியில் இருந்து ஸ்பிரிட் கடத்தி வந்து அதுல தண்ணீர், பேட்டரி, செத்த எலி எல்லாம் போட்டுக் கொதிக்க வெச்சு கள்ளச்சாராயம் தயாரிக்கிறாங்க. சாயங்காலம் அஞ்சு மணிக்கே பைபாஸ் ரோட்ல கூடையில் வெச்சு சாராய பாக்கெட்டுகளைப் பகிரங்கமா விக்கிறாங்க'' என்கின்றனர் அந்தப் பகுதி மக்கள்.

- சி.சுரேஷ், படம்: கே.குணசீலன்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது எஸ்.டி.பி.ஐ. கட்சி. காந்தி பிறந்த தினமான அக்டோபர் 02-ம் தேதி தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டத்தை அக்கட்சி நடத்தியது. தொடர்ந்து 15 நாட்கள் மாநிலம் முழுவதும் விழிப்பு உணர்வு பிரசாரப் பாடல்கள், நாடகங்கள்,துண்டு பிரசுரம் விநியோகம், போஸ்டர் பிரசாரம், தெருமுனை கூட்டங்கள், பொதுக்கூட்டங்களை அக்கட்சி நடத்தி வருகிறது. தொடர்ந்து கடந்த 7-ம் தேதி அன்று சென்னை ஏழுகிணறு பகுதியில் அக்கட்சி சார்பில் மதுவிலக்கை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடந்தது. இதுகுறித்து நம்மிடம் பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி, ''அக்டோபர் 2-க்கு முன்பு மது விலக்கு அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும் என்று எங்கள் கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் கேட்டு இருந்தன. ஆனால், அரசு மௌனம் காப்பது வருந்ததக்கது. எனவே வரும் 17-ம் தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருக்கிறோம். அதன்பிறகும் மதுக்கடைகளை அரசு மூடவில்லை என்றால், மக்களை ஒன்று திரட்டி மதுக்கடைகளை அடித்து நொறுக்கும் போராட்டம் மேற்கொள்ளப்படும்...'' என்றார் அதிரடியாக!

- மு.செய்யது முகம்மது ஆசாத்