Published:Updated:

ராமநாதபுரம்: 35 கடற்படை வீரர்களுக்குக் கொரோனா! -அதிர்ச்சியில் ஐ.என்.எஸ்

இந்தியக் கடற்படை விமானத்தளம்
இந்தியக் கடற்படை விமானத்தளம்

இந்தியக் கடற்படை விமானப்படை தளத்தில் பணியாற்றும் 35 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் பெருகிவரும் கொரோனா வைரஸ் தொற்று உச்சிப்புளியில் உள்ள இந்தியக் கடற்படை வீரர்கள் இடையேயும் பரவியுள்ளது. பாதுகாக்கப்பட்ட பகுதியில் உள்ள கடற்படை வீரர்களுக்குக் கொரோனா பரவியிருப்பது மாவட்ட மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியக் கடற்படை விமானத் தளம்
இந்தியக் கடற்படை விமானத் தளம்

கடலோர மாவட்டமாக உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிகளவில் ஏற்பட்டு வருகிறது. கொரோனா பரவலில் தொடக்க காலங்களான மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒற்றை இலக்கங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை இருந்துவந்தது. மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர் நடவடிக்கையினால் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சிலநாள்களாக இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது.

ராமநாதபுரம் அரசு மருத்துவமனை
ராமநாதபுரம் அரசு மருத்துவமனை

மண்டலங்களுக்கிடையே திறந்துவிடப்பட்ட பொது போக்குவரத்து, சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்குப் பயணித்தவர்கள், பொது இடங்களில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காத நிலை போன்றவற்றுடன் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினரின் கெடுபிடிகள் தளர்வினால் கொரோனா அதிகரித்தது.

தீவுப்பகுதியான ராமேஸ்வரம் பகுதியிலும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 10,063 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 352 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

`ஆகஸ்ட் மாதம் 12 -ம் தேதி வரை ரயில் சேவைகள் ரத்து!’ - ரயில்வே அறிவிப்பு #NowAtVikatan

இதனிடையே, கடந்த இரு நாள்களில் 168 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களில் இந்தியக் கடற்படை விமானப்படை தளத்தில் பணியாற்றும் 35 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே இந்தியக் கடற்படையின் 'ஐ.என்.எஸ் பருந்து' விமானத்தளம் உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்டோர் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் சிலர் உச்சிப்புளி மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் தனியார் வாடகை வீடுகளில் குடியிருந்து வருகின்றனர்.

இந்தியக் கடற்படை விமானத்தளம்
இந்தியக் கடற்படை விமானத்தளம்
உ.பாண்டி

கடும் கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டு வரும் ஐ.என்.எஸ் பருந்து விமானப் படைத்தளத்திற்குள் அங்கு பணிபுரிபவர்கள்கூட கடும் சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுவர். இந்நிலையில் அங்கு பணியாற்றும் கடற்படை வீரர்கள் 41 பேருக்குக் கொரோனா ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 35 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 500-ஐ கடந்துவிட்டது.

பாதுகாப்பு வளையத்தினுள் உள்ள கடற்படை விமானத் தளத்தில் பணியாற்றுபவர்களையும் கொரோனா தொற்று பாதித்திருப்பது மாவட்ட மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவுகிறது.

அடுத்த கட்டுரைக்கு