Published:Updated:

`274 மாவட்டங்களில் கொரோனா தாக்கம்; 3,374 பேருக்கு பாதிப்பு!’ – மத்திய அரசு தகவல்

சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால்
News
சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் ( Ani )

உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களைத் தயாரிக்கும் பணிகளைத் தொடங்கிவிட்டதாக சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 3,374 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் இப்போது 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையில், கொரோனாவுக்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால், உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் புனியா சலிலா உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால்
சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால்
Ani

`இந்தியாவில் 274 மாவட்டங்கள் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இதுவரை 3,374 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 472 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் இதுவரை 76 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளையில் 267 பேர் குணமடைந்துள்ளனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்தியாவைப் பொறுத்தவரையில் கொரோனா இரட்டிப்பு விகிதம் தற்போது 4.1 நாள்களாக இருக்கிறது. தப்லிக் ஜமாத் மாநாடு காரணமாக புதிய நோயாளிகள் பதிவாகாமல் இருந்திருந்தால் இந்த விகிதம் 7.4 நாள்களாக இருந்திருக்கும். கையிருப்பில் இருந்த பாதுகாப்பு உபகரணங்கள் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கூடுதல் உபகரணங்கள் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால்
சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால்
Ani

பாதுகாப்பு உபகரணங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. இதனால் ஆரம்பத்தில் சில தட்டுப்பாடுகள் இருந்தது. ஆனால், ஜனவரி மாதமே இதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டது. உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களைத் தயாரிக்கும் பணிகளை தொடங்கிவிட்டனர். அதேவேளையில் எந்தெந்த நாடுகளில் இருந்து பாதுகாப்பு உபகரணங்கள் கிடைக்கிறதோ அதை வாங்கும் பணிகளும் நடந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாநிலங்களின் தேவையைப் பொறுத்தே இப்போது பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி வருகிறோம். அதை முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதேவேளையில் கொள்முதலை அதிகரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறோம். இது முக்கியப் பிரச்னைகளில் ஒன்றாக இருப்பதால் தலைமைச் செயலாளர்கள், சுகாதார செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம். எங்களுக்குக் கிடைக்கும் பாதுகாப்பு உபகரணங்களை மாநிலங்களில் தேவைக்களுக்கேற்ப உடனடியாக அனுப்பியதாக அவர்களுக்கு விளக்கியுள்ளோம்” என சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்தார்.

உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் புனியா சலிலா
உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் புனியா சலிலா
Ani

``ஊரடங்கு உத்தரவு வழிமுறைகளை மாநில அரசுகள் சரியாக பின்பற்றுகின்றன. அத்தியாவசியப் பொருள்கள் செல்வதில் எந்தச் சிக்கல்களும் இல்லை. அது திருப்திகரமாக இருக்கிறது. இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் 27,661 நிவாரண முகாம்களும் தங்குமிடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் தரப்பில் 23,924, தன்னார்வ அமைப்புகள் சார்பில் 3,737 நிவாரண முகாம்கள் மற்றும் தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் நாடு முழுவதும் 19,460 முகாம்களில் உணவு வழங்கப்படுகிறது. அரசாங்கம் தரப்பில் 9,951, தன்னார்வ அமைப்புகள் மூலம் 9,509 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 75 லட்சத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. 13.6 லட்சம் தொழிலாளர்களுக்கு அவர்கள் வேலை செய்யும் நிறுவனங்களால் தங்குமிடம் மற்றும் உணவு வழங்கப்படுகிறது” என உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் புனியா சலிலா தெரிவித்துள்ளார்.